Thursday, October 9, 2014

அரபிய தீப கற்பம் ஒரு பார்வை !!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் வ பரக்கத்துஹூ 


அரபிய தீப கற்பத்தின் பரப்பளவு 10.00.000 சதுர கிலோ மீட்டரிலிருந்து 130.00.000 சதுர கிலோ மீட்டர் வரையிலாகும்
அரபிய தீப கற்பம் ஒரு பார்வை !!!
அரபி : 
 என்ற சொல்லுக்கு பாலைவனம் ,பொட்டல் பூமி [ மரம் ,செடி,கொடிகள்,தண்ணீர் இல்லாதவறட்சியான நிலப் பரப்பு என பல அர்த்தங்கள் உள்ளன . 
அரபிய தீபகற்பத்தின் மேற்கே செங்கடலும் ,சைனா நாடும் கிழக்கே அரபிய வளை குடாவும் ,இராக்கில் சில பகுதிகளும் தெற்கே அரபிக்கடலும் [ இது இந்தியாவில் பெருங்கடல் ] வரை தொடர்கிறது வடக்கே ஷாம் , [ சிரியா ] மற்றும் இராக்கின் சில நகரங்களும் இருக்கின்றன.
இதன் பரப்பளவு = 10,00.000 ,சதுர கிலோ மீட்டரிலிருந்து . 130.00.000 , சதுர கிலோ மீட்டர் வரையிலாகும்.அரபிய தீப கற்பத்துக்குபுவியல் ரீதியாகவும் .அதன் இயற்கை அமைப்பாலும்மிகுந்த  முக்கியத்துவம் உண்டு , அதன் உட்புற எல்லைகள் நாலா திசைகளிலும் மணற்பாங்கான பாலைவனத்தால் சூழப்பட்டுள்ளது 
அரபியர் அல்லாத வெளி நாட்டவர்கள் தங்களது ஆதிக்கத்தை அந்நாட்டில் செலுத்துவதற்க்கு இப்புவியல் அமைப்பு பெரும் தடையாக இருந்தது. [ ரோம்-பாரசீகம் ] வல்லரசு நாடாக இருந்தும் அங்கு தங்களின் ஆதிக்கத்தை செலுத்த முட்இயவில்லை. அரபிய தீபகற்பத்தின் எல்லைகள் பெயர் பெற்ற பல கண்டங்களுக்கு நடுவில் அமைந்திருக்கின்றன அவை கடற் பரப்புகள் ,சமவெளிகள், மூலம் அந்த கண்டங்களுடன் இணைந்திருக்கின்றன .
அதன் வடமேற்க்குப்பகுதி ஆப்பிரிக்கா கண்டத்துடனும் , வடகிழக்குப் பகுதி ஐரோப்பா கண்டத்துடனும் கிழக்குப்பகுதி மத்திய ஆசியா ,தெற்க்கு ஆசியா . மற்றும் தூர கிழக்கு நாடுகளுடன் இணைந்துள்ளது.அவ்வாறே ஒவ்வொரு கண்டமும் கடல் மார்க்கமாக அரபிய தீபகற்ப்பத்துடன் இணைகிறது . அக்கண்டங்களிலிருந்து வரும் கப்பல்கள் அரபிய தீபகற்பத்தின் துறைமுகங்களில் தங்கி செல்கின்றன . 
[ அதாரம் = நூல் = அர்ரஹீக்  ]



No comments:

Post a Comment