![]() |
அஷ்ஷைகு உமர் வலி அப்பா [ரலி] |
அஷ்ஷைகு உமர் வலி [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களை பற்றிய வாழ்க்கைச் சுருக்கம் :
நமது ஷைகுனா உமர் [ ரலி ] அவர்கள் வலி அப்பா நாயகம் [ ரலியல்லாஹூ அன்ஹூ ]
- ஹிஜ்ரி = 1163
- ஈஸவி = 1751 பிறப்பு
- ஹிஜ்ரி = 1216
- ஈஸவி = 1804 பயணம்
நமது ஷைகுனா உமர் [ ரலி ] அவர்கள் வலி அப்பா நாயகம் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களின்
- தந்தையார் பெயர் அல் ஆலிமுல் பாழில் அப்துல் காதரில் குர்ஷிய்யில் பிக்ரிய்யி [ ரஹ் ] என்பதாகும் .
- தாயாரின் பெயர் ஃபாத்திமா [ ரஹ் ] என்பதாகும்
இவர்களின் முதலாம் கலீஃபா ஸய்யிதுனா அபூ பக்கர் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களின் பாரம் பரியத்தைச் சார்ந்த ஸித்திகியாவார்கள் மேலும் மத்ஹபில் -ஷாஃபீ மத்ஹபை சார்ந்தவர்களாகவும் தரீக்காவில் காதரீயாவை சார்ந்தவர்களாகும் கடும் சிரத்தையுடன் கல்வி கற்று தன்னிகரற்ற ஆலிம் பெருந்தகையாகத் திகழ்ந்தார்கள்
தமது ஆரம்ப உஸ்தாது நாயகமகிய காயல் பதியில் அடக்கப் பெற்றிருக்கும் பாலப்பா என்ற ஷேகு முஹம்மது நுஸ்கி காதரி [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களிடம் முதன் முதலாக ஞான தீட்சைப் பெற்றுவந்தார்கள்
புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற அவாவும் பெருமானார் [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்களின் புனித ரவ்ழாஷரிபை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலும் அவர்களின் இதையத்தில் உந்தியதால் .உடனடியாக புனித மக்கா , மதீனா , நோக்கிப் புறப்படும் சென்று ஹஜ் கடமையை நிறை வேற்றிவிட்டு புனித மதீனா மாநகர் வந்து நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ] அவர்களை ஸியாரத்தும் செய்து விட்டு இருக்கும் . போது புனித மதினாவைச் சார்ந்த அஸ்ஸய்யிது முஹ்ஸின் முகைபலி [ ரஹ்] என்ற ஞான சிகா மணியைச் சந்தித்து அவர்களிடம் பையத் பெற்றக் கொண்டதுடன் அவர்களிடமே சில காலம் தங்கி பல அகமிய ஞானங்களைப் பெற்றார்கள் மேலும் அவர்களின் ஷேஹ்கின் உத்தரவு படி புனித மாமதீனாவில் பல்கலைக் கழகத்தில் 5 ஆண்டு காலம் பேராசிரியராகப் பணி புரிந்து விட்டு அதன் பின் தாயகம் திரும்பினார்கள் .
அதன் பின் கண்ணனுரில் மறைந்து வாழும் ஞான மாமேதை ஷைகுனா ஸய்யிது முஹம்மது புகாரி ஜிப்ரி தங்கள் நாயகம் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களிடம் ஞானத் திட்சை பெற்று சிறந்தோங்கினார் கள்.மேலும் அவர்களின் உத்தரவின் படி ,மலேசியா அருகில் உள்ள அச்சக்கரை என்ற இடத்தில் அமைந்திருக்கும் .ஸாலிஹ் மலைக்குச் சென்று கடும் தவம் புரிந்தார்கள் அங்கு சில பெரியார்களின் தரிசனம் கிடைக்கப் பெற்றார்கள் ,காயல் பட்டிணம் வந்து ஸய்யிது மீரா உம்மாள் என்ற ஞான சிரோன் மணியை மணந்து 6 ஆண் மக்களையும் ஒரு பெண் மகளையும் ஈன்றெடுத்தார்கள்
அவர்களின் பிரசித்திப் பெற்றவர்கள் தான் அஹ்மதுல்லாஹ் பைத் மற்றும் பல மெஞ்ஞான கோர்வைகளை தந்தவர்களும் காயல் பட்டிணம் ,தைக்கா ஸாஹிப் வலி [ரலி ] அவர்களாகும் பொருளாதார மேம்பாட்டிற்க்காக சில காலம் இரத்தின வாணிபமும் செய்தார்கள் .மக்கள் எவரிடத்திலிருந்தும் எவ்வித பிரதிபலனையும் நாடாமல் புனித காதரிய்யா தரீக்காவின் பேரொளியை மக்கள் மனதில் நிலை நாட்டி வந்து நமது ஷைகுனா அவர்கள் ஹிஜ்ரி 1216 ம் ஆண்டு [ கிபி 1802 ] துல்கஃஅதா மாதம் 14 - ம் நாள் வெள்ளி கிழமை இரவு இஷா நேரத்தில் தமது 53 ம் வயதில் காயல் மாநகரில் வஃபாத்தாகி அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்
அவர்களின் புனித மஜார் ஷரீஃஃப் அமைந்திருக்கும் தைக்காவுக்கு அனுதினமும் மக்கள் கூட்டம் சென்று ஸியாராத் செய்து வருவதையும் இன்னும் தங்களின் நாட்டங்கள் நிறைவேற அவர்களிடம் துஆ செயிகிறார்கள் அதன் மூலம் அவர்களின் நாட்டம் நிறைவேரி வருகிறது என்பதை இன்னும் மக்கள் கண்கூடாக பார்த்தும் அனுபவித்தும் வருகிறார்கள் என்பது உண்மை .......
No comments:
Post a Comment