எனது அன்பிற்கினிய தீனுடைய சகோதர்களே !
அஸ்ஸலாமு அலைக்கும் [ வரஹ்மதுல்லாஹி வ பரக்கத்துஹூ ]
உலக இறுதி நாள் அண்மிக்கின்ற போது இவ்வுலகில் நிகழும் குழப்பங்களையும் ,சோதனைகளையும் பல்வேறு ஹதீஸ்களின் மூலம் தீர்க்கதரிசனமான முறையில் முன்னறிவிப்பு செய்த நபிகள் நாயகம் [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் என் உம்மத்தில் இறுதி காலத்தில் தோன்றும் சிலர் என் சமூதாயத்தின் முன்னோர்களை சபிப்பார்கள் எனஅறிவித்திருக்கிறார்கள்
நபிகள் நாயகம் [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் அறிவிப்பை உண்மைப்படுத்தும் முகமாக இஸ்லாமிய சமூதாயத்தின் வளர்ச்சிக்காக இறை திருப்தி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு தங்கள் உடலாலும் பொருளாலும் உள்ளத்தாலும் எழுத்தாலும் பல்வேறு தியாகங்களைச் செய்த மேன் மக்களான நாதாக்களை அவர்களின் சொல்,செயல், அனைத்தையும் குறை கண்டு விமர்சிக்கும் புல்லுருவிகள் பல்கி பெருகி விட்ட இக்காலகட்டத்தில் இறை நேசச் செல்வர்களான நாதாகளின் , ஸூஃபியாக்களின் , மாகன் களின் , ஆன்மிக வழிக்காட்டிகளின் கருத்துகள் , ஆன்மிக தகவல்கள் , வரலாறுகள் எடுத்து கூறும் ஓர் சிறந்த இணைய தளமாக விளங்கும்
இது வரை நீங்கள் கேட்க்காத , பார்க்காத ,பல தகவல்களை உங்களுக்கு இந்த இணைய தளத்தின் மூலம் சொல்ல இருக்கிறோம் !
அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கையின் அடிப்படையில் மக்கள் அடிபிறலாமல் இஸ்லாமிய மார்க்கத்தை பின் பற்றி நடக்க சில சேவைகளையும் நாம் நடத்திக் கொண்டு இருக்கிறோம் .
எங்களது பணிகள் தொய்வு இல்லாமல் நடை பெற உங்கள் துஆ தான் மூலக் காரணம் மறவாமல் துஆ செய்யுங்கள் !!!
நம் யாவரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்ட அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத்தின் சேர்த்து என்றென்றும் அருள் புரிவானாக .ஆமீன் ஆமீன் ஆமீன் ....
படிக்க படிக்க திகட்டாத ஆன்மிகத் தகவல்கள் , வரலாறுகள் , கருத்து புதையல்கள்
இதோ உங்களுக்காக ..................
உங்கள் பங்கும் இதில் சேர வேண்டும் என்றால் !!
No comments:
Post a Comment