நபி இப்ராஹிம் [ அலை ] அவர்களின் தியாகம் தந்த படிப்பினைகள் என்ன!!
.jpg)
இந்த இடத்தில் ஒன்றை பதிய வைத்துக் கொள்ள வேண்டும் ஆடு ,,மாடு , ஒட்டகம் , போன்ற பிராணிகளை அற்த்துப் பலியிட்டால் மட்டும் போதாது , நமக்குள் உறைந்து கிடக்கும் ஆணவம் , அகம்பாவம் , பேராசை , போன்ற தீய குணங்களையும் கூண்டோடு அழித்து சாம்பலாக்கி விட வேண்டும் .என்பதைத்தான் இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது .
மனித இனம் ஒரே இனம் சாதி எனும் , உயர்வு ,தாழ்வு ஒழிய வேண்டும் . இதைக் கடமையாகவும் ,கொடுமையாகவும் கடைப் பிடிப்பவர்கள் அழிய வேண்டும் இறைவன் மனிதனில் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை ,அதன் படி தண்டனைக் கொடுப்பதில்லை ,மனிதனின் உள்ளத்தையே பார்க்கிறான் ,
ஒற்றுமை , சுதந்திரம் , சகோதரத்துவம் , மனிதனுக்குள் இருக்க வேண்டும் அவனே வெற்றி பெற்றவன் தியாக உணர்வை நினைவுகூறும் வண்ணம் புனித ஹஜ்ஜூப் பெரு நாளில் முஸ்லிம்களின் புனிதத்தலமான கஃபா எனும் இடத்தில் பல லட்சம் மக்கள் ஒரே இடத்தில் கூடி ஹஜ்ஜூக் கடமைகளை நிறை வேற்ற உலகம் முழுவதும் பல நாட்டைச் சேர்ந்த பல தரப்பட்ட மக்கள் வெள்ளையர் ,கருப்பர்,தாழ்ந்தவர், உயர்ந்தவர் , அரபியர் , அரபி அல்லாதோர், ஏழை , பணக்காரர் , அனைவரும் ஒரே இடத்தில் ஒரே விதமான " இஹ்ராம் " என்ற வெள்ளைத் துணியோடு " லப்பைக் லப்பைக் அல்லாஹூம்ம லப்பைக் "= பொருள் = அடி பணிந்தேன் , அடி பணிந்தேன் , ஒரே இறைவனுக்கு அடி பணிந்தேன் . என்று ஒரே கூரலில் கூறி ஹஜ் கடமையை நிறை வேற்றுகின்றனர் .
இது ஒன்றே குலம் ! ஒருவனே தேவன் ! என்ற அழகிய தமிழ் மந்திரத்தை நினைவூட்டுகிறது ! அந்த சொல் வடிவம் செயல் வடிவமானதை இங்கு பார்த்து மனம் மகிழலாம் .இந்த தியாகப் பெருநாளின் மனித குலம் ஒன்று பட்டு உண்மையுடன் வாழ நமக்கு நாமே ஒவ்வொருவரும் உறுதி மொழி எடுகத்துக் கொள்ள வேண்டும்
- இறைவனுக்காக எதனையும் எத்தருணத்திலும் அர்பணிக்கத் தயார் என்னும் உறுதிப் பாட்டை மேற்கொள்ள வேண்டும் !!!
No comments:
Post a Comment