5000 ஆண்டுகளுக்கு முன்பு அரபு நாட்டில் ஒரு தியாகம் !!!
படைத்த இறைவனுக்காக எதனையும் அர்பணிக்கத்தயார் !!!!
சுய நலமில்லாத தியாகம் !!!
தியாகம் என்பது வார்த்தைகளால் அல்ல !!!
செயல்களால் ....!!!
5000 ஆண்டுகளுக்கு முன்பு அரபு நாட்டில் நடந்த மா பெரும் தியாகம். பல வருடங்களாக குழந்தையே இல்லாமல் தவமிருந்து , வயதான கால கட்டத்தில் ஒரு ஆண் மகனை அல்லாஹ் கொடுத்தான் அந்த ஆண் மகனை அல்லாஹ் விற்க்காக அறுத்து பலியிட வேண்டும் , என்று அல்லாஹ் கட்டளையிட்டான் நபி இப்ராஹிம் [ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் அந்த கட்டளையை நிறை வேற்றினார்கள். அந்த சம்வத்தை படிக்கின்ற பொழுது உருகாத மனமும் உருகிப் போகும் என்பது தின்னம் . படித்து படிப்பினை பெற வேண்டிய அந்த தியாகச் சம்பவம் .இதோ உங்கள் கவனத்திற்க்கு
இப்ராஹிம் [ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் தன்னுடைய மகன் இஸ்மாயீல் [ அலைஹி வ ஸல்லம் ]அவர்கள் பருவ வயதை அடைந்த பொழுது , மகனே ! உன்னை அறுத்துப் பலியிடுவதாக கனவு ஒன்றைக் கண்டேன் . அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் ? என்று கேட்டார்கள் . தன் மகனாக இருந்தாலும்,தந்தை, தன் மகன் விசயத்தில் அனுமதி பெற வேண்டும் என்பது . நமக்கெல்லாம் இது ஒரு பாடமாக அமைந்துள்ளது , இப்றாஹிம் [ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் தன்னுடைய மகனிடம் தன்னுடைய கனவைப் பற்றி கூறிய பின்பு அவரது பதிலுக்கா காத்திருந்தார்கள். தனது தந்தையின் கோரிக்கையைப் ப்ரிசீலிப்பதற்க்காக இஸ்மாயீல் [ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் சிறிது அவகாசம் கூட கேட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி கேட்க வில்லை. மாறாக ,நிலைமை தலை கீழாக மாறியது .
தனது தந்தையின் வேண்டு கோலைச் செவிமடுத்த அந்த மகன் கூறினார். உங்களுக்கு இறைவன் என்ன கட்டளையிட்டானோ அதனை நிறைவேற்ற தயாராகுங்கள் என்றார். இந்த சோதனைதான் ஒரு மனிதன் மீது இறைவன் சோதிக்கின்ற சோதனையின் உச்சக் கட்டப் பகுதி யாகும் . மேலும் அந்த தந்தையைப் பார்த்து தந்தையே ! பொறுமையாளர்களில் உள்ளவர்கர்களில் ஒருவனாக என்னைக் காண்பீர்கள் என்று கூறினார்கள் . இஸ்மாயீல் [ அலைஹி வ ஸல்லம் ] அவர்களின் இந்த பதில் நமக்கெல்லாம் பாடமாகவும் இருக்கின்றது . அந்த இளமை பருவத்திலும் இறைத்தூதரின் கனவுகள் கூட இறைத்தூதின் வெளிப்பாடுகள் தான் என்பதை அந்த மகன் புரிந்திருந்தார்.இறைவவனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் .என்று இறைவன் விரும்புகிறானோ ,அதை சூரா அல் காஃஃப் மற்றும் சூரா நூன் ஆகியயவற்றில் விளக்கமாக விளக்கியிருப்பது போல் இருக்க வேண்டும் . அதன் பின் தந்தையும் ,மகனும் மக்காவின் ஒதுக்குப் புற இடமாகிய மினாவை நோக்கிச் செல்கிறார்கள் .
அப்பொழுது ஷைத்தான் இவர்கள் இருவரையும் வழி கெடுக்க நாடி நீங்கள் வெறும் கனவுதனே கண்டிர்கள். கண்ட கனவிற்க்காக ஏன் ? உங்களது மகனைப் பலி கொடுக்க வேண்டும் ? என்றான் ஷைத்தான் , இப்றாஹிம் [ அலைஹி வ ஸல்லம் ] அவர்களை மட்டும் மல்ல இஸ்மாயீல் [ அலைஹி வ ஸல்லம் ] அவர்களையும் ,அவர்களது தாயார் அன்னை ஹாஜரா [ அலைஹி வ ஸல்லம் ] அவர்களையும் அந்த ஷைத்தான் வழி கெடுக்க நாடினான் ஷைதானின் இந்த வழி கெடுக்கும் முயற்சிக்கு பலியாகி விடாத இந்த மூவரும் தங்களது உறுதியான ஈமானை மெய்ப்பித்தார்கள் இந்த இடத்தில் தான் ஷைத்தானை கல்லால் அடித்து துரத்தினார்கள் . தந்தையும் மகனும் மினாவில் நின்று கொண்டு தங்களது சோதனையின் இறுதிக் கட்டத்தில் இருந்தார்கள் .தந்தை மகனைப் பலி கொடுக்கத் தயாராகினார்.
தந்தையைப் பார்த்து மகன் கூறினார். எனது தந்தையே ! என்னுடைய கால்களையும், கைகளையும் , கண்களையும் ,கயிற்றால் கட்டிக் கொள்ளுங்கள் .அதனால் நான் துள்ளுவதைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். மேலும் கூறினார்கள் ,கத்தியை நன்றாக தீட்டிக் கொள்ளுங்கள் ,மேலும் கத்தியை மிக வேகமாக என்னுடைய தொண்டைக் குழியில் பாய்ச்சுங்கள் .என்னுடைய இரத்தம் பீரிட்டு உங்களது உடை கறைபடுவதிலிருந்து பாது காத்துக் கொள்ளுங்கள் . அதன் மூலம் இறைவன் எனக்கு அளிக்க இருக்கின்ற அருட் கொடைகளில் குறைவு ஏற்பாடது , மற்றம் ஆடையில் இரத்தக்கறை எனது தாய்க்கு நோவினை கொடுக்காமலிருக்கும் .என்னுடைய இந்த சட்டையை அவர்களிடம் கொடுங்கள் அது அவர்களுக்கு அறுதலாக இருக்கும் என்றார்கள் , இதயத்தை கசிந்துருக்கச் செய்யும் அந்த உரையாடலைச் செவிமடுத்த அந்த தந்தை தன்னுடைய மகனே ! எனது இறைவனின் கட்டளைகயை நிறை வேற்றிக் கொள்வதற்க்கு நீ எவ்வளவு உதவிகரமாக இருந்து கொண்டிருக்கிறாய் என்று உணர்ச்சிப் பூர்வமாக கூறினார்.
தந்தைக்கும் மகனுக்கும் நடை பெற்ற வரலாற்றுப் படிப்பினை மிக்க அந்த உரையாடல் சோதனையின் பொழுது பொறுமை காக்க விரும்புகிறவர்களுக்கு மிகச் சிறந்த படிப்பினையாக அமைந்துள்ளது அந்தத் தந்தையும் , மகனும் வெளிப்படுத்திய தியாகத்தை இறைவன் தன்னுடைய திருமறையில் இவ்வாறு பதிவு செய்து வைத்திருக்கிறான் ;
ஆகவே , அவ்விருவரும் [ இறைவன் கட்டளைக்கு } முற்றிலும் வழிபட்டு [ இப்ராஹிம் ] அவர்கள் மகனைப் பலியிட முகம் குப்பறக் கிடத்தி பலியாவதற்க்கு தயாராகிறார் நபி இப்றாஹிம் [ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் இறைவனின் கட்டளையை நிறை வேற்ற கூர்மையான கத்தி கொண்டு மகனின் கழுத்தை அறுக்க முற்படுகிறார் :"" என்ன ஒரு தியாகம் எதற்கும் ஒப்பிட முடியாத மாபெரும் தியாகம் இங்குதான் அல்லாஹ்வின் மகிமை ஆரம்பமாகிறது நபியவர்கள் எவ்வள்வோ முயன்றும் தங்களுடைய அருமை மகனாரின் கழுத்தை அறுக்க முடியவில்லை ! கத்தியில் கூர்மை இல்லையோ என எண்ணி ஆத்திரத்தில் அக்கத்தியை தூக்கி எரிந்தார்கள் " என்ன அதிசயம் ! அக்கத்தியானது அருகிலிருந்த சிறு பாறையின் மீது பட்டு பாறை பிளந்து விட்டது ,
யா இப்றாஹிம் மெய்ப்படுத்தி விட்டீர் .இது ஒரு தெளிவான பெருஞ் சோதனையாகும்
ஆச்சரியத்தில் இப்றாஹிம் [ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் நின்று கொண்டிருந்த பொழுது இறைவனிடத்திலிருந்து " யா இப்றாஹிம் ! என்று அழைத்தோம் : திடமாக நீர் [ கண்ட ] கனவை மெய்ப் படுத்தினீர் . நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறு கூலி கொடுத் திருக்கின்றோம் . நிச்சயமாக இது தெளிவான ஒரு பெரும் சோதனையாகும் .ஆயினும் நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம் . [ அல்குர்ஆன் = 37 = 103,104 ] இஸ்மாயீல் [ அலைஹி வ ஸல்லம் ] அவர்களுக்குப் பகரமாக இறைவன் ஒரு ஆட்டை அறுத்துப் பலியிட அனுப்பி வைத்தான் வரக்கூடிய அத்தனை சந்ததினரும் அவர்களுடைய தியாகத்தைப் போற்றி நினைவிவு கூறும்படி கட்டளையிட்டிருக்கிறான் . இப்ராஹிம் [ அலைஹி வ ஸல்லம் ] இஸ்மாயீல் [ அலைஹி வ ஸல்லம் ] ஆகிய இருவர்களின் சுய நலமில்லாத தியாகம் என்பதை நாம் புறிய வேண்டும் அது மட்டும் மல்ல தியாகம் என்பது வெரும் வார்த்தைகளால் மட்டும் மல்ல மாறக செயல்களால் என்பதை நாம் புறிய வேண்டும் .
அல்லாஹ்வின் நல்ல அடியார்களுக்கு பல வழிகளில் சோதனகள் வரலாம் ! அதையெல்லாம் இப்றாஹிம் [ அலைஹி வ ஸல்லம் ] இஸ்மாயீல்[ அலைஹி வ ஸல்லம் ] அவர்களைப் போன்று பொறுமையாக இருந்து இறைவனிடம் இருந்து உத்வியை நாம் பெற வேண்டும் .இப்ராஹிம் [ அலைஹி வ ஸல்லம் ] இஸ்மாயீல் [ அலைஹி வ ஸல்லம் ] அவர்களுக்கு பல கட்டங்களாக சோதனை வந்த பொழுதும் அல்லாஹ்வின் மீது வைத்திருந்த [ தவக்கல் ] நம்பிக்கை மகத்தான வெற்றியை தந்தது , நமக்கு பல கட்டங்களில் , பல வழிகளில் சோதனைகள் வரும் பொழுதுதெல்லாம் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை வைத்தால் வெற்றி மேல் வெற்றி வந்து நம்மை ச் சேரும் . அல்லாஹ் நம் அனை வரையும் நல்லோர்கள் கூட்டத்தில் சேர்ப்பானாக ஆமீன் ஆமீன் ஆமீன் !!!
No comments:
Post a Comment