நபிகள் நாயகம் [ ஸல் ] அவர்கள் குர்பானிக்கு தேர்ந்தெடுத்த ஆட்டு வகைகள் ::
நபிகள் கோமான் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்கள் கொம்புகள் உள்ள கொழுத்த ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள் [ அறிவிப்பாளர் = இப்னு உமர் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] [ நூல் = புகாரி ;5552]
குர்பானிக்காக பல் முளைத்த பிராணிகளையே அறுங்கள் அது உங்களுக்குக் கிடைக்க விட்டால் [ அப்போது மட்டும் ] மூன்று வயது செம்மறி ஆட்டை அறுங்கள் என்று நபிகள் கோமான் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்கள் .[ ஜாபீர் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] நூல் = முஸ்லிம் ]
நபிகள் கோமான் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்கள் கொம்புள்ள கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய ,கருப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய ,கருப்பு நிரத்தால் அமரக்கக் கூடிய [ அதாவது மூட்டுக்கால் ,கால் , கண் பகுதி கருப்பு நிற முடைய ] ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள் [ அறிவிப்பாளர் = ஆயிஷா [ ரலியல்லாஹூ அன்ஹா ] [ நூல் = முஸ்லிம் , அபூதாவூத் , அஹமது ]
மதீனாவில் குர்பானி பிராணிகளை நாங்கள் கொழுக்க வைப்போம் [ ஏனைய ] முஸ்லிம்களும் கொழுக்க வைப்பார்கள் [ அறிவிப்பாளர் = அபூ உமாம [ ரலியல்லாஹூ அன்ஹூ ] [ நூல் = புகாரி ]
No comments:
Post a Comment