Saturday, January 18, 2014

                  இறை நேசர்களிடம் உதவி தேடுவது  இணைவைத்தலா ?  

வஸீலாவை  பற்றிய சிறிய விளக்கம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்கதுஹூ    


ஸ்லாமிய மார்க்கத்தில் பரிசுத்தமான ஒரு பொருளை வைத்து  அல்லாஹூ தஆலா விடத்தில் உதவி தேடுவதற்க்கு வஸீலா என்று கூறப்படும்.   
வஸீலாஎன்பது:
  1.  நல்லஅமல்களையோ,
  2.  நல்லமனிதர்களையோ,
  3.  நல்லமனிதர்கள் சம்பந்தப்பட்ட பொருட்களையோ,
 றைவன் சமூகத்தில் முன்னிலைப்படுத்தி வைத்து அவர்களின் அல்லது அவைகளின் பொருட்டால் தனது நாட்டம் நிறைவேறுவதை ஆதரவைப்பதாகும்.
ஸ்லாமிய மார்க்கத்தில் இப்படி வஸீலா( உதவி )தேடுவது  அனுமதிக்கப்பட்டு இருக்கிறது இதனால் தான் இறைவன் குர்ஆனில் இப்படிக்  கூறுகிறான்

  •  يايها الذين امنوا اتقوا الله وابتغوا اليه الوسيلة و جاهدوا في سبيله لعلكم تفلحون (6:35)
 றை நம்பிக்கையாளர்களே ! அல்லாஹூவை அஞ்சிக் கொள்ளுங்கள்.இன்னும் அவனளவில் வஸீலாவை( நெருங்குவதை ) த் தேடுங்கள் மேலும் அவனுடைய பாதையில் போர் செய்யுங்கள்.நீங்கள் வெற்றி பெறலாம். ( 6 : 35 )
 நேரடியாக நீங்கள் வஸீலா (உதவி ) தேடிக்கொள்ளுங்கள் என்று அல்லாஹூ தஆலாவே சொன்னதற்க்கு பிறகு.அதை ஷிர்கு என்று சொல்லி இந்த நவீன வழிகேடர்கள் ( இறைவனால் இதயத்திலும்,செவியிலும்,முத்திரையிடப்பட்டவர்கள் )குழப்பவாதிகள் எந்த அளவு மடையர்கள் என்பது மட்டும்மல்லாமல்,இறைவனுக்கு முற்றிலும் மாறுசெய்தவர்களாக அகுவார்களா இல்லையா ?           
 நன்றாக சிந்தித்துப் பார்போமேயானால் : மேற் கூறப்பட்ட வசனத்தில் இறைவன் முதலாவதாக அல்லாஹூவை பயந்து கொள்ளுங்கள்,இரண்டாவதாக வஸீலாவை தேடிக் கொள்ளுங்கள் என்று இறைவன் கூறியிருக்கிறான்.இந்த இரு வார்த்தைகளுக்கும் மத்தியில் ஏதாவது ஒரு தொடர்பு இல்லாமல் இருக்காது இறைவன் கூறக்கூடிய ஒவ்வொரு வார்த்தைக்கும் மத்தியில் ஏதவாதுஒரு தொடர்ப்பு இருந்துக் கொண்டேதான் இருக்கும் இவ்விரண்டு வார்த்தைகளும் மத்தியில் உள்ள தொடர்பானது நபிமார்களை,இறை நேசர்களை,நம் மனதில் நினைத்து அவர்களை வஸீலாவாக ஆக்கி இறைவனிடத்தில் பிராத்திதால் அவர்களைப் போன்று நமக்கும் ( தக்குவா ) இறையச்சம்  ஏற்பட ஒரு வழிகோலாகும் என்ற உள்ளார்ந்த கருத்து அதில் புதைத்திருக்கிறது.
 இப்போது எங்கே போனது ஷிர்க் : 
இவ்வுலகத்தில் ஒவ்வொரு மனிதனுடை வாழ்க்கையும்.பிறருடை உதவியை நம்பித்தான் இறைவன் அமைத்திருக்கிறான்.ஆகவே மனிதன் பிறந்ததிலிருந்து மண்ணுக்கு போகும் வரை இறைவனல்லாதவர்களின் உதவியைக் கொண்டுதான் வாழுகிறான்.மருத்துவச்சியின் உதவியைக் கொண்டுதான் பிறந்தான்.பெற்றோரின் உதவியைக் கொண்டுத்தான் பரிபாலிக்கப்பட்டான்.டாக்டரின் உதவியைக் கொண்டுத்தான் சுகம் பெற்றான்.செல்வந்தார்களின் உதவியைக் கொண்டுத்தான் வாழ்க்கையை நடத்தினான்.ஆசிரியயரின்,ஷைகின் உதவியை கொண்டுத்தான் முஃமீன் ஆனான்.சொந்த பந்தங்களின் உதவியை கொண்டுத்தான் தன் இறப்பின் போது கலிமா சொன்னான்.முஸ்லிம் சகோதரர்க்களின் உதவியைக் கொண்டுத்தான் இறந்த பின் கப்றும்,குளிப்பும் இவனுக்கு கிடைத்தது.பின்பு அதே முஸ்லிம்களின் உதவியைக் கொண்டுத்தான் கப்ருக்கு சென்ற பின் இவனுக்கு நன்மையும் கிடைத்தது.
 இப்போது யார் எந்த வாயைக் கொண்டு இறைவனல்லாத வற்றிடம் உதவி தேடுவது ஷிர்க் கென்று சொல்ல முடியும் ?
 மேலே சொன்ன அனைத்தும் உதவிகளிலும் இறைவன் நமக்கு படிப்பினை கற்றுத்தருகிறான் .அது அவன் அல்லாஹ் ஒருவனை மட்டுமே ஹக்கீய்யான உதவியாளன் என எண்ண வேண்டும் ஒரு வேளை அடியார்களின் எவரேனும் உதவி செய்தாலும் கூட அதுவும் அல்லாஹ் வின் உதவியென்றே நம்பவேண்டும்.காரணம் படைப்புக்கள் அனைத்தும் இறைவனின் பணியளார்களாகவும்,இவ்வாறு நம்புவது தான் ஈமானாகும்.
 சந்தேகத்திற்கிடமின்றி இதை இப்படிப்புறிந்து கொள்ளுங்கள். மின்சாரம் வெளிச்சம் தருகிறது,காற்தாடியை சுற்றுக்கிறது,புகைவண்டியை இழுத்துச் செல்கிறது.இவை அனைத்தையும் மின்சாரக் கம்பி செய்யவில்லை.மாறாக மின்சாரம் செலுத்தப் படும் அதன் பவர் ஹவுஸில் வேலைகளாகும்.இந்த நிலையில் எவரேனும் நமக்கு உதவி செய்கிறாரெனில் அது அவரது சக்தியைக் கொண்டல்ல ! அவரது மனதில் இரக்கம் பிறக்கவில்லை எனில் அவர் நமக்கு எவ்வாறு உதவி செய்வார் ?
 ஆதலால் அந்த இரக்கமும்.சக்தியும் இறைவனின் தரப்பிலிருந்து அவருக்கு வழங்கப் படுவதால் ஹகீகிய்யான உதவியாளன் அல்லாஹ் ஒருவனே வேறு யாரும் இல்லை.எனவே நாம் இது பற்றி குர்ஆன்,ஹதீஸ்,ஆதாரங்களை வரிசைப் படுத்துகிறோம்.
 குறிப்பு : குர்ஆனை விளங்க வேண்டுமே ஆனால் ஈமானுடைய வெளிச்சத்தைக் கொண்டுதான் விளங்க முடியும். நஜ்துக் கொள்கை என்னும் கண்ணாடியை மாட்டிக் கொண்டு இருக்கும் வரை குர்ஆன்,ஹதீஸை எப்படி விளங்கும் ?  
 இந்த ஹதீஸை பாருங்கள் :
  • عن ابي هريرة ان العين لتدخل الرجل القبر ( رواه ابن ماجه
 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : கண் திருஷ்டி ஒருவனை கப்ரில் நூழைத்து விடும்  
 (அறிவிப்பவர் : அபூ ஹூரைரா ரலி நூல் : இப்னு மாஜா )
 இந்த ஹதீஸை கொஞ்சம் கவனமாக பாருங்கள் இதில் மிக பெரிய விளக்கம் இருக்கிறது !ஒரு சாதரன மனிதனுடைய தீய பார்வைக்கே ஒருவனை மௌத்தாக்கும் (மரணிக்கும்) சக்தி இருக்குமே ஆனால் ஏன் ? இறைநேசம் பெற்ற இறைநேசர்களின் அன்பு பார்வைக்கு அவன் வாழ்வை சீர்திருத்தம் பெற செய்யும் ஆற்றல் இருக்காதா ?
பூவுடன் சேர்ந்த நாறும் மணக்கும் :
 சுவனம் செல்ல கலிமா அவசியம்,வணக்கம் அவசியம்,கலிமாவுமில்லை ! அமலும்மில்லை ! அவ்வளவு ஏன் ? மனித இனமே இல்லாத  ஒரு நஜீஸான நாய் குகைவாசிகளின் நட்பால் சுவனம் செல்லும் அந்தஸ்தைப் பெறவில்லையா ? பூவுடன் சேர்ந்த நாறும் மணக்கும் என்பார்கள் ஆனால் இங்கு நாய் மணக்கிறது,நஜீஸ் மணக்கிறது தமிழில் இப்படி ஒரு பழமொழி உண்டு எவ்வள்வு கற்றாலும் நல்லோர்கள் தொடர்பு இல்லையெனில் கரை சேர முடியாது
 இந்த நாய்க்கு சுவன வாழ்க்கை எப்படி கிடைத்தது ? இந்த நாய் என்ன இறைவன் கடமையாக்கிய தொழுகை,நோன்பு,தானதருமம்,இது போன்ற நல்அமல்கள் செய்ததா ? அல்லது இறைவனைக் கொண்டு ஈமான் கொண்டதா ? அல்லது நபிமார்களுக்கு துனையாக இருந்ததா ? அப்படி எதுவும் இல்லையே ! அதற்க்கு இந்த அந்தஸ்து கிடைக்க காரணம் என்ன ? இறைநேசர்களை நேசித்ததின் காரணமாகத்தான் அந்த நாயிக்கு கிடைத்த பரிசுத்தான் சுவனம் .
ஒரு நாய்க்கே இப்படி பட்ட சிறப்பு என்றால் படைப்பினண்க்களிலே சிறந்த படைப்பான நாம் இறை நேசர்களை நேசித்தால் கிடைக்கும் வெகுமதி சுவனம் என்பதில் கடுகு அளவும் சந்தேகமே கிடையாது.ஐந்து அறிவான நாய்க்கே இறைவனிடத்தில் இறை நேசர்களின் அந்தஸ்த்து என்ன என்பதை தெருந்து இருக்கிறது.ஆனால் இந்த வழிகெட்ட குழப்பவாதிகளான அறு அறிவு படைக்கப்பட்ட நாய்களுக்கு அது தெரிய வில்லையே !
கேட்டுதான் பாருங்களே :    வழிகேடர்கள் அதாவது இப்னுதைமிய்யா முதல் இவ்வுலகில் தோன்றிய இயக்கங்கள்  அனைத்தும் நபிமார்களிடம்,வலிமார்களிடம் உதவி தேடுவது ஷிர்கு என்றும் மிகபெருய பாவமென்றும் கூறிக் கொண்டிருக்கிறார்களே ! அதற்க்குரிய காரணம் என்னவென்று இதுவரை அவர்களிடம் நீங்கள் கேட்ட துண்டா ? ஒருமுறை அவர்களிடம் கேடுத்தான் பாருங்கள் ! 
 நபிமார்களிடம்,வலிமார்களிடம் உதவி தேடக்கூடாதென்று ஏன் ? சொல்கிறார்கள் தெரியுமா ? நாம் உதவி தேடுபவர்களெல்லாம் இறந்து மண்ணோடு மண்ணாகமக்கிப் போய் விட்டார்கள் என்பதுதான் இவர்கள் தரும் விளக்கமும்,இவர்களால் செய்யப்படும் பிரச்சாரமும்.இவர்கள் கூற்றுக்கு ஆதாரம் எதவது இருக்கா என்று பார்த்தால் அது இவர்களின் சொந்த கருத்தாம் ! 
யார் சொல்வதை கேட்பது :
 அல்லாஹ் அல்லாதவர்களிடம் கேட்பது ஷிர்க் கென்று சொல்கிறார்கள் ? இவர்கள் சொல்வது சரியா ? அல்லது இறைவன் குர்ஆனில் கேட்கலாம் என்று சொல்லுகிறான் ? நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் மற்றவர் இடம் உதவி தேடலாம் என்று சொல்கிறார்கள் இது சரியா ?  என்பதை நீங்கள் முடிவு செய்வதுடன் இந்த வழிகேடர்களின் குள்ள நரித்தனமான மார்க்கப்பணியைக் கண்டு ஏமாந்து விட வேண்டாம் மென்று எச்சரிக்கிறோம்.
உங்கள் மனைவி,மக்களையும்,இவர்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.யார் இவர்களுடைய இயக்கங்களை ஆதரிக்கிறார்களோ,அவர்கள் எப்படியாவது திருந்தி வருவார்களென்று மட்டும் நினைக்காதீர்கள்.ஏன் என்றால் ?  நபிகள்கோமான் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கிறார்கள் :

  • سمعت رسول الله صلي الله عليه واله وسلم يقول يخرج في اخر الامة ولم يقل منها قوم تحقرون صلاتهم فيقرؤون القران لا يجاوز حلوقهم أو حناجرهم يمرقون من الدين مروق السهم من الرمية (رواه مسلم )
இறுதிக் காலத்தில் ஒரு கூட்டமொன்று வெளியாகும்.அவர்களின் தொழுகையை பார்க்கும் நீங்கள் உங்களின் தொழுகையை அற்பமாகக் கருதுவீர்கள்.இன்னும் அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்.அது அவர்களின் தொண்டைக் குழிக்குக் கிழே இறங்காது.அத்துடன் அவர்கள் வில்லில் இருந்து அம்பு வெளியாவதைப் போல மார்க்கத்தை விட்டும் வெளியேறிப் போய் விடுவார்கள் என்பதை அருமை நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லக் கேட்டேன் என்கிறார்கள் ஹழரத் அபூ ஸயீதுல் குத்ரி  ரலியால்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறினார்கள் 
( நூல் : முஸ்லிம் ஷரீஃப்,இக்மால்,பாகம்-3,பக்கம் -610 )
 இந்த ஹதீஸை பாருங்கள் பொதுவாக இஸ்லாதில் எவ்வளவு பெரிய பாவம் செய்தாலும் இறைவனிடத்தில் பாவமன்னிப்பு கேட்டால் அவருடைய பாவம் மன்னிக்கப்பட்டு முஸ்லிமாக வாய்ப்பு உண்டு,ஒருவர் காபிராக மாறிய பின்னாலும் அவர் கலிமா சொல்லி இஸ்லாத்தில் நூழையா வாய்ப்பு உண்டு , அதுமட்டுமா ? ஒரு காஃரே கலிமா சொன்னால் முஸ்லிமாகும் வாய்ப்பு இருக்கு ! ஆனால் இவர்கள் இஸ்லாத்தில் நூழையா வாய்பே இல்லை !!! அதனால் தான் இப்படி கூறினார்கள் என்பதை  நாம் விளங்கமுடிகிறது ..
இது வரை உலகத்தில் தோன்றிய வழிகேடர்களுடைய கூற்றைக் காணுங்கள் 
  • நபிமார்களையும்,வலிமார்களையும் அழைத்து உதவி தேடுவது ஷிர்க்கை உண்டக்கும் ( இப்னு தைமிய்யா : கிதாபுல் வஸீலா=பக்கம்=63 )
  • அல்லாஹ் அல்லாத வேறோருவரிடம் உதவி தேடுபவர் குஃப்ரை செய்து விட்டார்.( அப்துல் அஸீஸ் ஆலு சுவூத்=மஜ்மூஅத்துத் தவ்ஹீத்,பக்கம்=112 )
  •  நபிமார்கள்,வலிமார்கள் ஸாலிஹீன்கள்,ஷூஹதாக்கள்,போன்ற அனைவருமே சரிசமமானவர்களே.ஆனால் சிலர் சிலரை அழைத்து உதவி தேடுகின்றனர்.இது தவறாகும். (மௌதூதி, தஃப்ஹீமுல் குர்ஆன் =2:532,533,)
இங்கு ஒரு சிலதை மட்டும் சொல்லிவுள்ளேன் அனைத்தையும் சொல்ல வேண்டும் ஆனால் அதே ஒரு கட்டுரையாக வந்து விடும்.மேலே சொன்ன அனைத்தும் வழிகேடர்களின் கருத்தாகும்.இதில் இவர்கள் ஒவ்வொருவரும் அதைச் சொல்வதற்கென ஒரு பிரத்யேகமான பெயரையும்,இயக்கத்தையும்,தோற்று வித்துக் கொண்டுள்ளனர்.ஆக மொத்தத்தில் இவர்களனைவரும் அல்லாஹூ,ரஸூலுடைய மற்றும் வலிமார்களுடைய விரோதிகள் என்பதே எதார்த்தமாகும்.
 அனைத்து வழிகேடர்களும் சொன்ன விசையம் ஒன்றுதான் " இறைவனல்லாதவர்களிடம் உதவி தேடுவது ஷிர்கான விசையம் யார் அப்படி உதவி தேடினாலும் அவர்கள் காஃபிர்கள் தான் " சரி வாருங்கள் 
இனி இவர்களின் கூற்றுக்கள் அனைத்தும் பொய்யானதே என்பதற்க்கு நாம் குர்ஆன்,ஹதீஸ்களில் இருந்தே பதில் தருகிறோம்.

குர்ஆன் : ஆயத்துக்களை  பாருங்கள்


  •  يايهاالذين امنوا استعينوا بالصبروالصلوة ان الله مع الصبرين(١٥٣:٢)
 முஃமின்களே! நீங்கள் பொறுமையைக் கொண்டும்,தொழுகையை கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்.நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளருடன் இருக்கிறான். 
( அத்தியாயம் =2 , ஆயத்து = 153 )
  • நம்முடைய கேள்வி = இறைவன் அல்லாதவைகள் இடம் உதவி தேட கூடாது. என்று இருந்தால் இங்கு பொருமையைக் கொண்டும்,தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது .இதில் பொறுமையும்,தொழுகையும் ,இறைவனா ?இறைவனல்லாதவைகளாகும்.அப்போ இறைவன்  குர்ஆனில் ஷிர்கை செய்யும் படி நம் அனைவரையும் ஏவுகிறானா ? சிந்தியுங்கள் 
அடுத்து மற்றோரிடத்தில்...

  •  يايها الذين امنوا كونوا انصار الله كما قال عيسي ابن مريم للحواريّن من أنصاري الي الله قال الحواريون نحن انصار الله (٦١:١٤)
 ஈமான் கொண்டவர்களே ! மர்யமின் மகன் ஈஸா ( தம் ) சீடர்களை நோக்கி " அல்லாஹ்வுக்காக எனக்கு உதவுபவர் யார் என கேட்டபோது நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்கள் என்பதாக ஹவாரிய்யீங்கள் சொன்னார்கள்.
( அத்தியாயம் =61,ஆயத்து= 14 )
  •   நம்முடைய  கேள்வி :    தவ்ஹிதை போதிக்க வந்த  நபி ஈஸா அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு சமூகத்துடைய வழிகாட்டி நபி ஈஸா அலைஹி வஸல்லம் அவர்கள் யார் இடம் உதவி கேட்க வேண்டும் ? இறைவனிடம் ஆனால் நபி ஈஸா அலைஹி வஸல்லம் அவர்கள் யாரிடம் உதவி தேடினார்கள் இறைவன் இடத்திலா ? இல்லையே ! இறைவன் அல்லாதவர்களீடம் உதவி தேடினார்கள் அதனால் நபி ஈஸா அலைஹி வஸல்லம் அவர்களை காஃபிர் என்று சொல்லி வடலாமா ? (நவூதுபில்லாஹ் ) இறைவனுக்கு மாற்றம் செய்து விட்டார்களா ? சிந்தியுங்கள் !!!
அடுத்து மற்றோரிடத்தில்...

  • قال يايها الملؤا ايّكم يأتيني بعرشها قبل ان يأتوني مسلمين (٢٧:٣٨) 
பிரதானிகளே ! அவர்கள் வழிப்பட்டவர்களாக என்பால் வருவதற்கு முன்,உங்களில் எவர் அவளுடைய சிம்மாசனத்தை என்னிடம்கொண்டு வருபவர் ? என்று சுலைமான் அலைஹி வஸல்லம் கேட்டார் ( 27 :38 )
 நம்முடைய கேள்வி :   மனித இனத்தை சிற்படுத்துவதர்க்காக அனுப்பப்பட்டவர்கள் நபிமார்கள் அவர்கள் எந்த நிலையிலும் தவ்ஹிதை மக்கள் மத்தியில் போதிப்ப வர்கள் எதைகேட்டலும் இறைவனிடம் தான் கேட்டு பெர வேண்டும் என்றால் நபி சுலைமான் அலைஹி வஸல்லம் ஏன் இறைவனிடம் கேட்கவில்லை. அதர்க்காக இவரையும் காஃபிர் என்று சொல்லி விடலாமா ? ( நவூதுபில்லாஹ் ) சிந்தியுங்கள் !!!
அடுத்து மற்றோரிடத்தில்..

  • ان تنصروا الله ينصركم 

நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான் .
  நம்முடைய கேள்வி :   இறைவன் தேவையற்றவனாக இருந்தும் இவ்வசனத்தில் தன்னடியார்களிடம் உதவி தேடுகிறான். இறைவன் ஷிர்கை செய்ய ஏவுகிறானா ? அவ்வாறாயின் தேவையுடைய அடியார்களான நாம் நல்லடியார்களிடம் உதவி தேடுவதால் என்ன தவறு நேர்ந்து விடும் ? 
அடுத்து மற்றோரிடத்தில்..

  • فاعينوني بقوّةِ
உங்களின் பலத்தைக் கொண்டு எனக்கு உதவி செய்யுங்கள் ( 18 :95 )
நம்முடைய கேள்வி :  துல்கர்ணைன் அவர்கள் மக்களிடத்தில் உதவி தேடுகிறார்  இவறையும் காஃபீர் என்று சொல்லி விடலாமா ? ( நவூதுபில்லாஹ் ) 

அடுத்து மற்றோரிடத்தில்..

  • وتعاونوا علي البرّ والتقوي
இன்னும் நீங்கள் ஒருவர் மற்றவருக்கு நன்மையைக் கொண்டும்,பயபக்தியைக் கொண்டும் உதவி செய்யுங்கள் 
நம்முடைய கேள்வி :  நன்மை  , பயபக்தி ,கொண்டு உதவி செய்யுங்கள் என்றால் இவ்விரண்டும் இறைவனா ? சிந்தியுங்கள் !  
 இறைவன் அல்லாதவைகள் இடம் உதவி தேடக்கூடாது என்றால் !!! அப்போ தவ்ஹிதை முழுக்க முழுக்க  நிறைந்த இருக்கின்ற குர்ஆன்ஷரீஃப் ,ஷிர்க்கை போதிக்கிறதா ? குஃப்ரியத்தை போதிக்கிறதா ? வழிகேட்டை போதிக்கிறதா ? நன்றாக சிந்தித்து பாருங்கள் வழிகேடர்கள் கூற்று சரியா ? குர்ஆன் கூற்று சரியா ? 

ஹதீஸ்களை பாருங்கள் !!!!

  • اطلبوا الحوائج الي ذوي الرحمة من امتي
எனது ரஹ்மத்துடைய உம்மத்துக்கள் பால் உங்களை தேவைகளை தேடிக் கொள்ளுங்கள் என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.ரஹ்மத்துடைய உம்மத்துக்கள் என்பதன் கருத்து இறை நேசர்கள் தான் 
( ஷரஹூ ஜாமிவுல் ஸகிர் பாகம் -1)  
  • ان اراد عونا فليقل يا عبادالله اعينوني  يا عبادالله اعينوني  يا عبادالله اعينوني
( அல்லாஹ்வுடைய அடியார்களிடம் ) உதவி தேட வேண்டுமானால் அல்லாஹ்வின் அடியார்களே ! எனக்கு உதவி செய்யுங்கள்.அல்லாஹ்வின் அடியார்களே ! எனக்கு உதவி செய்யுங்கள்.அல்லாஹ்வின் அடியார்களே ! எனக்கு உதவி செய்யுங்கள்.எனக் கூறுவீர்களாக என்று கூறும் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள் 
அல்லாஹ்வின் அடியார்களே ! என்பது இறை நேசர்கள் ,மலக்குகள் , (ஃபத்ஹூல் ஹக் ,பக்கம் -71 ) 
  • اذا تحيرتم في الامور فاستعينوا باهل القبور
காரியங்களில் நீங்கள் திகைப்படைந்து விடுவீர்களேயாயின் கப்ருகளை உடையோரைக் கொண்டு உதவி தேடிக் கொள்ளுங்கள் என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்  
குறிப்பாகக் கப்ருகளை சுட்டிக் காட்டுகிறார்கள் பாருங்கள் அன்பர்களே ! கப்ருகள் உடையவர்கள் என்பது இறை நேசர்களே  ( மிர்காத் ,பக்கம் =408,தஃப்ஸிர் ரூஹூல் பயான்,பாகம்-5,பக்கம்=380 ,)
சுருக்கமாக சொன்னால் குர்ஆன் பல இடங்களில் இறைவனல்லாதவற்றிடம் உதவிகோருமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.ஏன் ! நபி தோழர்களில் ஒரு கூட்டத்தாருக்கு "அன்ஸார் " என்பது பெயர்.இதற்கு " உதவி செய்வோர் " என்பதுதான் அர்த்தம்.இனி இறைவனல்லாதவர்களிடம் உதவி தேடுதல் ஷிர்க்கெனில் இந்தப்பெயரே தவறாகும். ஆனால் இப்பெயரை நபிகள்  நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நபிதோழர்களில் ஒருக்கூட்டத்திற்க்கு சூட்டினார்.இன்னும் குர்ஆனும் அதே பெயரை கொண்டுதான் அவர்களைப் பற்றி பேசுகிறது .
இப்போ உங்களுக்கு உண்மை புரிகிறதா ? இவர்கள் யார் என்று ? இந்த வழிகேடர்களை பற்றி இறைவன் குர்ஆனில் கூறுகிறான் நீங்களே பாருங்கள் இவர்களின் லச்சனத்தை இவர்கள் யார் என்று உங்களுக்கே புரியும் !!! 
  • واذا قيل لهم امنوا كما امن الناس قلوا انؤمن كما امن السفهاء الا انهم هم السفهاء ولكن لا يعلمون (١٤:٢) 
(நல்ல) மனிதர்கள் ஈமான் கொண்டது போல் நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால்.மூடர்கள் ஈமான் கொண்டது போல் நாங்களுமா ஈமான் கொள்வோம் ? என்று அந்நயவஞ்சகர்கள் (முனாஃபிக்கள் ) கூறுகினர்.( முஃமிங்களே ) அறிந்து கொள்ளுங்கள் ! நிச்சயமாக அவர்கள்தாம் மூடர்கள்.எனினும்( தங்களின் மூடத்தனத்தை ) அவர்கள் அறிகிறார்களில்லை. ( 2 : 13 )
இவர்கள் முஸ்லிம் அல்ல! காஃபிரும் அல்ல! மாறாக இந்த குழப்பவாதிகள் அனைவரும் முனாஃபீகிங்கள் !!இவர்களை இனம்கண்டுகொள்ளுங்கள் .
இனிவாருங்கள் நாம் வஸீலாவை பற்றி நம்முடைய மேன்மக்கள் இடம் இருந்து கேட்டு தெரிந்து கொண்ட இன்னும் குர்ஆன்,ஹதீஸ் வாயிலாக எனக்கு கற்று கொடுக்கப்பட்ட செய்திகளை உங்களுக்கு ஞாபகம் உட்டுகிறேன் .
 நல்ல மனிதர்களை வஸீலாவாக்குவதற்க்குரிய ஆதாரங்கள் :
  • اوئك الذين يدعون يبتغون الي ربهم الوسيلة ايهم اقرب (١٧:٥٧)
  • قالمعني ينظرون ايهم اقرب فيتوسلون ( روح المعاني =٨, ص=٩٤ )
அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் தம்மில் இறை நெருக்கம் பெற்றவர்கள் யார் என்பதைக் கவனித்து அவரைக் கொண்டு வஸீலாவாக்கிய  நிலையில் இறைவனை வணங்குவார்களே அப்படி ப்பட்டவர்கள் ( இஸ்ரா 57=,ருஹூல் மஆனி பாகம் =8,பக்கம்=94 )
  • اللهم انصرنا علي الاعداء بحق عبادك الفقراء المهجرين  
இறைவா முஹாஜிர்களாகவும் ஏழைகளாகவும் இருக்கின்ற உனது அடியார்களின் பொருட்டினால் விரோதிகளுக்கு பாதகமாக எங்களுக்கு சாதகமாக உதவி செய்தருள்வாயாக என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள் ( மிஷ்காத் பக்கம்=447,மிர்காத் பாகம்=10,பக்கம்=13 )
உங்கள் சிந்தனைக்கு : இந்த துஆவை பாருங்கள் கேட்பவர்கள் யார் ? இந்த உலகத்தின் தலைவர் மட்டும் அல்ல.இந்த மார்க்கத்தின் போதகர் மட்டும் அல்ல.ரஸூல்மார்களுக்கும் ,நபிமார்களுக்கும் எல்லாம் தலைவர், ஏன் உலகத்தை படைக்க காரணமாக இருந்தவர் நம் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி இறைவனிடம் துஆ செய்துள்ளார்கள் யாரை வஸீலாவக வைத்து கேட்டுள்ளார்கள் என்பதை பாருங்கள் எதற்க்காக் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் துஆ செய்தார்கள் என்று தெரியுமா ! இந்த மாறி வழிகேடர்கள் வருவார்கள் என்பது தெரியும் அதனால் தான் இப்படி துஆ செய்தார்கள்.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நீனைத்து இருந்தால் தன் போர்டால் என்று கேட்டிருப்பார்கள் அப்படி கேட்டுருந்தால் இந்த வழிகேடர்கள் பார்திர்களா நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னைத்தான் வஸீலாவக வைத்து துஆ கேட்டார்களே தவிர மற்ற யாரையும் வஸீலாவக வைது கேக்கவில்லை என்று சொல்லுவார்கள் என்பதை புரிந்து கொண்ட நபிகள் கோமான் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்  அவர்கள் தன் ஸஹாபாளை வஸீலாவாக வைத்து துஆ செய்தார்கள் என்பது நமக்கு தெளிவாக தெரிகிரது. 
  • عن انس رضي الله عنه انّ عمر بن الخطاب رضي الله عنه كان اذا قحطوا استسقي بالعبّاس ابن عبدالمطلب فقال اللهم انّا كنّا نتوسّل اليك بنبينا فتسقينا وانّا نتوسّل اليك بعمّ نبينا فاسقنا فيسقوا ( رواه =البخار=باب الاستسقاء , ج=١ ,ص=١٣٧, مشكوة =١٣٢ )
பஞ்சம் ஏற்பட்டு விட்டால் நிச்சயமாக உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களைக்  கொண்டு மழை தேடுபவர்களாக ஆகியிருந்தார்கள்.அதாவது, இறைவா ! நிச்சய்மாக நாங்கள் எங்களின் நபியை உன்னளனவில் ( வஸீலாவாக ) உதவிச் சாதனமாக ஆக்கிப் பிரார்த்திப்பவர்களாக.ஆகியிருந்தோம்.நீ எங்களுக்கு மழை பொழியச் செய்திருக்கிராய்.மேலும் நிச்சயமாக நாங்கள் எங்கள் நபியின் சிறிய தப்பனாரைக் கொண்டு ( முன்னிலையாக்கி ) வஸீலாவாக்கி கேட்கிறோம்.மழை பொழியச் செய்வாயாக என்று கூறுவார்கள்.உடனே மழை பெய்து விடும் ( புகாரி,பாகம்=1, பக்கம்=137, மிஷ்காத்-132 )
 வஸீலாவில் சிறந்தது எது :  அமலை வஸீலாவாக ஆகலாம் அல்லவா ? எதற்க்கு மனிதரை வஸீலாவாக ஆக்கவேண்டும் என்று சில மடையர்கள் சொல்கிறார்கள் அல்லவா ? இப்போது உங்களிடம் ஒரு கேள்வி ? அமல் சிறந்ததா ? அல்லது அந்த அமலை செய்தவர் சிறந்தவரா ? நீங்கள் அமல்தான் சிறந்தது என்று சொன்னால் நாமும் தொழுகிறோம்,ஸஹாபாகளும் தொழுதார்கள்,ஏன் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் தொழுதார்கள்.ஆகமொத்தத்தில் எல்லோரும் தொழுததும் தொழுகைதான்.ஆனால் எல்லா தொழுகையும் ஒரே அந்தஸ்தில்லா இருக்கிறது சொல்லுங்கள் பார்ப்போம்.நம்முடைய தொழுகையை பற்றி நமக்கு தெரியாத என்ன ? இந்தஅமல்தான் சிறந்தது என்றால் நமக்கு ஏன் இறையச்சம் ஏற்ப்படவில்லை. நமக்கு ஏன் அந்த சிறப்பு கிடைக்க வில்லை. சற்று சிந்தியுங்கள் : அமல் சிறந்ததா என்று பார்த்தால் அந்த அமல் செய்த மனிதர் சிறந்தவராக இருப்பதினால் தான் அந்த அமல் சிறப்பு பெற்றது இல்லை என்றால் அந்த அமலுக்கு எந்த பயனும் இல்லை உதரணம் காட்டினால் உங்களுக்கு விளங்கும்-நாம் யார் ? முஸ்லீம்கள் நாம் செய்யும் சில அமல்களை இன்று நமக்கு மத்தியில் வாழ்கின்ற மற்றுமதத்தினர்களும் செய்கிரார்கள் நோன்பு,தொழுகை, இது போன்று அமல்களை செய்கிறார்கள் அதை நாம் கண்கூடாக பார்கிறோம். அமல்தான் சிறந்தது என்றால் இவர்கள் வைத்த அமல்கள் இவர்களை சுர்கத்தில் நூழையச்  செய்திடுமா ? இல்லவே இல்லை அமல் செய்யும் மனிதனை வைத்துதான் அந்த அமல் சிறப்பு பெருகிறது.
உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் யார் ? அவர்களின் சிறப்பு என்ன ? எனக்கு பின் நபி வருவதாக இருந்தால் அது உமரகத்தான் இருக்கும் .உமர் உடைய நாவில் அல்லாஹ் பேசுகிறான்.இப்படி சிறப்பு பெற்ற அவர்களே தன்னுடைய அமலை முற்படுத்தி துஆ செய்யவில்லை.ஆனால் துஆ செய்து இருக்களாம். ஏன் அப்படி செய்யவில்லை தன்னைவிட சிறந்தவர் ரஸூலுடைய சிரியதந்தை  இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களை முற்ப்படுத்தி துஆ செய்தார்கள்.என்பது நமக்கு மிக தெளிவாக தெரிகிறது.அன்பர்களே. 
  •  سمعت رسول الله صلي الله عليه وسلم يقول انّ خير التابعين رجل يقال له أويس وله والدة وكان به بياض فمروه فليستغفر لكم (رواه = مسلم ,مشكوة=٥٨٢)
 தாபிஈங்களில் சிறந்தவர் உவைஸ் என்ற மனிதராகும்.அவர்களிடமசென்று உங்களுக்காக பிழை பொறுக்கத் தேடிக் கொள்ளுங்கள் என்று  நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்களுக்குக் கூறினார்கள். ( முஸ்லிம் ,மிஷ்காத்=582 ) 
இந்த ஹதீஸை பாருங்கள் ஸஹாபாக்களை பார்த்து நீங்கள் தாபிஈன் ஆனா உவைஸ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களிடம் பிழை பொருக்க தேடுங்கள்.என்று சொல்வதுனால் ஒருவர் மற்றவறை வஸீலாவாக வைத்து கேக்கலாம் என்பதை நமக்கு தெளிவாக தெரிகிரது.
 மறைந்தவர்களை வஸீலாவாக்கலாமா ?
  • اللهم اغفر الامي فاطمة بنت اسد و وسّع عليها مدخلها بحقّ نبيك والانبياءالذين من قبلي ( رواه =الطبراني في الكبير والاوسط وابن حبان و حاكم ,نفس الرحمن ,ص=٩٣)
இறைவா ! உனது நபியின் பொருட்டாலும் எனக்கு முன்னால் உள்ள நபிமார்களின் பொருட்டாலும்,என் தாயார் ஃபாத்திமா பின்த் அஸத் அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களின் மண்ணறையை விசாலப்படுத்துவாயாக என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் துஆச் செய்தார்கள். ( தப்ரானி பாகம் =2, பக்கம்=22 ,கிதாபுல் ஜனாயிஸ் )
பொதுவாக நம்மவர்களிடம் ஒரு சந்தேகம் உள்ளது அது என்ன சந்தேகம் என்றால் உயிர் உள்ளவர்களிடம் கேட்டாள்  அவர்கள் நமக்கு உதவி செய்வார்கள் ஆனால் மரணித்தவர்கள் எப்படி உதவி செய்ய முடியும் என்ற சந்தேகம் இன்று நம்மில் அதிகமானோர்களிடம்  உள்ளது . 
மரணித்தவர்கள் பற்றி வழிகேடர்கலான வஹ்ஹாபிகள் கணிப்பு :  நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களையும், மற்ற ரஸூல்மார்களையும்,நபி மார்களையும்,ஸஹபாக்களையும்,இறை நேசர்களையும்,இவர்கள் அணைவரும் உயிருடன் உள்ளர்கள் என்று குர்ஆனும்,ஹதீஸூம் அனேகம் இருந்து கூட நம்மில் சிலர் என்ன நினைக்கின்றார்கள் என்றால் அவர்களேல்லாம் வஃபாத்தாகி அடக்கப்பட்ட சில காலத்திலேயே மண்ணோடு மண்ணாகி மக்கிப் போயிருப்பார்களே அப்படி இருக்கையில் அவர்களை நாம் வஸீலாவாக வைப்பதும்,அவர்கள்மீது ஸலவாத் ஓதுவதும் ஸலாம் கூறுவதும் அவர்களுக்கு எப்படி தெரியும் என்று சந்தேகம் கொள்கிறார்கள்.இப்படியேல்லாம் சந்தேகம் கொள்ளும் மக்கள் பிற்காலத்தில் வருவார்கள் என்பதை உணர்ந்த  ஸஹாபாக்கள் நமது சார்பிலேயே நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம்  அந்த  ஐயப்பாட்டை எடுத்து வைத்து அதற்குரிய விளக்கத்தையும் பெற்றுத் தந்துள்ளார்கள் என்பதை கீழ் வரும் நபி மொழிக் க்ருத்தின் மூலம் அறியலாம்.
மரணித்த பின்பும் நபிமார்கள் உயிருடன் இருக்கிறார்கள் ;
ஒரு முறை நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் ஸஹாபாப் பெரு மக்களிடம் வெள்ளிக்கிழமை மிகச் சிறந்த நாளாகும்.ஆகவே அந்த நாளில் என் மீது அதிகமாக ஸலவாத்தை ஓதுங்கள்.நீங்கள்  ஓதும் ஸலவாத்துக்கள் அனைத்தும் மலக்குகள் மூலம் என்னிடம் சமர்பிக்கப்ப்டுகின்றது என்றார்கள்.அப்போது நாங்கள் ஓதும் ஸலவாத்துக்கள் தாங்களுடைய ஜிவியத்தில் எடுத்துக்காட்டப்படுவது போன்றே தாங்கள் மறைவுக்குப் பிறகும் ( கப்ரிலும் ) எடுத்துக் காட்டப்படுமா ? என்று சில ஸஹாபாக்கள் கேட்டார்கள்.அதற்க்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவர் என் மீது ஸலவாத் ஓதினால் அவர் ஓதி முடிக்கின்றவரை அவருடைய ஸலவாத்துக்கள் ஒன்றுவிடாமல் என்னிடம் எடுத்துக்காட்டபடுகிறது என்று கூறியதுடன் 
 ان ّ الله حرّم علي الارض أن تأكل أجساد الانبياء فنبيّ الله حيّ ترزق (مشكوة=ص١٢١,باب الجمعة )
  நபிமார்கள் கப்ரில் ஹாயாத்துடன் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய உடம்பை மண் தின்னாது. அவர்கள் கப்ரில் சுவர்க்க உணவுகள் வழங்கப்படுகிறது என்று கூறினார்கள்.
( அபூதாவூத்=நஸயீ=இப்னுமாஜா=தாரமி=பைஹகீ=மிஷ்காத்=பக்கம்=120, பாபுல் ஜூம்ஆ )
الانبياء احياء في قبورهم يصلّون ( الجامع الصغير =٣٠٨٩ )
 நபிமார்களும் தாங்களின் கப்ரறைகளீல் தொழுது கொண்டிருக்கிறார்கள்..( ஜாமிஉஸ் ஸகீர் ஹதீஸ் எண்=3089 )
 و عن ابي هريرة رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه وسلم قد رأيتني في جماعةٍ من الانبياء و اذاً ابراهيم قائم يصلي ( مسلم=ج=١,ص=٩٦, كتاب الايمان ) 
   நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : நான் நபிமார்களின் கூட்டத்தில் இருக்க கண்டேன். அந்நேரம் இப்ராஹீம் நபியவர்கள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். ( முஸ்லீம் = பாகம்=1,பக்கம்=96, கிதாபுல் ஈமான் )
عن انس  رضي الله عنه انّ رسول الله صلي الله عليه وسلم قال مررت علي موسي ليلة أسري بي عند الكثيف الاحمر وهو قائم يصلي في قبره ( مسلم=ج=٢=ص=٢٦٨=كتاب الفضائل ) 
 நான் மிஃராஜ் சென்ற இரவில் கதீபுல் அஹ்மர் என்ற இடத்தில் நல்லடக்கமாகி இருக்கின்ற மூஸா அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ருக்கருகே சென்றேன்.அப்போது அவர்கள் தமது க்ப்ருக்குள்ளே தொழுது கொண்டிருப்பதைப் பார்த்தேன். ( முஸ்லீம்=பாகம்=2,பக்கம்=268 ,பாகம்=1,பக்கம்=97 )
இமாம் நவவி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் இந்த ஹதீஸூக்கு விளக்கம் கூறுகையில் ஷூஹதாக்களே ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள்.என்றும் அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது என்றும் குர்ஆன்ஷரீஃப் கூறும் போது அவர்களைவிட பன் மடங்கு ஏற்புடையவர்களான நபிமார்கள் தாங்களைவிட கப்ருகளில் ஹயாத்துடன் இருக்கிறார்கள் என்றும் தொழுகை ஹஜ் போன்ற கிரியைகளை நடத்தி வருகிறார்கள்.என்றும் கூறுவது தூரமான ஒன்றல்ல என்று கூறுகிறார்கள். ( ஷரஹ் முஸ்லீம் பாகம்=1,பக்கம் =94 , அத்தஅம்முல்=251 )
 மேலும் நபிமார்கள் இவ்வுலக வாழ்வை விட்டு மறைந்த பின்பும்  ஜீவியத்துடன் இருந்து வருகிறார்கள் என்பதற்கு மிராஃஜ் இரவில் நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து நபிமார்களையும் சந்தித்ததும் அவர்கள் அனைவருக்கும் இமாமாக நின்று தொழவைத்தும் போதுமான ஆதாரமாகும்.
 நபிமார்களின் உடலை மண் அரிக்காது 
பைத்துல் முகத்தஸ் என்ற புனித பள்ளியின் கட்டுமானப் பணியை ஜிங்கள் மூலம் செய்வித்துக் கொண்டிருந்த நபி சுலைமான் அஅலைஹி வஸல்லம் அவர்கள் அதே  நிலையில் மரணத்தைத் தழுவி ஓராண்டுக்குப் பின்னும் அவர்களின் உடம்பு எவ்வித மாற்ற்மோ நாற்றமோ ஏற்படாமல் இருந்தது .(அல்குர்ஆன் = 34=14 ) 
 நிச்சயமாக நபிமார்களின் மேனிகளை மண் தின்னாது.சிங்கம் புலி போன்றவைகளும் சாப்பிடாது .( அல்கஸாய்ஸுல் குப்ரா=பாகம்=2,பக்கம் =280 ) 
ஹஜரத் உஜைர் நபி அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்து  நூறு வருடங்கள் வரை அப்படியே இருந்தார்கள்  (அல்குர்ஆன்= 2=259 )
ஹஜரத் யூனுஸ் நபி அலைஹி வஸல்லம் அவர்களை மீன் விழுங்கிய பின்பும் சில காலம் வரை மீன் வயிற்றில் அப்படியே இருந்தார்கள். ( அல்குர்ஆன்=37=142,143 )
இறந்தவர்கள் குர்ஆன் ஓதுகிறார்கள் : 
 ஸஹாபாப்பெருமக்களில் ஒருவர் ஒரு கப்ரின் மீது அது கப்ரு என்று அறியாமல் கூடாரம் அமைத்துவிட்டார். கப்ருக்குள் ஒரு  மனிதர் சூரத்து தபாரக்கல்லதீ ஓதிக்கொண்டிருக்கும் விஷயம் பிறகு தான் வந்தது.இவ்விஷயத்தை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் அறிவித்த போது சுரத்துல் முல்க் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் மனிதனைக் காப்பற்றக்கூடியது என்று கூறினார்கள் ( திர்மீதீ,மிஷ்காத்= பக்கம்=187 )
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜ் சென்றிருந்த போது ஏழு வானங்களில் உள்ள நபிமார்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை வாழ்த்தினார்கள். 
 ( முஸ்லீம் பாகம் =1 ,பக்கம்=91 .பாபுல் இஸ்ரா ,மிஷ்காத் =527 ) 
இறைவன் வகுத்த விதி சம்பந்தமாக ஆதம் நபி அலைஹி வஸல்லம் அவர்களும் மூஸா அலைஹி வஸல்லம் அவர்களும் விவாதித்து இறுதியாக ஆதம் நபி அலைஹி வஸல்லம் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்று பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள் 
( புகாரி= பாகம்= 1 .பக்கம் =484 , மிஷ்காத்=19 ) 
இறந்தவர்கள் நம் செயல்களைப் பார்க்கிறார்கள் 
முஃமிங்களே அமல் செய்யுங்கள் .ஏனெனில் உங்களுடைய செயல்களை அவனுடைய ரஸூலும் முஃமிங்களும் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள் என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் நீங்கள் அவர்களிடம் கூறுங்கள், ( தவ்பா=106 )
மரணித்தவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்கிறார்கள் ; اذا ولي احدكم اخاه فليحسن كفنه فانهم يتزاورون في قبورهم ( ترمذي ,ابن ماجه ا )
இறந்தவர்களுக்கு நல்ல முறையில் கஃபன் உடுத்தாட்டுங்கள். ஏனெனில் அவர்களுடைய கப்ருகளில் அவர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். ( திர்மிதி ,இப்னுமாஜா ) 
மரணித்தவர்களால் நமக்குப் பயனிருக்கிறதா ?
  1. فمررت علي فقال بما امرت قلت امرت بخمسين صلوة كل يوم قال انّ امتك لا تستطيع  بخمسين صلوة كل يوم واني والله قد جرّبت الناس قبلك وعالجت بني اسراءل اشدّ المعالجة فارجع الي ربك فسأله التخفيف لأمتك فرجعت فوضع عني عشرا (متفق عليه ,مشكوة=ص=٥٢٨, باب المعراج)  
  1. நபி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜ் சென்றிருந்து போது அல்லாஹ்வினால் நமக்குக் கடமையாக்கப்பட்ட ஐம்பது நேரத் தொழுகையை ஐந்து  நேரத் தொழுக்கையாக இலகுவாக்கி இறைவன் சுருக்கி வசதியாக்கித் தருவதற்கு வழிவகை செய்தவர்கள் மூஸா அலைஹி வஸல்லம் அவர்கள்தான் என்று ஹதீஸில் வருகிறது.
நம்முடைய கேள்வி : நம்மீது விதியாக்கப்பட்ட ஐம்பது நேரத் தொழுகையை ஐந்து நேரத்  தொழுகையாக மூஸா அலைஹி வஸல்லம் அவர்கள்தான் ஆக்கித்தந்தனர் எனக்கூறும் ஹதீஸூக்கு என்ன பதில் தரப்போறார்கள் வழிகேடர்கள் 
2= அதே மிஃராஜ் இரவில்  நபி இப்ராஹீம் அலைஹி வஸல்லம் அவர்கள் நமது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் நமக்கு ஸலாம் சொல்லிவிட்டதுடன் சுவர்கம் என்பது மணமனா மண்ணும் இதமான நீர் சுவைகள் நிறைந்த நிலப்பரப்புமாகும்,நாம் ஓதுகிற சுப்ஹானல்லாஹ் , அல்ஹம்துலில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹூ அல்லாஹூ அக்பர், என்ற திக்ருகள்தான் நாளை மறுமையில் சுவனத்தின் சோலைகளாக ஆகி  நமக்குப் பயன் அளிக்கும் என்று கூறி அனுப்பினார்கள் ( திர்மீதி,மிஷ்காத்202,பாபு தவாபித் தஸ்பிஹி )
 நம்முடைய கேள்வி : மரணமடைந்தவரால் எதுவுமே செய்ய முடியாதென்று சொல்லப்படுவதைக் கொண்டு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களால் நமக்காக பிரார்த்திக்க முடியாதெனில் நபி மூஸா ,இப்ராஹீம் ,அலைஹி வஸல்லம் அவர்களால் மட்டும் எப்படி முடிந்தது ? 
3=قال الني صلي الله عليه وسلم انّ اعمالكم تعرض علي اقربائكم وعشائركم في قبورهم فإن كان خيرا استبشروا به و ان كان غير ذلك قالوا اللهم الهمهم  ان يعملوا بطاعتك ( ابو داود=فقه السنة , ص=٥٤٦, باب ارواح الميت قد يعلم ما في الاحياء ) 
நிச்சயமாக உங்களுடைய அமல்களை ( செயல்களை ) மரணித்து விட்ட உங்களின் உறவினர்களிடத்திலும் சொந்தக்காரர்களிடத்திலும் ( அவர்களின் கப்ருகளில் ) எடுத்துக் காண்பிக்கப் படுகிறது .நல்ல அமல்களாக இருந்தால் அதைக்கண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள் .தீய செயல்களாக இருந்தால் இறைவா ! உனக்கு கட்டுப்பட்டு நல்லமல் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தை அவர்களின் இதயங்களில் உதிப்பாக்கி வைப்பாயாக என்று பிரார்த்திக்கிறார்கள் என்று ( அபூதாவூத்= அஹ்மது= இப்னு கஸீர்=பாகம் =2 ,பக்கம்= 387, )
ولو أنهم اذ ظلموا انفسهم جاؤوك فاستغفروا الله و استغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما ( ٦٤=٤)
அவர்கள்  எவரும்  தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டும்,உம்மிடம் வந்து  அல்லாஹ்வின் மன்னிப்பைக் கோரி அவர்களுக்காக ( அல்லாஹ்வின் ) தூதராகிய (நீரும்) மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் கண்டிருப்பார்கள் ( 4=64 )
பார்தீர்களா ? தனது ஆன்மாக்களுக்கு தீங்கிழைத்தோர் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சன்னிதானத்திற்க்கு  வருகைதந்து அவர்களை பொருட்டாக்கி பாவமன்னிப்புத் தேட வேண்டும் மென திருமறை கூறுகிறது.  நாம் மேலே சுட்டிக்காட்டிய வசனம் நபியவர்களின் ஜீவீயத்திலும் சரி மறைவுக்குப் பின்னாலும் சரி. இரு காலத்துக்கும் பொருந்துமென நாமகச் சொல்லவில்லை.மாறாக குர்ஆனின் விரிவுரைகளை புரட்டிப் பார்த்தோருக்கு இது நமது கருத்தல்ல என்பது நன்கு விளங்கும்.குர்ஆனின் விரிவுரையாளர்கள் அந்த வசனம் இரு காலத்திற்க்கும் பொருந்தும் என்னும் நம்பிக்கையுடையவர்களாக இருப்பதால் தான் அந்த வசனம் அடுத்து ஒரு சம்பவத்தை கூறிக்கின்றனர்.
இந்த சம்பவத்தை குறிப்பிடுவோரில் அஷ்ஷெய்கு அபுன் நஸ்ர் அஸ்ஸப்பாக்  என்பாரும் ஒருவர் இவர் உத்பீ என்பவர் சொன்னதாக இதனை தமது நூலில் பதிவு செய்துள்ளார். அதாவது உத்பீ செல்கிறார்: நான் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின்  ரௌழா ஷரீபுக்கருகே அமர்ந்து இருந்தேன் அப்போது அங்கே வருகை தந்த அரபி ஒருவர் தனது ஆன்மாவுக்கு தீங்கிழைத்து கொண்ட வராக ....(4=64 ) என்ற வசனத்தை ஓதி. நபியே நாயகமே நான் உங்களிடம் எனது பாவங்கள் மன்னிக்கப்படுவதர்க்காக வந்துள்ளேன். நாயகமே எனது பாவம் மன்னிக்கப்படுவதற்க்காக பிரார்த்திக்க வந்துள்ளேன் என்றார்....இச்சம்பவம் நடந்து முடியும்போது நான் கண்ணயர்ந்து விட்டேன் அப்போது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் கண்டேன் நபியவர்கள் என்னை நோக்கி உத்பியே அந்த அரபியின் பாவங்கள் அல்லாஹூ மன்னித்து விட்டான் என்று நற்செய்தியை அவரைப் பார்த்து சொல்லும் எனக்கூறி விட்டு சென்றார்கள் .  ( இப்னு கஸிர் ) 
அல்லாஹூவின் நல்லடியர்களே வழிகேடர்களின் போலி கூச்சல்களை நம்பி  நாம் ஈமானை இழக்க வேண்டாம் இவைகள் மட்டும்தான் வஸீலா சம்மந்தமான ஆயத்துகள்,ஹதீஸுகள் என்று நீங்கள் நினைக்க வேண்டாம் இன்னும் ஏரலாம் ஏரலாம் இருக்கிறது அன்பார்ந்த அல்லாஹூவின் நல்லடியார்களே சிந்தியுங்கள் ====.நம்முடைய அடுத்த வெளியிடு இன்ஷா அல்லாஹ் =

 விரைவில்  வஸீலா & இஸ்தீகாஸா பற்றிய விளக்கம் ? ? 

             

8 comments:

  1. இறந்தவரகளிடம் உதவி தேடக்கூடாது என்று நாம் கூறும் பொழுது  /// இவ்வுலகத்தில் ஒவ்வொரு மனிதனுடை வாழ்க்கையும்.பிறருடை உதவியை நம்பித்தான் இறைவன் அமைத்திருக்கிறான்.ஆகவே மனிதன் பிறந்ததிலிருந்து மண்ணுக்கு போகும் வரை இறைவனல்லாதவர்களின் உதவியைக் கொண்டுதான் வாழுகிறான்.மருத்துவச்சியின் உதவியைக் கொண்டுதான் பிறந்தான்.பெற்றோரின் உதவியைக் கொண்டுத்தான் பரிபாலிக்கப்பட்டான்.டாக்டரின் உதவியைக் கொண்டுத்தான் சுகம் பெற்றான்.செல்வந்தார்களின் உதவியைக் கொண்டுத்தான் வாழ்க்கையை நடத்தினான்..!!!! ///    என்று கப்ர் பக்தர்கள் ஒரு கேள்வியை கேட்பார்கள்

    உன்னையே வணங்குகிறோம்' என்ற உறுதிமொழியைத் தொடர்ந்து உன்னிடமே உதவி தேடுகிறோம்'
    (வஇய்யாக நஸ்தயீன்) என்று மற்றொரு உறுதிமொழி எடுக்குமாறும் அல்லாஹ் நமக்குப் போதிக்கின்றான். அதனையும் ஐயத்திற்கிடமின்றி விளங்குவது அவசியமாகும். ஏனெனில் சில அறிவீனர்கள் இந்த உறுதிமொழியைக் கேலிக் கூத்தாகச் சித்தரித்து பலதெய்வ வணக்கத்தை நியாயப்படுத்த முனைந்திருக்கிறார்கள்.

    அல்லாஹ் தன்னிடம் மட்டுமே உதவி தேடும்படி நமக்குக் கற்றுத் தருகிறான். ஆனால் நமதுவாழ்க் கையில் பல்வேறு தேவைகளை நம்மைப் போன்ற மனிதர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இவ்வாறு கேட்காத மனிதன் எவனுமே இல்லை. மற்ற மனிதர்களின்உதவியின்றி மனிதனால் இந்த உலகில் வாழ்வது கூட சாத்தியமாகாது. நபிகள் நாயகம் صلى الله عليه وسلمஉட்பட மாந்தர் அனைவருமே, பிற மனிதர்களிடம் உதவி தேடியே இருக்கிறார்கள்.

    அப்படியானால் உன்னிடமே உதவி தேடுகிறோம்'' என்பது செயல்படுத்த முடியாததாகவே உள்ளது. இறைவனல்லாத மற்றவர்களிடம் உதவி தேடுவது பாவம் என்றால் எந்த மனிதனும் இந்தப் பாவத்தைச் செய்யாமலில்லை. இப்படிப் போகிறது அந்த அறிவீனர்களின் சிந்தனை. இத்துடன்இவர்கள் நிறுத்திக் கொண்டார்களில்லை. ஒரு மனிதன் பிறரது உதவியின்றி வாழ முடியாது எனும் போது, இறந்து போய் விட்ட நல்லடியார்களிடம் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? என்று விரிகிறது இவர்களது சிந்தனை. இதன் காரணமாகவே இது பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் அறிந்து கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம்.

    உன்னிடமே உதவி தேடுகிறோம்'' என்பதன் சரியான பொருளை திருக்குர்ஆனின் மற்றொரு வசனம் நமக்கு விளக்குகின்றது.

    நன்மையான காரியங்களிலும் இறையச்சத்தை ஏற்படுத்தும் காரியங்களிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்!''' (அல்குர்ஆன் 5:2) என்பதே அந்த வசனம்.

    இந்த வசனத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதை அல்லாஹ் அனுமதிக்கின்றான். வலியுறுத்தவும் செய்கிறான்.

    இறைவனே இவ்வாறு உதவிக் கொள்வதை அனுமதிப்பதால், உன்னிடமே உதவி தேடுகிறோம்'' என்பது ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக் கொள்வதையும் மனிதர்களை மனித நிலையில் வைத்து உதவி தேடுவதையும் மறுக்கும் விதத்தில் அருளப்படவில்லை என்பது தெளிவு. மாறாக மனிதனைஇறைவனது அம்சம் பொருந்தியவனாகக் கருதும் விதமாக உதவி தேடுவதை மட்டுமே இந்த வசனம்மறுக்கின்றது.

    இறந்து போன நல்லடியார் ஒருவரை ஒருவன் அழைத்து உதவி தேடும் போது அவர் இறைவனது அம்சம் கொண்டவராக நம்பப்படுகிறார். உயிருடன் உள்ள ஒரு மனிதரிடம் கேட்கப்படும் சாதாரண உதவிகள் இத்தகைய நிலையில் இல்லை. எப்படி என்று விளக்கமாக க்காண்போம்.

    ஒருவன் இறந்தவரிடம் தமது நோயைக் குணப்படுத்துமாறு வேண்டுகிறான். மற்றொருவன் ஒரு மருத்துவரிடம் சென்று தனது நோயைக் குணப்படுத்துமாறு கேட்கிறான். இரண்டும்
    மேலோட்டமாகப் பார்க்கும் போது ஒரே மாதிரியாகத் தென்பட்டாலும், இரண்டுக்குமிடையே வித்தியாசங்கள் உள்ளன.
    தொடரும் ......

    ReplyDelete
  2. தொடர்ச்சி .........
    ''முதல் வித்தியாசம்''

    மருத்துவரை அணுகுபவன் மருத்துவரைத் தனது கண்களால் நேரடியாகப் பார்க்கிறான். மருத்துவரும் இவனை நேரடியாகப் பார்க்கிறார்.

    இறந்து போனவரை அணுகுபவன், அவரைத் தன் கண்களால் காண்பதில்லை. அல்லாஹ் எப்படி மறைவாகஇருந்து கொண்டு கண்காணித்துக் கொண்டிருக்கிறானோ அது போல் இந்தப் பெரியாரும் தன்னைக்கண்காணிக்கிறார் என்ற நம்பிக்கை இருப்பதாலேயே அவரை அழைக்கிறான். மறைவாக இருந்துகொண்டு அனைத்தையும் கண்காணிக்கும் இறைவனது தன்மையை இறந்து போனவக்கும் இவன் அளித்துவிடுகிறான். மருத்துவரிடம் தேடும் உதவிகள் இப்படி அமைந்திருக்கவில்லை.

    ''இரண்டாவது வித்தியாசம்''

    மருத்துவரை அணுகும் போது, இந்த மருத்துவர் தன்னால் இயன்ற அளவு நோய் தீர்க்க முயற்சிக்கிறார். அவர் எவ்வளவு தான் சிறப்பாக மருத்துவம் செய்தாலும் அந்த மருத்துவம் பயனளிக்காமலும் போகலாம். இந்த மருத்துவர் குணமளிக்க வேண்டும் என்று நாடிவிட்டால் அது நடந்து தான் ஆகும் என்பது கிடையாது என்ற நம்பிக்கையிலேயே மருத்துவரை அணுகுகின்றான்.

    இறந்து போன நல்லடியாரை அணுகக் கூடியவனின் நம்பிக்கை இப்படி இல்லை. இந்தப் பெரியார் மாத்திரம் நமக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டால் நிச்சயமாக நமது நோய் நீங்கிவிடும். இவர் நினைத்தால் அது நடக்காமல் போகாது'' என்ற நம்பிக்கை தான் இவனிடம் உள்ளது. அதாவது பலவீனத்திற்கு அப்பாற்பட்டவராகவும், அனைத்துக் காரியங்களின் மீதும் ஆற்றல் பெற்றவராகவும் இவர் கருதப்படுகிறார்.

    ''மூன்றாவது வித்தியாசம்''

    ஒரு மருத்துவரை அணுகும் போது இந்த மருத்துவர் ஒரு சமயத்தில் ஒருவரது பேச்சையே கேட்க முடியும். ஒரு சமயத்தில் பலபேர் தங்கள் நோய்கள் பற்றி முறையிட்டால் இவரால் எதையுமே கேட்க முடியாது'' என்ற நம்பிக்கையில் தான் அணுகுகிறோம்.

    இறந்து போன நல்லடியார் ஒருவரை அணுகும் போது, இவன் உதவி தேடும் அதே சமயத்தில் இன்னும் பலரும் அவரிடம் உதவி தேடுவார்கள். உலகின் பல பகுதிகளிலிருந்தும் பலரும் அவரை அழைப்பார்கள் என்பதைத் தெரிந்து கொண்டே அவரை அணுகுகின்றான். அதாவது
    எங்கிருந்து அழைத்தாலும் எத்தனை பேர் அழைத்தாலும் இந்தப் பெரியார் கேட்கிறார்''
    என்ற நம்பிக்கை இருப்பதாலேயே அழைக்கிறான். இந்தத் தன்மை இறைவனுக்கு மாத்திரம் சொந்தமான தனித்தன்மையாகும்.

    மருத்துவரின் கேட்கும் ஆற்றல் தன்னுடைய ஆற்றல் போன்றது தான் என்று நம்புகிறான். இறந்து போனவரின் கேட்கும் திறனோ இறைவனது கேட்கும் திறனுக்கு நிகரானது என்று நம்புகிறான்.

    ''நான்காவது வித்தியாசம்''

    மருத்துவருக்கு மருத்துவ ஆற்றல் இருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அல்லாஹ் மனிதனுக்கு இத்தகைய ஆற்றல்களை வழங்கியுள்ளான் என்பதற்குச் சான்றும் உள்ளது.

    இறந்தவரிடம் இத்தகைய ஆற்றல் இருப்பதை நாம் காண்பதில்லை. இறந்த பின் அவரிடம் இத்தகைய ஆற்றல் இருக்கும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. இன்னும் சொல்வதென்றால், உயிரோடு இருந்த போது அவரிடம் இருந்த ஆற்றல்களும் கூட இறந்த பின் இல்லாது போய் விடுகின்றது. அதற்குத் தான் சான்றுகள் உள்ளன.

    ''ஐந்தாவது வித்தியாசம்''

    மருத்துவர், மருத்துவம் செய்யும் போது அதற்குரிய மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், ஆயுதங்கள் போன்ற சாதனங்களின் துணையுடன் செய்கிறார். அதை நாம் காணவும் செய்கிறோம்.
    ஆனால் இறந்தவரோ இப்படி சாதனங்கள் எதனையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியால் குணப்படுத்துவதாக நம்பப்படுகிறது. அதாவது அல்லாஹ் உதவி செய்வது போலவே, இறந்தவரும் உதவி செய்வதாக இவன் நம்புகிறான்.
    உதாரணத்துக்காகத் தான் மருத்துவரிடம் உதவி தேடுவதைப் பற்றிக்
    குறிப்பிட்டுள்ளோம். ஒரு அமைச்சரிடமோ, அதிகாரியிடமோ, தொழிலதிபரிடமோ, தொழிலாளியிடமோ, வியாபாரியிடமோ, வேறு எவரிடமோ கேட்கும் உதவிகள் அனைத்தும் மருத்துவரிடம் தேடப்படும் உதவி போல் அமைந்துள்ளன
    ஆனால் மகான்கள், பெரியார்கள், மெஞ்ஞான குருநாதர்கள், என நம்பப்படுவோரிடம் தேடப்படும் உதவிகள் இறைவன் நிலையில் அவர்களை வைத்து உதவி தேடுவது போல் அமைந்துள்ளன. இந்த வேறுபாட்டை விளங்காததன் காரணமாகவே இக்கேள்வியை எழுப்புகிறார்கள்.
    ஆக, மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி தேடும் போதும், உதவி செய்யும் போதும் எவருமே இறைத்தன்மை பெற்றவராக எண்ணப்படுவதில்லை. சமாதிகளில் போய்க் கேட்கும் உதவிகளில் சமாதிகளில் அடங்கப்பட்டவருக்கு இறைத் தன்மை அளிக்கப்படுகிறது.

    உன்னிடமே உதவி தேடுகிறோம்'' என்றால் எல்லாக் காரியங்களிலும் எவ்வித இயலாமையும் இல்லாதவன் என்ற நம்பிக்கையிலும், எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும் அதைச் செவியுற்று நடவடிக்கை எடுக்கிறவன் என்ற நம்பிக்கையிலும், இறைவா! உன்னிடமே உதவி தேடுகிறோம் என்பதே அதன் பொருளாகும்.
    http://silaiyumkaburum.blogspot.com

    ReplyDelete
  3. /////// இறுதிக் காலத்தில் ஒரு கூட்டமொன்று வெளியாகும்.அவர்களின் தொழுகையை பார்க்கும் நீங்கள் உங்களின் தொழுகையை அற்பமாகக் கருதுவீர்கள்.இன்னும் அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்.அது அவர்களின் தொண்டைக் குழிக்குக் கிழே இறங்காது.அத்துடன் அவர்கள் வில்லில் இருந்து அம்பு வெளியாவதைப் போல மார்க்கத்தை விட்டும் வெளியேறிப் போய் விடுவார்கள் என்பதை அருமை நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லக் கேட்டேன் என்கிறார்கள் ஹழரத் அபூ ஸயீதுல் குத்ரி  ரலியால்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறினார்கள் /////

    இவர்கள் காட்டும் ஹதீஸை முழுமையாக பார்த்துவிட்டு யாருக்கு பொருந்தும் என்றும் பார்ப்போம்

    நாங்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹவாஸின்) போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருந்தபோது அவர்களின் அருகே இருந்தோம். அப்போது 'பனூ தமீம்' குலத்தைச் சேர்ந்த 'துல் குவைஸிரா' என்னும் மனிதர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்" என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், 'உனக்குக் கேடுண்டாகட்டும்! நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் வேறு யார் தான் நீதியுடன் நடந்து கொள்வார்கள்? நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் நீ இழப்புக்குள்ளாகி நஷ்டமடைந்து விடுவாய்" என்று பதிலளித்தார்கள். உடனே, உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! எனக்கு இவர் விவகாரத்தில் அனுமதி கொடுங்கள். இவரின் கழுத்தைக் கொய்து விடுகிறேன்" என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவரைவிட்டுவிடுங்கள். நிச்சயமாக, இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களின் தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களின் நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகையையும் உங்களுடைய நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆயினும்,) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் கழுத்தெலும்பை (தொண்டையை) தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் செல்வார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளி வந்ததற்கான அடையாளம் எதுவும் இருக்கிறதா என்று) அம்பின் முனை பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு (அம்பில்) அதன் (முனையைப் பொருத்துவதற்குப் பயன்படும்) நாணைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணக்கிடைக்காது. பிறகு, அம்பின் (அடிப்பாகக்) குச்சியைப் பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணப்படாது. பிறகு, அம்பின் இறகைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணப்படாது. அம்பானது சாணத்தையும் இரத்தத்தையும் (அவை தன் மீது படாதவாறு) முந்தியிருக்கும். அவர்களின் அடையாளம் ஒரு கறுப்பு நிற மனிதராவார். அவரின் இரண்டு கொடுங்கைகளில் ஒன்று பெண்ணின் கொங்கை போன்றிருக்கும்... அல்லது துடிக்கும் இறைச்சித் துண்டு போன்றிருக்கும்... அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படுவார்கள்" என்று கூறினார்கள்.
    நான் இந்த நபிமொழியை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என்று சாட்சியம் அளிக்கிறேன். மேலும், அந்தக் கூட்டத்தாருடன் அலீ(ரலி) போர் புரிந்தார்கள். அப்போது நானும் அலீயுடன் இருந்தேன். அலீ(ரலி) (நபி - ஸல் - அவர்கள் அடையாளமாகக் கூறிய) அந்த மனிதரைக் கொண்டு வரும் படி கட்டளையிட, அவ்வாறே அவர் தேடப்பட்டு கொண்டு வரப்பட்டார். நபி(ஸல்) அவர்களின் வர்ணணையின் படியே அவர் இருப்பதை பார்த்தேன்.( புகாரி 3610. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்)
    தொடரும் ....

    ReplyDelete
  4. இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றால், (உண்மையில் அவர்கள் சொன்னதையே அறிவிக்கிறேன். ஏனெனில்,) நான் வானத்திலிருந்து கீழே விழுந்து விடுவது, நபி அவர்களின் மீது புனைந்து சொல்வதை விட எனக்கு விருப்பமானதாகும். எனக்கும் உங்களுக்கும் இடையே உள்ள ஒரு விவகாரத்தில் நான் உங்களிடம் பேசினால் போர் என்பது சூழ்ச்சிதான் (என்பதை நினைவில் கொள்ளவும்). இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள். அவர்கள் சிறு வயது இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (திருக்குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். அவர்கள் வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன் எறிந்த) அம்பு (அதன் மறுபக்கமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் செல்வார்கள். அவர்களின் இறைநம்பிக்கை அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்களை எங்கு நீங்கள் சந்தித்தாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களைக் கொன்றவர்களுக்கு அவர்களைக் கொன்றதற்காக மறுமை நாளில் நற்பலன் கிடைக்கும்." என்று கூறினார்கள். (புகாரி 3611. அலீ(ரலி) அறிவித்தார்)
    இனி இந்த ஹதீஸ் யாருக்கு பொருந்தும் என்று ஆராய்வோம்
    ///அவர்களுடைய தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களுடைய நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகையையும் உங்களுடைய நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்கüன் வழிபாடு அதிகமாக இருக்கும்.) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய கழுத்தெலும்பை (தொண்டையை) தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறு பக்கம்) வெலிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து அவர்கள் வெலி யேறிச் சென்று விடுவார்கள்.///
    இப்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரித்து வைத்தாற்போல் (கபுர் பக்தர்களை) இவர்களைப் பற்றிக் கூறுகின்றார்கள். ஆனால் இவர்களோ இந்த ஹதீஸை நமக்கு எதிராகத் திருப்பி விடுகின்றனர். தவ்ஹீத்வாதிகளாக  அதிகமான இளைஞர்கள் உள்ளனர். அதிலும் இவர்களை விட்டு விலகி தௌஹீதை நோக்கி அணியணியாகப் படையெடுத்து இளைஞர்கள் வருகின்றனர். இதை வைத்துக் கொண்டு இந்த ஹதீஸை நமக்கு எதிராகத் திருப்புகின்றனர்.

    தௌஹீத் வாதிகளாக அதிகமான இளைஞர்கள் இருப்பது உண்மை தான். ஆனால் அவர்கள் சிந்தனைத் தெளிவற்றவர்கள் கிடையாது. சிந்தனைத் தெளிவுள்ளவர்கள். இந்த ஆலிம்களைப் போன்று நட்சத்திரங்கள் வானில் பதிக்கப்பட்டுள்ளன  என்றோ மிஹ்ராஜின் போது முஹியத்தீன் அப்துல் காதர் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தார் என்றும் நம்பிக் கொண்டிருப்பவர்கள் அல்ல.

    இந்த இளைஞர்கள் சிந்தனைத் தெளிவுள்ளவர்கள். அதனால் தான் சமாதி வழிபாடு, இறந்தவர்களிடம் உதவி தேடுதல், சுய மரியாதையை இழந்து சக மனிதனின் காலில் விழுந்து வணங்குதல், தாயத்து, தகடு என்ற மவ்ட்டீகங்களை விட்டும் வெளியேறி சத்தியத்தின் பக்கம் வந்துள்ளனர்.

    ReplyDelete
  5. மேற்கண்ட புகாரி 3611 ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுவது போன்று சிந்தனையற்ற இளைஞர்களாக இருப்பவர்கள் இந்த ஆலிம்களிடம் பாடம் பயிலும் மதரஸா மாணவர்கள் தான். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மற்றொரு ஹதீஸில் இவர்களது அடையாளத்தையும் விளக்கியுள்ளார்கள். அது தான் மொட்டையடித்தல் ஆகும்.

    ''நபி (ஸல்) அவர்கள், "கிழக்குத் திசையிலிருந்து (-இராக்கிலிருந்து) சிலர் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்; ஆனால், அது அவர்களுடைய நெஞ்செலும்புகளைத் தாண்டிச் செல்லாது. (வேட்டைக் காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிருந்து (மறு பக்கமாக) வெலியேறி விடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து வெறியேறி விடுவார்கள். பிறகு அம்பானது வில்லின் நாண் உள்ள பகுதிக்குத் (தானாகத்) திரும்பாத வரை அவர்களும் மார்க்கத்திற்குத் திரும்பி வரவே மாட்டார்கள்'' என்று சொன்னார்கள். "அவர்கலின் அடையாளம் என்ன?'' என்று வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "மொட்டை போடுவது தான் (அவர்கüன் அடையாளம்)'' என்று பதில் சொன்னார்கள். ''அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: புகாரி 7562

    நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள இந்த அடையாளம் எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது என்று பாருங்கள். ஒருவன் மதரஸாவுக்குச் சென்றால் முதன் முதலாக அவன் தனது தலை முடியைத் தான் பலி கொடுத்தாக வேண்டும். இல்லையெனில் அவன் ஓதுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டான். மதரஸாவுக்கு ஓத வந்த பல மாணவர்கள் மொட்டையடிக்கும் கலாச்சாரத்தைக் கண்டு வெருண்டோடி யிருக்கின்றனர். இதனால் பல இளைஞர்கள் மதரஸா பக்கமே தலை காட்டாமல் இருந்திருக்கின்றார்கள். (மதரசாவில் ஏதாவது தவறு செய்தாலோ சொல் பேச்சு கேட்காமல் இருந்தாலோ பீடி குடித்து அகப்பட்டாலோ அல்லது விடுமுறையில் சென்று தாமதித்து வந்தாலோ மீண்டும் மொட்டையடித்து விடுவார்கள் )

    இந்த ஹதீஸ்களில் வருகின்ற அடையாளங்களும் அளவீடுகளும் எவ்வளவு துல்லியமாக இந்த ஆலிம்களுக்குப் பொருந்திப் போகின்றன என்று பாருங்கள். மேற்கண்ட ஹதீஸ்களில் இடம் பெறும் கூட்டத்தினர் கொல்லப்பட்டு விட்டனர் என்றாலும் அவர்களது அடையாளங்கள் அனைத்தும் இந்த 'சுன்னத் மட்டும் வைத்தஜமாஅத்'' ஆலிம்களுக்கும் பொருந்திப் போகின்றன என்பதைச் சுட்டிக் காட்டுவதற்கே இதை இங்கே குறிப்பிடுகின்றேன் .

    ReplyDelete
  6. /// கடைசி காலத்தில் ஒரு கூட்டம் உண்டாகும், அவர்கள் சிறியவர்களாகவும் அறிவில் அற்பமானவர்களாகவும் இருப்பார்கள், ஹதீதுகளை, பெரியோர்களின் பேச்சுக்களை பேசுவார்கள். .///

    இது யாருக்குப் பொருந்தும்? மீலாது என்றும், மிஃராஜ் என்றும் பராஅத் இரவு என்றும் பல கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய வைத்து ரூ. 3000 ரூ. 5000 என்று பேரம் பேசிவிட்டு அழகான சொற்களால் பயான் செய்துவிட்டுக் வயிறு  நிறைய சோத்தையும் விழுங்கிவிட்டு  கூலி பெற்றுச் செல்பவர்களையா? அடி, உதைக்கும் வசைமொழிகளுக்கும் ஆளாக்கப்பட்டும் நெஞ்சுறுதியுடன் சத்தியத்தைச் சொன்ன தவ்ஹீத் வாதிகளையா ?

    ///முதிர்ச்சியற்ற புத்தியுடைய
    (மடைய)ர்களாயிருப்பார்கள்...!///

    இன்று மதரஸாவில் படிக்கும் மாணவர்களைப் பார்த்தீர்கள் என்றால் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இவர்கள் இளம் வயதினர். எந்தச் சிந்தனைத் தெளிவும் இல்லாதவர்கள். இதற்கு ஒரே ஓர் எடுத்துக் காட்டு, இறந்தவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று இவர்கள் நம்புவது தான்.

    உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.  அல்குர்ஆன் 35:22

    இவ்வளவு தெளிவாக அல்லாஹ் விளக்கியிருந்தும் இறந்தவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று இவர்கள் நம்புகின்றனர். இது போன்று அடுக்கடுக்கான எடுத்துக்காட்டுகளை கூறலாம்.

    ReplyDelete
  7. ///“குரானை ஓதுவார்கள். ஆனால் அவர்களுடைய ஈமான் அவர்களது தொண்டைக்குழிக்கு கீழே இறங்காது” ///என்ற சொல் யாரைக் குறிக்கும்? கத்தம் பாத்திஹா என்று மக்களை ஏமாற்றி, “யாசீன்” என்று உரத்த குரலில் முழங்கி, இடையில் சிறிது சிறிது நேரம் வாயசைத்துவிட்டு “இலைஹி துர்ஜஊன்” என்று முடிப்பதாகப் பாவனை செய்பவர்களையா? ஏழை, பணக்காரனுக்கு ஏற்றவாறு குர்ஆனையும் நீட்டிக் குறைத்து ஓதுபவர்களையா? சாவு வீட்டில் அனுதாபப்பட வேண்டியது இஸ்லாமியனின் பண்பாக அமைய வேண்டியிருக்க, குர்ஆனுக்கு ரூ.500 தருகிறாயா? ரூ. 1000 தருகிறாயா? என்று பேரம் பேசுபவர்களையா? தட்டு என்றும் நூல் என்றும் தாயத்து என்றும் குர்ஆன் வசனங்களை வியாபாரப் பொருளாக ஆக்கிக் கொண்டவர்களையா? அல்லது, குர்ஆன் போதனைகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பதற்காக அதன் போதனை அடிப்படையில் மக்களைத் தட்டி எழுப்பிய தவ்ஹீத் வாதியையா ?
    இன்னொரு ஹதீசையும் பாருங்கள் ..............!!
    நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: கடைசி காலத்தில் பொய்யர்களும்,
    எமாற்றுக்காரர்களும் வருவார்கள். நீங்களும், உங்களின் மூதாதையர்களும் கேட்டிராத விஷயங்களையெல்லாம் உங்களிடத்தில் கொண்டு வருவார்கள். அவர்களைப் பற்றி (உங்களிடம்)எச்சரிக்கை செய்கிறேன். (எனது எச்சரிக்கையின் படி அவர்களிடம் கவனமாக நடந்து கொண்டீர்களானால்) அவர்கள்
    உங்களை வழி கெடுத்துவிட முடியாது. உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தவும் முடியாது. முஸ்லிம் 07, முஸ்னத் அஹ்மத் 2-349, மிஷ்காத் 28

    உண்மைதான்....! 
    நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறும்போது, கேட்டுக்கொண்டிருந்த (நமது முன்னோர்களான) நபித்தோழர்கள், அன்று குர்ஆன் ஹதீஸ் இரண்டைப் பற்றி மட்டுந்தான் கேட்டிருந்தார்கள், தர்கா .கொடியேற்றம் மவ்லூது மீலாது விழா, பாத்திஹா, ஹுஸைன் (ரலி) நோன்பு, கந்தூரி விழா   பஞ்சா எடுத்தல் சேகு முரீது   மத்ஹபுகள், இமாம்கள்,  ,  இஸ்மா, கியாஸ் இவற்றைப் பற்றி, நபித்தோழர்கள் கேள்விப்பட்டதே இல்லை.
     நமது மூதாதையர்களான நபித்தோழர்கள் கேள்விப்பட்டிராத புதுமை விஷயங்களான இவற்றை மக்களிடையே புகுத்துபவர்கள் தான் குழப்பக்காரர்கள் , பொய்யர்கள் என்று தெளிவாக நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள் என்பதையும், குர்ஆன், ஹதீஸை விட்டு விட்டு இவற்றை மக்களுக்குப் போதிப்பவர்களே, மக்களைக் குழப்பத்திலும் வழி கேட்டிலும், ஆழ்த்தி வருபவர்கள் என்பதையும் மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்

    ''உதாரணத்துக்கு இவர்கள் கொண்டாடும் மீலாதை பாருங்கள் ''

    நபிகளாரின் ஒட்டுமொத்த வாழ்நாளின் 63 வருட காலத்திலும் நபித்துவத்தின் 23 வருட காலத்திலும் ஒரு நாளேனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது பிறந்தநாளை கொண்டாடியது கிடையாது மற்ற நபிமார்களுக்கு கூட பிறந்த நாள் கொண்டாடவில்லை
    நபிகலாருக்காக சஹாபாக்களோ சஹாபாக்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ கொண்டாடவில்லை
    நாற்பெரும் கலீபாக்களோ கொண்டாடவில்லை

    சிறந்த தலைமுறையினர் என்று நபிகளார் صلى الله عليه وسلم அவர்களால் சிலாகித்து கூறப்பட்ட நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையினராவது நபிகளாருக்கு பிறந்த நாள் கொண்டாடினார்களா? என்றால், அவர்களும் பிறந்தநாள் கொண்டாடவேயில்லை.
    (இஸ்லாம் தோன்றி) 400 வருடங்களாக வாழ்ந்த மூதாதையர்கள் கேள்விப்படாத, கேட்டிராத ,ஒன்றையல்லவா இவர்கள் கொண்டாடுகிறார்கள், கொண்டு வந்து தந்திருக்கிறார்கள்

    பாத்த்திமியாக்கள் எனும் பொய்யர்களும், எமாற்றுக்காரர்களும் தந்த மீலாத் விழாவை அல்லவா கொண்டாடுகிறார்கள்

    ReplyDelete
  8. ///// அல்லாஹ்வுடைய அடியார்களிடம் ) உதவி தேட வேண்டுமானால் அல்லாஹ்வின் அடியார்களே ! எனக்கு உதவி செய்யுங்கள்.அல்லாஹ்வின் அடியார்களே ! எனக்கு உதவி செய்யுங்கள்.அல்லாஹ்வின் அடியார்களே ! எனக்கு உதவி செய்யுங்கள்.எனக் கூறுவீர்களாக என்று கூறும் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள் ////
    என்று ஒரு பலஹீனமான ஹதீஸை இட்டுள்ளீர்கள்
    அந்த ஹதீஸ் பற்றிய விமர்சனம்
    http://islamqa.info/ar/132642

    ReplyDelete