Thursday, January 9, 2014


                      வழிகேடின்  தந்தை  இப்னு தைமிய்யா     

புனிதம்,அமைதி,மனிதநேயம்,விசுவாசம்,உண்மை,யதார்த்தம்,விசுவாசம் தரும் நிர்ணயம்,பக்தி,கிரியை,சாந்தி,சமாதானம்,சமதர்மர் இன்னும் அணிவகுத்து நிற்கும் உண்னையின் முழுவடிவின் மொத்த உருவமே கண்ணியமிகு இஸ்லாம் எனக்காடியது சுன்னத் வல் ஜமாஅத்.
இப்புனிதமிகுஇஸ்லாத்தை,குழப்பம்,சண்டை,சச்சரவு,திமிர்வாதம்,அடங்காமை,பொறமை,காழ்ப்பு,பிரிவினை,ஏளனம்,எகதாளம்,மமதை,வரட்டுகௌரவம்,சுயபுக்தி,புத்தி யோசனைக்கு முதலிடம்,கட்டுப்பாடின்மை,ஆய்வுகளில் அடிதடிக்கே முதலிடம்,தன் முடிவை பிறர் ஏற்க்க வேண்டுமென்றே இருமாப்பு,இதுபோல் வரிசையில் நிற்கும் அடங்காமையின் அத்தனை பிரிவின் ஒட்டு மொத்த உருவமே இஸ்லாம் எனக்காடியவர் இப்னு தைமியா, 
இவரின் பேச்சு இஸ்லாமிய உலகில் வெளிவந்து மக்களின் காதுகளுக்கு எட்டிய பின்,எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் எதையும் பேசலாம்.எவருக்கும் கட்டுப்பட வேண்டியதில்லை.என்ற ஒருஅவலநிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டானர்.தடம்மாறினர்,தடுமாறினர்
இவர்தம் வாழ்நாள் எல்லாம் இஸ்லாத்தின் ஒற்றுமையை உருக்குலைத்து அதன் ஒற்ருமையை,இஸ்லாதின்  அமல் முறைகளை முறைகெடுத்து,ஆன்றோர் சான்றோர்களான அவ்லியாக்கள், இமாம்களையெல்லாம் நாகூசும் சொல்லம்புகளால் தாக்கி தன் வக்கிற புத்தியின் உக்கிற நடவடிக்கைகு உருவம் தந்து இஸ்லாத்தில் சர்வமும் சரிந்துமடியும் சந்தர்ப்பத்தை உருவாக்கியவர். 
இன்று முஸ்லிம்கலுக்குள் பிரிவினை,துவேஷம்,மனக்கசப்பு,கொள்கை பிரச்சனை,ஒற்றுமைய்ன்மை போன்றவைகள் ஏற்பட முலகாரணமானவர் இப்னு தைமியா தான்.இவர்தன் குழப்பத்தின் வாயிலை திறந்து விட்டவர்.குழப்பவாதிகள்,குதர்க்கவாதிகள்,சந்தர்ப்பவாதிகளான மதப்புரட்டர்களுக்கு இறைவிசுவாசம்,நிர்ணயம்,அமல்களில் ஆர்வம்,ஒற்றுமை போன்றவற்றை சீர்குலைக்கும் அர்த்தமற்ற பேச்சுகளுக்கும் விவேகமற்ற விளக்கங்களுக்கும் எப்படியெல்லாம் குர்ஆன்,ஹதிதை தவறான முறையில் ஆதாரமாய் காட்ட வேண்டுமென கற்ற தந்தவர் இஸ்லாமியப்பற்றை அறுத்தவர்.  
தமது வாழ்நாளில் அனைத்து இஸ்லாமிய உலமாக்களின் கண்டனக் குரலுக்கும்,அரசர்களின் தண்டனை,சிறைவாசத்திற்கும்.மக்களின் நிந்தனைச் பேச்சுகளுக்கும் ஆளாகியும் தம் தவறை உணராதவர் ஏன் இறைவனால் திருந்தி வாழ சந்தர்ப்பம் அளிக்கப்படாதவர்.தன் குதர்க்கப் புத்தியால் குழப்பம்,குரோதம் அமைதியின்மையை உண்டு பண்ணியதால் தமது வாழ்நாளில் பெரும்பகுதியை சிறையிலே கழித்து சிறையிலேயே மரணமடைந்தவர் மணம் திருந்தாதவர்.ஏன் அக்கால அரசுக்கள் இவருந்தண்டனை தந்து இறை நிந்தனையிலிருந்து தன்மை விடுவித்துக் கொண்டனர் என்றால் மிகையாகாது. 
பிறவிலேயே போர்க் குணம் கொண்ட இப்னு தைமிய்யா முஸ்லிம் மன்னர்கள் அறிஞர்கள்,உலமாக்களின்,மார்க்க சட்ட மேதைகள்,கொள்கை இமாம்கள்,முஃதிகள்,ஆன்றோர்கள்,சான்றோர்கள்,அவ்லியாக்கள்,ஷய்குமார்கள், அவர்களின் கருத்துக்குளையும் எதிர்த்து தம்மை கலங்கப்படுத்தக் கொண்டவர்.போராட்டம்,ஒத்துழையாமை,சீர்குழைவு,அமைதிக்கு குந்தகம்,ஆட்சிமாற்றம்,சூழ்ச்சிதிட்டம்,சதிவேலைகள் என்பன போன்ற படுபாதகச் செயல்களையெல்லாம் தன் கவர்ச்சி மிகு பேச்சற்றலால், செயலாற்றலால், உண்மையின் உருவங்கள் என  நம்பவைத்தார். 
இதன்படியே மக்களை தூண்டிவிட்டு அவர்கள் தம் இஸ்லாமிய வாழ்க்கையை புனிதமிகு கொள்கைகளை இன்ன பிற ஒழுக்கங்களை சின்னா பின்னமாக்கினார்,சீர்குழைந்து,வேரறுத்தார். 
அக்கால முதல் இக்காலம் வரை இவரின் எழுத்துக்களால் கவரப்பட்டவர்கள் அனைவரும் போர்க்குணம் கொண்ட எத்தர்களாய்,அடங்காத்தனம் கொண்ட அயோக்கியர்களாய்,திமிர்வாதம் பிடித்த தீயோர்களாய்,வரட்டு கௌரவம் பிடித்த வம்பர்களாய்,சமுதாய ஒற்றுமையை சீர்குளைக்கும் சிறுநரிகளாய் உதவாக்கரைகளாய்,முஸ்லிம் ஜமாஅத்துகளை பிளவுபடுத்தும் சந்தர்ப்பவாதிகளாய் இருப்பது கண்கூடு. 
இவைகளெல்லாம் இப்னு தைமிய்யாவை இழித்துரைத்த வார்த்தைகளில்லை,இறைவனையே பழித்துரைத்த பாவியை இழிந்துரைக்க எண்ணிவன் படித்த வைத்த பாடங்கள் - அல்லாஹூவுக்கு உருவம்,திசை உண்டு என்று மனஇச்சைவுடன் கூறிய இவரை விசையுடன் தாக்க வேண்டுமென்றவனின் கசையடிச் சொற்கள் எம்பெருமானாரை எப்படியெல்லாம் விமற்ச்சிக்க வேண்டுமோ அப்படியெல்லாம் வஞ்சித்த வழிகேடரை பழிதிட எண்ணிய உள்ளத்தின் கண்ணீர் கதைகள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை நம்மைப் போன்றவர் என மற்றவர்கள் நம்பி வழிகெட வைத்ததால் வெம்பிய உள்ளத்தனலில் தோய்த கம்பிகள் போல் கணென்றெலுந்த கண்ணிகள்,சுழென்றெழுந்த சூறாவளிகள் புண்ணியம் புத்த பூமான் நபியை கண்ணியம் செய்ய எந்த ஆதாரமும் இஸ்லாத்தில் இல்லை !!! என்ற இவரது சொற்கள், 
கொள்கையில் குன்றென நிமிர்ந்து நிற்பவனை இடியெனத் தாக்கியதால் வெடித்துச் சிதறிய வெஞ்சினச் சொற்கள் இதை படுத்த பதறிவனின் சுடும்சொல் அர்ச்சனை கடுஞ்சொல் கர்ஜனை,ஸஹாபாக்களையெல்லாம் சர்ச்சைக் குறியவர்கள் என்று சொல்லி  சிட்சைக்குறிய வரானதால், இச்சை கொண்டழிந்த இவரை தாக்க கச்சை கட்டியவனின் கசப்பு மொய்கள். 
இமாம்களையெல்லாம் சொந்தக் கருத்தை கூறுபவர்கள் என இறைவனின் பயமற்ற பேசியவரை நயனற்ற சாடும் நல்லவனின் நறுக்தரித்த சொற்கள் செருக்குப் பிடித்த வேடதாரிகளை உருக்கும் பிழம்பாய் தெரித்து விழும் கொள்கை கோட்பாடுகள் சுட்டுபொசுக்கும் கண்டனக் தாக்குதல் சினம் கொண்ட சிந்தனை சொல்வடிவங்கள் வலிமார்களையெல்லாம் வசைமாரிபொழிந்து இஸ்லாத்தைவிட்டும் திசைமாறியப் போனவரை வசைமாரி பொழிவதே நெஞ்சுக் நீதி புகட்டும் பாடம் எனக் கொண்டவனின் கொள்கை பிடிப்புத் தந்த அடிப்படையின் ஆர்ப்பரிப்புகள்,ஆராவாரங்கள். 
இப்னுதைமிய்யாவின் நடைமுறைகள் அவர்கள் இஸ்லாத்திற்க்கு செய்த துரோகம்,இஸ்லாத்தின் அடிப்படை முதல் செயல்பாடுகளின் ஒழுக்கங்கள் வரையுள்ள ஒவ்வொரு சொல்லையும் கடுஞ்சொல் விமர்சனத்தால் தூற்றியும் மறுத்துள்ளார்.இவையனைத்தையும் படித்தவனின் பதைபதைக்கும் நெஞ்சக்குமுறல்களைத்தான் மேற்கண்ட வரிகளில் கண்டீர்கள். 
மார்க்க அறிஞர்கள் அன்று முதல் இன்று வரை இப்னு தைமிய்யாவைப்பற்றி அளித்துள்ள தீர்ப்பை படித்தீர்களேயானால் நீங்களும் என்போல் அவரை வெஞ்சினம் கொண்டு தாக்காது,வெறுமனே அமட்ந்துவிட மாட்டிர்கள் ஏன்பதை கருத்தில் கொண்டே,இப்னு தைமிய்யாவை பற்றிய உலமாக்கள் தந்த தீர்ப்பை தொடர்ந்து எழுதுகிறேன்.படித்தபின் இப்னு தைமிய்யா,நம் உயிரினும் மேலான நபி ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்களின் ஜியாரத் விஷயத்திலேயே கைவைத்தவரெனறால் மற்ற இஸ்லாமிய நிர்ணயங்கள்,சட்டங்கள்,ஒழுக்கங்களில், எவ்வளவு அவதூறும் குழப்பமும் செய்திருப்பார் என்பது உங்களுக்கே விளங்கும்.  
வல்ல நாயன் சத்தியத்தை சத்தியமாக,அசத்தியத்தை அசத்தியமாக விளங்க அருள்புறிவனாக ! ஆமின் !!! 
இப்னு தைமிய்யா,அல்லாஹூதலாவே தன் ரஹ்மத்தை விட்டும் தூரமாக்கி விட்ட அடிமை,அல்லாஹூதலாவே அவரை அவனை விட்டும் தூரமாக்கிய உண்மை தெரியாத குருடராகவும் மார்க்கத்தில் இழிவான கருத்துடையவராகவும் ஆக்கிவிட்டான்.இவ்வாறுதான் மிகப்பெரும் இமாம்கள் இவரது நிலையையும் பொய்யான சொற்களுக்கும் விளக்கம் அளித்துள்ளனர். 
எவரொருவர் இப்னு தைமிய்யாவைப் பற்றி அறிய நாடுகிறாரோ அவர்,தன்னீகரில்லா அறிஞர்,இமாம்,அவரது தலைப்பதவியில் அனைத்து மார்க்க அறிஞர்களும் ஒருமித்த கருத்துடையவர்களும் கண்ணியத்திலும் மார்க்க அறிவுகளின் ஆய்வுகளில் தனிப்பட்ட மிகப்பெரும் நிலையை அடைந்தவர்களுமான இமாம்ஸூப்கீ (ரஹ்) இவர்களது மகன் தாஜூத்தீன் ஸூப்கீ,ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு அப்துஸ் ஸலாம் இவர்களின் காலத்தில் வாழ்ந்த பெரும் பெரும் உலமாக்களும் இவர்களல்லாத ஹனபீ,ஷாஃபீ,மாலிகீ,ஹன்பலி,மதுஹபுகளின் உலமாக்களின் பேச்சுக்களையும் தீர்ப்புகளையும் நோட்டமிடுவார்களாக. 
இப்னு தைமிய்யா தன் எதிர்ப்பை ஆரிஃபீங்கள்,சூஃபியாக்களிடம் மட்டும் காட்டவில்லை.உமர் (ரலி ) அலி (ரலி) போன்றோர்களையும் எதிர்ப்பதை விட்டு வைக்கவில்லை.முடிவாக இப்னு தைமிய்யாவின் எந்தப் பேச்சும் மதிப்புடையதல்ல,கவனிக்கதக்கதல்ல அவரது பேச்சுக்கள் சாக்கடையில் எரியப்பட வேண்டியதே.அவரது பேச்சுகளைப் பார்க்கும் உண்மை முஸ்லிம் வேதனைப்பட்டே தீருவான்.எனவே,இவர் ஒரு மதப்புரட்டர் வழிகேடர்,வழிகெடுப்பவர்,முட்டாள்,வரம்பு மீறியவர் என்றே ஒரு மூஃமீன் நம்புவார்.அல்லாஹூதலா நம்மை இப்னு தைமிய்யாவின் கொள்கை(புரட்டு)களை விட்டும் காத்தருள் புரிவானாக! 
இது மட்டுமல்லாமல் இஸ்லாமியப் பெரியார்கள் நல்லோர்களையெல்லாம்  அவதூறாகப் பேசிக்கொண் இருந்ததால்,இதைக் கண்ட இவரது காலத்தில் வாழ்ந்த உலமாக்கள் 'இவர் அயோக்கியர்' என்றும் மதப்புரட்டர் என்றும் ஏன் அதிகமான உலமாக்கள் இவரை ' காபிஃர்' என்றே தீர்ப்பளித்துள்னர். 
 இமாம் இப்னு ஹஜர் ஹைலமீ ( ரலி ) அவர்கள் கூறினார்கள் : இப்னு தைமிய்யா,அவரது மாணவர் இப்னுல் கையும் இது போன்றுள்ளோர்களின் கிதாபில் உள்ள விஷயங்களில் செவி சாய்ப்பதை தவிர்த்துக்கொள்.ஏனெனில்,எவனொருவன் தன் ஆசையை தெய்வமாய் எடுத்துக்கொண்டானோ மேலும் எவனொருவன் கேள்விப்புலன் உள்ளங்களில் முத்திரை வைத்து,அவனது பார்வையில் திரையை போட்டு அல்லாஹூ தலா வழிகெடுத்து  விட்டானோ அவர்களை பின் தொடரக்கூடாது ஏனெனில் அல்லாஹூ தலா வழிகெடுத்துவிட்டால் அதன் பின் யார் அவனை நேர்வழிகாட்ட முடியும் ?? 
(நூல் : பஃதாவா ஹதீதிய்யா பக்கம் ;86)  
இப்னு தைமிய்யா,இப்னுல் கையூம் இவர்கள் ( இவர்களை பின் பற்றியவர்கலும் ) மார்க்கத்தின் வரம்புகளை கடந்து சென்றவர்கள்,மார்க்கத்தின் அடையாளச் சின்னங்களை விட்டும் தூரமாகிவிட்டவர்கள்.ஷரீஅத்,ஹகீகத்தீன் கட்டுமானங்களை உடைத்தெரிந்தவர்கள்.மேலும் இவர்கள்,அவர்களின் இறைவன் காட்டிய நேர்வழியில் தாம் உள்ளோம் என யூகித்து கொண்டார்கள், அவ்வாறல்ல மாறாக இப்னு தைமிய்யா,இப்னு கையூம் போன்றோர்கள் வழிகேட்டின் மிக கேடுகெட்ட நிலையை உடையவர்கள் அறுவறுப்பான செயல் உடையவர்கள்.இறைவனின் எல்லையற்ற கோபத்திற்கும் நஷ்டத்திற்க்கும் ஆளானவர்கள்.பொய்,புரட்டுகளிலேயே மூழ்கியவர்கள்.மேலும் அல்லாஹூதஆலா இவர்களையும் இவர்களை பின்பற்றியோகளையும் விட்டும் பூமியை தூய்மை ஆக்குவானாக 
( நூல் : பஃதாவா ஹதீதிய்யா , பக்கம் : 147 ,  நூல் : நூருல் பயான் ,பக்கம் :79 )  
தன் சிற்றறிவுக்கு முதலிடம் கொடுத்து சிறுமையடைந்தவர்களுள் முதன்மையானவர் இப்னு தைமிய்யா,இவர் தன் சிந்தனை தந்த நிந்தனைக்கு வந்தனம் செய்து இஸ்லாத்தை அழிக்க கங்கணம் கட்டியவர்.இதற்கு மூலமாய் இஸ்லாத்தின் மூலாதாரங்களான குர்ஆன்,ஹதீஸ்,இஜ்மாஉ,கியாஸ்,நாற்பெரும் இமாம்களின்,வலிமார்களின்  தீர்ப்புகளை ஏற்காமல்,தனித்து முடிவு செய்து தனியாக் போனவர்.இவ்வாறு இஸ்லாத்தை விட்டும் பிரிந்து ஆய்வுகளின் பட்டியல்படி இவரது கோரமான முடிவுகளை நாங்குவகையாக பிரிக்கலாம்
  1. இவர் தம்மை இமாம் ஹன்பலி ரலி அவர்களை பின்பற்றுபவன் என்று கூறிக் கொண்டு,அவர்கள் சொன்ன சட்டவரம்புகளுக்குள் கட்டுபடாமலும்,தன் மதமீறலை அடக்கமுடியாமலும் இரண்டிற்கும் இடம் தந்து, இமாம் ஹன்பலீ ரலி அவர்களின் சொற்களில் பிரபலமில்லாத ( ஆதாரமற்ற ) 26 மஸ்அலாக்களை ( சட்டங்களை ) எடுத்து தன் மதுஹப்-ஆக ஆக்கிக் கொண்டார்.
  2.  ஹன்பலீ ரலி  மதுஹபை சார்ந்தவர் என்று சொல்லிக் கொண்டு,அம்மதுஹபை விட்டு விட்டு மூன்று இமாம்களின் 16 தீர்ப்புகளை எடுத்து தன் மதுஹபுக்கு பயன்படுத்திக்கொண்டார்.இதிலும் இமாம்களின் தீர்ப்பை எடுத்தாலும் 3 பேர்களின் தீர்ப்புகளை ஒரே தடவை எடுத்து,தீர்ப்புகளின் அடிப்படையே குழப்பியுள்ளார்.
  3.  நான்கு இமாம்களை பின் தொடர்வதைவிட்டு விட்டு தனிப்பட்ட முறையில் 17 மஸ்அலாக்களை சுயமகவே  உண்டுபண்ணி,தன்னை இஸ்லாத்தை விட்டும் தனிமைப்படுத்திக்கொண்டார்.
  4. இவர் இஸ்லாம் மார்க்கத்தில் சட்டமிடும் அங்கத்தினர்களான ஸஹாபாக்கள் முதல் இமாம்கள் வரை உள்ளவர்களின் ஏகமனதான தீர்ப்பை விட்டும்,இஸ்லாத்தின் அடிப்படைச் சட்டப்பிரிவின் 3 வது அம்சமான இஜ்மாஉ -ஏற்றுக்கொள்ளாது 39 மஸ்அலாக்களை உண்டு பண்ணினார்.இந்த 39 மஸ்அலாக்களில் 10 மஸ்அலாகி (சட்டங்)கள் தலாக் பற்றியாகும். 
 ஆக இவர் தனிப்பட்டு இஸ்லாத்தின் பெயரைச் சொல்லிக்  கொண்டே அதில் அங்கீகரிக்கப்படாத 98 மஸ்அலாக்க்ளை உண்டு பண்ணியுள்ளார்.
இப்னுதைமிய்யா தலாக் மஸ்அலாக்க்ளில் சுன்னத்வுல் ஜமாஅத்தின் அனைத்து தரப்பினகளின் தீர்ப்புகளை விட்டு விட்டு ஷீஆக்களின் ஒரு பிரிவினரான இத்னா அஸ்ரீய்யாவை பின்பற்றியுள்ளார்கள்.இந்த 14-ம் நூற்றாண்டில் இப்னு தைமிய்யாவைப் பின்பற்றியவர்கள் குர் ஆனிலிருந்து ,குல் அவூது பிறப்பில் பஃலக்,குல்அஊதூபிறப்பின்னாஸ்.சூரக்களை எடுத்துவிட நினைக்கிறார்கள் ! நபி ஸல்லல்லாஹூ அலைவஸல்லம் அவர்களை அல்லாஹூ தஆலாவின் தூதராக இருந்தார்கள்( இப்போது இல்லை ) என பொருள்படும்.
اشهد ان لا اله الا الله و اشهد ان محمد كان رسول الله 
என்று சொல்லவேண்டும் என்கிறார்கள்.நஊது பில்லாஹி மின்ஹா !  
(இப்னு தைமிய்யா உன்கா ஹம்அஸர் உலமா பக்கம் 102,103,) 
 இப்னுதைமிய்யா இறைவனுக்கு உருவம் கற்பித்தவர் ( இது 72 பித்அத் கூட்டத்தாரில் முஜஸ்லிமா,முஷப்பிஹா போன்ற பிரிவினர்களின் அவதூறாகும் இவர்களைத்தான் இப்னு தைமிய்யா பின்பற்றியுள்ளார் ) இறைவனுக்கு தகுமில்லாதவையெல்லாம் இறைவனின் பண்புகள் எனச் சொல்லி,ஏகத்துவ கொள்கையில் இடைச் செறுக்கல் செய்து அல்லாஹூ தஆலாவை படைப்பினங்களுக்கு ஒப்பாக்கி விட்டார்
(ஷவாஹிதுல் ஹக் பக்கம் : 168,தப்ஸீருல் வஜீஸ் பக்கம் :80, ஹாஷியாத்திந்நிப்ராஸ் பக்கம் :116,அல்பஸாயிர் பக்கம் :157 )
இப்னு தைமிய்யா முதன்முதலாக இஸ்லாத்தின் கட்டுக்கோப்பை ஏகோபித்த முடிவை தகர்த்தெறிந்து வெளியேறியவர்.முன்பு உலமாக்கள் யாருமே சொல்லாத விஷயங்களையெல்லாம் சொல்ல ஆரம்பித்தார்.
நான் கடைசியாக குறிப்பிட்டிருக்கும் பைஜூல் பாரீ, இதன் உரிமையாளார் அன்வர்ஷா கஷ்மீரீ இவர் புகாரி ஷரீபுக்கு சொன்ன விரிவுரை என்ற குழப்பத்தை இவரது மாணவர் பத்ருத்தீன் மீரட்டி தொகுத்து வெளியிட்டுள்ளதாகும். 
 இதன் முன்னுரையில் அன்வர் ஷா- நான் இஸ்லாமிய கொள்கை விஷயத்தில் இப்னு தைமிய்யாவையும்,மதுஹபில் அபூஹனீஃபா (ரஹ் ) அவர்களையும் பின்பற்றுபவன்.என்று சொல்கிறார் இதன் மூலம் தன்னை முக்கல்லிது வஹ்ஹாபீ ( மதுஹபில் இமாமையும் கொள்கையில் பித்அத்காரர்களையும் பின்பற்றுவர் ) என முன் மொழிந்துள்ளார்.
 (பைஜூல் பாரீ பக்கம் :474, பாகம் 36, பாகம் :4 , பக்கம் 419 )
இப்னுதைமிய்யா முழுக்க ஹதீஸின் போர்வையில் இஸ்லாத்தை, அதன் கோட்படுகளை,கொள்கைகளை நிர்ணயங்களை, சட்ட நூணுக்கங்களை,எப்படியெல்லாம் திரித்து கூறினால் மக்கள் இஸ்லாஅத்தில் பற்றற்று போவார்கள் என்பதை மிகத் தந்திரமாகக் கையாண்டுள்ளார் 
 இப்னு தைமிய்யா :
  •  விந்தையான சிந்தையின் விளை நிலம்  
  •  சிந்தனையற்ற சித்தாந்தம் தந்த சிறுமை
  • முரண்பாடான முடிவுகளின் மொத்த உருவம 
  • மரியாதைக்கு இணைவைத்தல் என பொருள்கொண்ட கோமாளி
  • மரியாதைக்கு வணக்கம் என வலிந்துரைத்த வம்பன்
  • இஸ்லாம் என்ற விளை நிலத்தில் களை இன்ன பிற தீங்குகளின் மொத்த வியாபாரி 
  •  யா அல்லாஹ் எங்களைக் காப்பாயாக ! வல்ல நாயன் இவ்வாறான தடம் புரண்டவர்களின்,மதப்புரட்டர்களின் நச்சுக்கருத்துக்கு ஆளாகி இஸ்லாத்தின் சுன்னத் வல்ஜமாஅத்தின் உயிர் நாடியாய் விளங்க அருள்பளிப்பானாக ! ஆமீன் ,ஆமீன்,ஆமீன் !!!!!!!
 
 
 
 
இன்ஷா அல்லாஹ் தொட

No comments:

Post a Comment