இவர் எப்போது பார்த்தாலும் தொப்பி அணிந்து இருக்கிறார் இவர்தான் முழுமையான முஸ்லீம் என்று சொல்வதாக இருந்தால் .இவரையும் நாம் முஸ்லீம் என்று சொல்ல வேண்டியது வரும் அவர் யார் ? அவர்தாங்க போப்பாண்டவர் அவர் எப்போதும் தொப்பி அணிந்து இருக்கிறார்.அதற்க்காக இவரை முஸ்லீம் என்று சொல்லாமுடியுமா ? இவர் இஸ்லாமிய பட்டியலில் இடம் பெறமுடியுமா ?
தாடி,தலைப்பா இவைகள் இன்று இருக்கிற சீக்கியர்கள்,சிங்,இவர்கள்.அனைவரும் தாடி ,தலைப்பா அணிந்து இருப்பார்கள் . இவர்கள் இஸ்லாமிய பட்டியலில் இடம் பெறமுடியுமா ?
சட்டம்,மற்றும் வைத்தியத்தின் அரிச்சுவடியே தெரியாத ஒருவன் அது சம்மந்த பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு நான் ஒரு வக்கீல்என்று,டாக்டர் என்று சொன்னால் நாம் ஏற்றுக் கொள்வோமா ? அதுபோலதான் இஸ்லாமியர்களின் ஆடை,உணவு முறை,தோற்றம், இவைகளை வைத்து மட்டும் ஒருவன் முழுமையான முஸ்லீம்மாக முடியாது.சரி இவைகள் தான் முழுமையான முஸ்லீகளின் அடையாளம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.ஆனால் இறைவனிடத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய அடையாளங்கள் அல்ல ! இந்த அடையாளங்கள் எல்லாம் நம் இந்திய திரு நாட்டில் உள்ள அரசங்க பட்டியலில் அதாவது ரேசன் காடு , வாக்களர் அட்டை ,இஸ்லாமியர்களின் பட்டியலில் வருமே தவிர இறைவன் பட்டியலில் வராது .என்பதை சிந்தித்து கொள்ளுங்கள் .
இப்போது வாருங்கள் இறைவன் எவற்றை எல்லாம் பறிபுரணமான இஸ்லாமிய அடையாளமாக சொல்கிறான் என்பதை பார்போம்;
يايها الذين امنوا இந்த வசனத்தில் ஆராம்பமாக சொல்வதை பாருங்கள் இறை நம்பிக்கையாளர்களே !! என்று சொல்லிருக்கிறான் :
இறை நம்பிக்கை :: நம்பிக்கை என்றால் வெறும் நாவளவில் இல்லாமல் உள்ளத்திளவில் அது அமைந்திட வேண்டும். இறைவன் : கொடுத்தவற்றைத் தடுத்திட இயலாது.அவன் தடுத்தவற்றைக் கொடுத்திட இயலாது எங்கின்ற அளவில் அவனின்றி அணுவும் அசையாது,அவனே நாம் பாதுகாவலன் என்ற அசையாத நம்பிக்கை நம்மனதில் பதிய வேண்டும்.இதற்க்கு உதாரணம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களையே குறிப்பிடலாம் ;ஏகத்துவத்தை மக்களிடம் எடுத்துரைப்பதற்க்கு முன் அவர்களுக்கு மக்கள் சூட்டிய பெயர் அல் அமீன் ( நம்பிக்கை கூறியவர் ) அஸ்ஸாதிக் ( உண்மையளர் ) என்று மக்களால் புகழ்ந்து கூறினார்கள் ஆனால் எப்போது ஏகத்துவத்தை பிரச்சாரம் பண்ண ஆரம்பித்தார்களோ அப்போது அல் ஜூனுன் (பைத்தியகாரன் ) என்று மக்கள் அழைக்க ஆரப்பித்தார்கள். அதுமட்டுமா ?தாயிஃபிலே பட்ட கல்லடிகள்,சொல்லடிகள்,கொஞ்சம் அல்ல .அதுமட்டுமா !!பல நாட்கள் ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட சமூக பகிஷ்காராம்.செய்தார்கள் .அந்த நாட்களில் பசிக்கு உணவு இல்லாமல் காய்ந்த இலை குலைகளை பஸ்பமாக்கி தண்ணீரில் கலக்கிக் குடித்த கொடுமை !! இவை எல்லாவற்றையும் விட ஸவுர் குகையில் தஞ்சம் புகுந்த வேளையில் எதிரிகள் மோப்பம் பிடித்து அங்கேயும் வந்துவிட எதிரிகளின் கால்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கும்,அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களுக்கும் தெரிந்தது .அவர்கள் குனிந்து பார்த்தால் இருவரின் தலைகளும் பறிபோய்விடும் நிலை அப்போது நாம் இருவர்தானே இருக்கின்றோம் என்று அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் இறைவனை மறந்து சொன்னார்கள் என்பதாக வரலாறு கூறுகிறது,ஆனால் அந்த இக்கட்டான நேரத்திலும் ,தோழரே துவண்டு விட வேண்டாம் ! நீர் நினைப்பது போல் நாம் இருவர் மட்டும் இங்கு இல்லை நம்மோடு சேர்ந்து மூன்றாவது அல்லாஹ் இருக்கியறான்( لا تحزن ان الله معنا ( 9=40 === என்று நிராசையடையாமல் நெஞ்சுறுதியோடு கூறினார்களே அது தான் உண்னையான ஈமான்.
ஆனால் இன்று பார்கின்றோம் ; ஆற்றுவது சுதந்திர தின உரை ! ஆனால் (புல்லட் துளைக்காத ) கண்ணாடிக் கூண்டிலிருந்து தான் இன்றைய அரசு அதிகரிகள் சுதந்திர தின உரை ஆற்றுவார்கள் . ஆனால் அப்படியிருந்தும் '' காந்தி முதல் ராஜீவு காந்தி வரை எதிரிகளால் சுடப்பட்டு இறந்த வரலாறுதான் இந்தியா வரலாறு . ஆனால் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த இக்கட்டான நேரத்தில் இறை நம்பிக்கையோடு செயல்பட்ட தால் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை இறைவன் இருப்பு கூன்டை வைத்து பாதுகாக்க வில்லை, மலக்குகள் பட்டலத்தை வைத்து பாதுகாக்க வில்லை . காற்று பலமாக அடித்தால் அதனுடைய வழைகள் கிழிந்து விடும் அதுதான் சிலந்தி வழை வைத்து காப்பாற்றினானா !! இல்லையா !! இது மாறியான ஈமான் உடைய நம்பிக்கை நம்மிடம் உள்ளதா ??? நாம் சிந்தித்து பார்க்க வேண்டும் !! அன்பர்களே இது போன்ற ஈமான் ,நம்பிக்கை நம்மிடம் வருவதற்க்கு நாம் முயற்சி செய்யவேண்டும் .இது போன்ற ஈமானையும் நம்பிக்கையும் தருவானாக ,,,,,
இறைவன் குர்ஆனில் சில அடையாளங்களை கூறுகிறான் :
انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم و اذا تليت عليهم ايته زادتهم ايمانا و علي ربهم يتوكلون ( ٢~٨
உண்மையான முஃமின்கள் யார் என்றால் ? அல்லாஹ் (வின் திரு நாமம் அவர்கள் முன் ) கூறப்பட்டால்,அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும் .அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுக்கு ஈமான் அதிகரிக்கும்.இன்னும் தன் இறைவன்மீது அவர்கள் நம்பிக்கை வைப்பார்கள் .( 8 = 2 )
الذين يقيمون الصلوة ومما رزقنهم ينفقون ٌُ ( ٣~٨
அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள் . அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத் ) திலிருந்து நங்கு செலவு செய்பார்கள் ( 8 = 3 )
اولئك هم المؤمنون حقا ( ٣~٨
இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்ங்கள் ஆவார்கள் ( 8=4)
(25=63) و عباد الرحمن الذين يمشون علي الارض هونا و اذا خاطبهم الجاهلون قالوا سلما
இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் ( யாரென்றால் ) அவர்கள்தம் பூமியில் பணிவுடன் நடப்பார்கள் ;அறிவீனர்கள் அவர்களிடம் தர்க்கம் செய்திட முனைந்தால்,ஸலாமுன் எனக் கூறி ( அவர்களை விட்டும் வில்கி ) விடுவார்கள்.
(25=64) والذين يبيتون لربهم سجدا وقياما
இன்னும் அவர்கள் எத்தகையவர்களென்றால் ,ரப்புக்கு ஸூஜூது செய்வார்களாகவும்,நின்றவர்களாகவும் இரவைக் க்ழிப்பார்கள்.
(25=67) والذين اذا انفقوا لم يسرفوا ولم يفتروا وكان بين ذلك قواما
இன்னும் அவர்கள் எத்தகையவர்களென்றால்,செலவு செய்தால் விண் விரையம் செய்ய மாட்டார்கள் .( கஞ்சாத்தானமாக ) குறைக்கவுமாட்டார்கள் .எனினும் இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்
நாம் மேலே சொன்ன வசனங்களை பாருங்கள் இவைகளை தான் இறைவன் முழுமையான முஸ்லீம்களுக்கு உரிய அடையாளங்களாக சொல்கிறான் .இவைகளின் 100 சதவீகிதம் கூட வேண்டாம் 10 சதவீதமாவது நம்முடைய வழ்க்கையினுடைய நடைமுறையில் இருக்கிறதா ? அப்பரம் எப்படிங்கள் நாம் முழுமையான முஸ்லீம்கள் என்று வாய் கூசாமல் பொய்சொல்கிறோம் !
இறைவன் சொல்லுகிற தன்மை அனைத்தும் நம்மிடம் வரவேண்டும் ஆனால் நாம் செய்ய வேண்டிய முதல் விசையம் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை நேசிக்க வேண்டும் .
عن انس ان رسول الله صلي الله عليه و سلم قال لا يومن احدكم حتي اكون احب اليه من ولده و والده والناس اجمعين ( البخاري ١٥)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் : கூறினார்கள் : உங்களில் ஒருவரும் முழுமையான முஸ்லீம்மாக ஆகமாட்டார் ;எதுவரை என்றால் அனைத்து மக்களை விடவும் ,இன்னும் தன் பெற்றோர்களை விடவும் ,தன் குழந்தைகளை விடவும் ,என்னை நேசிக்காத வரை அவர் முஸ்லீமாக மாட்டார்
நாம் எப்போது நபியை நேசிக்கிறோமோ அப்போது தான் நாம் முழுமையான முஸ்லீமாக முடியும் , நபியை நேசிக்கிறோம் என்று வாய் வழியாக சொல்கிறன்றோமே தவிர நம் உள்ளத்தில் இல்லை .என்பதே உண்மை . நாம் யாரை நேசிக்கிறோமோ அவருடைய நடைமுறையை நாம் பின்பற்றுவோம் .ஆனால் நாம் நபியை நேசிக்கிறோம் என்று சொல்லுகிறோம் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தான நடைமுறையை நாம் எங்கே பின் பற்றுகிறோம் சாதரன விசையம் ,தாடி ,தொப்பி இவைகளை கூட நாம் பின்பற்றுவது இல்லை .ஆனால் நபியை நேசிக்கிறோம் என்று சொல்லுகிறோம் நம்முடைய நேசம் உண்மையானதா ? நாம் அனைவரும் நபி ஸல்லல்லாஹூ அலைஹொ வஸல்லம் அவர்களை நம் உயிரைவிட நேசிக்கிற கூட்டத்தில் சேற்ப்பானாக !! இறைவா எங்களை உண்மையான நேசர்களின் கூட்டத்தில் சேர்ப்பாயாக !!! ஆமீன்
No comments:
Post a Comment