Wednesday, December 4, 2013

                  தப்லீக் ஜமாஅத் வழிகேட்டின் மொத்த உருவம்   



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்கத்துஹூ

குறிப்பு :  


  விருப்பு  & வெறுப்பு அன்றி உணர்ந்து  ஆராய்வோருக்கு இது ஒரு நல்ல விருந்து ...



இன்றைக்கு நம்முடைய சமூகத்தில்  பரவலாகப் பலராலும் பேசப்படுகின்ற ஒரு இயக்கம் தப்லீக் ஜமாஅத் அகும் . நபிமார்கள் செய்த வேலையை வழி காட்டும் ஒரே வழிகாட்டி தப்லீக் ஜமாஅத் என அவ்வியக்கத்தைச் சார்ந்தவர்கள்  மக்களிடத்தில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள் .

பலரும் இதன் பெயரினைக் கேட்டு அதன் வெளிவேஷத்தைக் கண்டு மயங்கி அதனை உண்மையான இயக்கம் எனக் கருதி அதன் பின்னே செல்லமுற்படுகின்றனர் . உண்மையில் இவர்களின்  நோக்கம் என்ன ? மக்களை நேர்வழி படுத்த வந்தார்களா ? இல்லை மக்களை வழிகேடுக்க வந்தார்களா ?  என்றால்  நமக்கு அதிர்ச்சியான விஷையம் தான் காத்துருக்கிறது .


தப்லீக் ஜமாஅத் நிலை :

      முதல் முதலில் இந்தியாவில் வஹ்ஹாபி கொள்கையை பரப்புவதற்க்கு உருவாக்கப்பட்ட இயக்கமே ! தப்லீக் ஜமாஅத் தான் .ஏனென்றால் ? இவ்வியக்கத்தை உருவாக்கிய தலைவர் இல்யாஸ் , அவரது ஆசிரியர்கள் , பேசிய பேச்சுகளும் ,எழுதிய எழுத்துகளும் , இவ்வியக்கத்தின் அசல் நோக்கம் , வஹ்ஹாபிசத்தை பரப்புவது தான் என்பதை தெளிவுபடுத்துகிறது .

தப்லீக் ஜமாஅத் உண்மை  நிலையை தோலுரித்து காட்டுவதற்க்காக .தப்லீக் ஜமாஅத் குறித்து மறுக்க இயலாத உண்மைகளை அந்த இயக்கத்தை உருவாக்கிய தலைவர்களின்  நூல்களில் இருந்தே எடுத்து காட்டி மக்களுக்கு அது ஒரு மோசமான இயக்கம் தான் .அதனைவிட்டு விளகி நடப்பது நம்மின்மீது கடமை தப்லீக் ஜமாஅத் சுன்னத் ஜமாஅத் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள் . 



இந்தியாவில் முதலில் வஹ்ஹாபி கொள்கையை பரப்பியது யார் : ?


பதிமூறாவது நூற்றண்டில் மிக பிறப்பலம் பெற்ற டில்லி மாநகரில் கல்வியில் பேரும் புகழும் வாய்ந்த அஜிஸிய்யாக் குடுப்பத்தில்  ( ஷெய்குனா ஷாஹ் அப்துல் அஸீஸ் முஹத்திது திஹ்லவிய்யி ரஹிமஹூல்லாஹ் அவர்களின் குடும்பத்தில் ) முஹம்மது இஸ்மாயீல் என்றொருவர் பிறந்தார் . இவர் அதிக புத்திக் கூர்மையானவர் . சில சமயம் புத்திக்கூர்மை ஈமானையும் , மார்க்கத்தையும் நாசப்படுத்தும் என்பதை நாம் விளங்க முடிகிறது .

உலத்தில் உள்ள வழிகேடர்கள் எல்லாம் பெறும்பாலும் புத்தி சாலியாக தான் இருப்பார்கள் . என்று இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறினார்கள்  ''  மா தல்ல மன் தல்ல இல்லா பி இஹ்திமாமில் அகல் ''     வழிகேட்டவர்களை எல்லாம் பாருங்கள் பெறும்பாலும்  அறிவுடையவர்களாக இருப்பார்கள் .(உதாரணம் ) காதியானி ஒரு  நல்ல திரமைசாலி ஆனால் கடைசியாக நான் தான் நபி என்று வாதிட்டன் காரணம் அவனுடைய அறிவுதிரன் தான் ,

  மௌலவி   இஸ்மாயீல்  என்பவர் ஹஜ்ஜூக்கு செல்ல நினைத்தார் .அப்போது ஹிஜாஸிக்கு போனார்கள்  , மொளலவி  இஸ்மாயீலுக்கு அங்குதான் வஹ்ஹாபிகளுடைய பிறபல்யமான   '' கிதாபு தவ்ஹீத் ''  என்ற நூல் கிடைத்தது . மௌலவி  இஸ்மாயீல் தான்  '' கிதாபு தவ்ஹீத் ''  என்னும் நூலை  ''  தக்வியத்துல் ஈமான்  ''  என்னும் பெயரில் ஃபார்சியிலும் அதன்  மொழிபெயர்ப்பை உருதுவிலும் எழுதி இந்தியாவில் வஹ்ஹாபிய விஷத்தை தூவினார்.


 மௌலவி  இஸ்மாயீல் , அப்துல் வஹ்ஹாபு நஜ்தியைப் பின்பற்றி மக்கா முஷ்ரிக்கீன்கள் விஷயத்தில் இறங்கிய ஆயத்துகளை எல்லாம் முஸ்லிம்கள் பேயரில்  சுமத்தி ஷிர்க்கைப் போட்டு எல்லா முஸ்லிம்களையும்  முஷ்ரிக்குகள் என்று முடிவு செய்தார் . நபிமார்கள் , இறைநேசர்கள் ,சன்மார்கப் பெரியோர்கள் , எல்லோரையும் பற்றி கடுமையாக, கேவலமாக பேசினார் .

கடைசியாக செருப்புக்கேற்ற ஜோடிச் செருப்பு வாய்ந்தது  என்பதற்கொப்ப முந்தின வஹ்ஹாபியான அப்துல் வஹ்ஹாப் நஜ்தி உடைய கிதாபு தவ்ஹிதில் எவவெற்றை எல்லாம் எழுதியிருந்தாரோ  அவையனைத்தையும் - இல்லை இல்லை அதற்கு மேலும் இந்த  மௌலவி  இஸ்மாயீல் தன்னுடைய தக்வியத்துல் ஈமானில் எழுதிவிட்டார் . மேலும் வஹ்ஹாபிக்கொள்கையைப்  பரப்புவதில்  மௌலவி   இஸ்மாயீல் போக்கு முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபு கையாண்ட வழியாகவே இருந்தது .

முஸ்லிம்களில் சிலர்  மௌலவி   இஸ்மாயீலால் ஏமாற்றமடைந்தார்கள் . சுன்னத் ஜமாஅத்து உலமாக்கள்  மௌலவி  இஸ்மாயீலின்  கொள்கைகளை வெளிப்படுத்தி கொள்கையில் இவரும் வஹஹாபிகளேதான் என்பதை முஸ்லிம் மக்களுக்கு தெளிவாக எடுத்துக் காட்டினார்கள் . உண்மையை உணர்ந்த முஸ்லிம்கள் இவர்களை விட்டு  வெருண்டோடினார்கள் , முடிவாக வஹ்ஹாபிக் கொள்கை முஸ்லிம்களில் ஒப்புக்கொள்ளப்படாமல் போய்விட்டது .

இவ்வாறாக ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டாகியும்  இந்தியாவில்  வஹ்ஹாபிய்யாக்களுடைய முயற்சிக்ளெல்லாம் பலனற்றுப் போய்விட்டது ? . இதைபார்த்த வஹ்ஹாபிய்யாக் கூட்டத்தார்கள் எப்படி நாம் மக்களுக்கு மத்தியில் நம்முடைய கொள்கையை பறப்புவது , எந்த வேடத்தில் போனால்  நம்முடைய  கொள்கையை பறப்பமுடியும் ,  என்று சிந்திக்க அறம்பித்தார்கள் வஹ்ஹாபிய்யாக் கூட்டத்தார்களில் மௌலவி  இல்யாஸ் என்ற பெயருடையவர் ஒரு கூட்டத்தை உற்பத்தி செய்து  அந்த கூட்டத்திற்க்கு ''   தப்லீக் ஜமாஅத்   '' என்று பெயர் சுட்டினார் .

வஹ்ஹாபி உலமாக்களையும் , பிரசங்கிகளையும் , ஒன்று கூட்டினார் . வஹ்ஹாபிக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதற்க்கு தடங்கல் ஏற்படாதவாறு , பொது ஜனங்கள் இக்கொள்கைகளைச் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளக்கூடியவாறும் சில திட்டங்களை ஏற்படுத்தினார் .



தப்லீக் ஜமாஅத் தோற்றம் & தோற்றியவர்கள் 



தப்லீக் ஜமாஅத்தின் தோற்றம் 1938 ல் வட இந்தியாவைச் சேர்ந்த மௌலவி  இல்யாஸ் அவரால் உருவாக்கப்பட்ட இயக்கமே தப்லீக் ஜமாஅத்தாகும் ,

மௌலவி இல்யாஸின் குருமார்கள்

  1. மௌலவி  இஸ்மாயீல்  தெஹ்லவி 
  2. மௌலவி  காசிம் நானுத்தவி
  3. மௌலவி  கலீல் அஹ்மத் அம்பேட்டி 
  4. மௌலவி  ரஷித் அஹ்மத் கங்கோஹி 
  5. மௌலவி  அஷ்ரஃப் அலி தானவி  



தப்லீக் ஜமாஅத் என்பது கலிமா , தொழுகை , பற்றி இஸ்லாமிய மக்களிடம் உபதேசம் செய்து மக்களை நல்வழி படுத்துகிறோம் , எங்களுக்கு எந்த கொள்கைகளைப் பற்றியும் , பேசவோ , வாதிக்கவோ ,  நோக்கம் மில்லை , நேரம் மில்லை , என்று இவர்கள் வெளியில் சொல்லிக்கொள்ளவும் செய்வார்கள் . ஆனாலும் இந்த தப்லீக் ஜமாஅத்தை உண்டாக்கிய மௌலவி இல்யாஸின் வார்த்தைகளையும் & எழுத்துக்களையும் , பார்த்த பின் , கேட்ட பின் இவர்களின் நாட்டம் கலிமா , தொழுகைகளைச் சரியாகச் செய்யும்படி போதிப்பது மட்டுமில்லை . 

அத்துடன் பொதுமக்களைத் தங்கலுடைய கொள்கையில் கொண்டு திருப்பி வஹ்ஹாபிய்யாக் கொள்கையைப் பரப்புவது தான் அவர்களுடைய குறிக்கோள் , நோக்கம்  , என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள் . 
                                      விரைவில் ....  அதாவது இந்த கட்டுரையை படித்து முடிக்கும் போது இன்ஷா அல்லாஹ் ......


குர்ஆன் & ஹதீஸ் மூலம் தப்லீக் ஜமாஅத் பற்றிய ஆய்வு





தப்லீக் ஜமாஅத் இயக்கம்   சுன்னத் ஜமாஅத் அல்ல 


குழப்பங்களும் , சோதனையும் , நிறைந்த இக்காலத்தில் புதிய புதிய கொள்கையுடையவர்கள் , விதற்பமான கூட்டத்தார்களும் , வருவது திகைப்பையும் , ஆச்சரியத்தையும் , கொடுக்க கூடிய விஷயமல்ல !எனென்றால் ? ஏறக்குறைய '' 1400 ''  ஆண்டுகளுக்கு முன்னதகவே  '' நபிகள் கோமான் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள்  இப்படி பட்ட   புதிய கூட்டத்தார்கள் தோன்றுவார்கள் என்பதை பற்றி முன்னறிவிப்பு கூறி எச்சரிக்கை  செய்து உள்ளர்கள் .

ஹதீஸ் : 1 


நபிகள் கோமான் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : யூதர்கள் எழுபத்தோரு கூட்டமாக அல்லது எழுபத்திரண்டு கூட்டமாக பிரிந்தார்கள்  , அப்படியே கிருஸ்துவர்களும் , என்னுடைய உம்மத்துகள் எழுபத்தி மூன்று கூட்டங்களாக பிரிவார்கள் 

(அறிவித்தவர் : அபூ ஹூரைரா ரலியல்லாஹூ அன்ஹூ , நூல் : திருமிதி )

ஹதீஸ் : 2 


   நபிகள் கோமான் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் :  இஸ்ரவேலர்கள் எ ழுபத்திரண்டு கூட்டங்களாக பிரிந்தார்கள் , என்னுடைய உம்மத்துக்கள் எழுபத்தி மூன்று கூட்டங்களாக பிரிவார்கள் . ஒரு கூட்டத்தாரை தவிர மற்றெல்லாக் கூட்டத்தார்களும் நரகவாதிகள் , யா ரஸூலுல்லாஹ் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அந்த ஒரு கூட்டத்தார் யார் ? என ஸஹாபாக்கள்  கேட்டார்கள் : நானும் என்னுடைய ஸஹாபாக்களும் எந்த கொள்கையிலிருக்கிறோமோ . அந்த கொள்கையுடையவர்கள் .

 (அறிவித்தவர் : உமர்   ரலியல்லாஹூ அன்ஹூ , நூல் : திருமிதி )



  ''  நானும்  என்னுடைய ஸஹாபாக்களும் இருக்கிற கொள்கைய் இருப்பவர்கள்  ''   என்று  நபிகள் கோமான் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : அல்லவா அந்த ஒரு கூட்டம் எது என்பதை பற்றிய விளக்கத்தை ''  மிஷ்காத்து  ஷரீஃபின் விரிவுரையான  '' மிர்காத்து '' என்னும் கிரந்தத்தில் அதன் ஆசிரியர்  '' முல்லா அலி காரீ ''  ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் சொல்கிறார்கள் :                                   

    لا شك و لا رىب انهم اهل السنة والجماعة      



''அவர்கள் சுன்னத் வல் ஜமாஅத் அந்தக் கூட்டத்தார்கள்  என்பதில்  எவ்வித சந்தேகமோ , ஐயப்பாடோ கிடையாது ''  

மேலே கூறப்பட்ட ஹதீஸிகளில் ஈடேற்றம் பெறுகிறவர்கள் சுன்னத் ஜமாஅத் கூட்டம் ஒன்றுதான் .மற்றகூட்டத்தார்களெல்லாம் நரகவாதிகள் என்று நமக்கு தெரியவருவது போல நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லாம் அவர்களுடைய உம்மத்து பல வகையாகப் பிரிவார்கள் .அவர்களில் பலதரப்பட்ட கொள்கையுடைவர்கள் தோன்றுவார்கள் என்றும் தெரியவருகிறது .

 நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லாம் அவர்களுடைய முன்னறிவுப்பின் பிரகாரம் பல கூட்டங்கள் வந்து பெயர் மறையும் புதைகுழியில் மறைக்கப்பட்டு இன்று பொதுஜனங்களுக்கு அவற்றின் பெயர் கூடத் தெரியாத அளவுக்கு மாண்டு மறைந்து போனது .

ஆனால் சில கூட்டத்தார்கள் இன்று வரையும் பொது மக்களை ஏமாற்றி வழிகெடுக்கக் கூடிய வேலையிலேயே கண்ணும் கருத்து மாயிருக்கிறார்கள் அத்தகைய கூட்டத்தார்களில் வஹ்ஹாபியக் கூட்டத்தார்கள் மிக முக்கியமானவர்கள் .



தப்லீக் ஜமாஅத்தை கண்டால் தூரவிலகு :





 நபிகள் கோமான் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் வழிகேடான கூட்டத்தினரை விட்டுத் தூரவிலகி இருக்கும் படி சொல்லி இருக்கிறார்கள் . அப்படி விலகி இருப்பதன் மூலமாகத்தான் நம்முடைய ஈமானை பதுகாத்து கொள்ளவும் தீனுஸ் இஸ்லாத்தை பேணிக் கொள்ளமுடியும் . 

ஹதீஸ் : 1


                   ان الني صل الله علىه و سلم قال فاياكم و اياهم لا يضلونكم لا يفتنونكم  


                                                    ( رواه مسلم )



நபிகள் கோமான் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : '' நீங்கள் அந்த வழிகெட்ட கூட்டங்களை விட்டும் தூர விலகி இருங்கள் ; அவர்களை உங்களிடம் வரவிடாதீர்கள் . அப்படியானால் அவர்கள்  உங்களை வழிகெடுக்கவோ , உங்களை ஃபித்னாவில் ஆக்கவோ முடியாது '' 

நமக்கு இந்த ஹதீஸிலிருந்து கிடைக்கும் கருத்து : 

கெட்ட கூட்டங்கள் , தீயகொள்கைக்காரர்கள் உடைய தீங்கு பாதிக்காமல் நீங்கள் உங்களைக்  காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால் உங்களை  அவர்களின் சகவாசத்தை விட்டு அகற்றித் தடுத்துக்கொள்ளுங்கள் என்பதாகும் .

ஹதீஸ் : 2 


عن ابي موسي الاشعري رضي الله عنه عن النيي صل الله عليه و سلم قال انما مثل الجليس الصالح وجليس السؤ كحامل المسك ونافخ الكيرفحامل  المسك اما ان يهديك وانما ان تبتاع منه واما ان تجد منه ريحاطيبة ونافخ الكير اما ان يحرق ثيابك و اما  ان  تجد منه ريحا خبيثة                                                         

                                          

                                          ( رواه بخاري, مسلم    )        


 நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : நல்ல நண்பனுக்கும் கெட்ட நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவனையும் , கொல்லன் உலை ஊதுபவனையும் போன்றாகும் .கஸ்தூரியை வைத்திருப்பவன் ஒன்று உனக்கு கஸ்தூரியைத் தருவான் . அல்லது  நீ அதை அவனிடத்தில் ( பணத்திர்க்கு ) வாங்குவாய் இல்லாவிட்டாலும் கஸ்தூரியின் நல்ல வாடையையாவது பெற்றுக்கொள்வாய் . கொல்லன் உலையை ஊதுபவனோ உன்னுடைய ஆடையைக் கரித்துப் போடுவான் . இல்லாவிடில் அதிலிருந்து துர்வாடையையாவது பெற்றுக்கொள்வாய் .

(அறிவித்தவர் : அபூமூஸல் அஷரிய்யி ரலியல்லஹூ அன்ஹூ   நூல் : புகாரி , முஸ்லிம் )


ஹதீஸின் கருத்து : 



  நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் ஓர் உதாரணம் கூறி உபதேசம் செய்திருக்கார்கள் . நல்ல குணம் நல்ல கொள்கையுடையவர்களின் நேசம் , சகவாசம் மனிதனுக்கு  எந்த விதத்திலும் பிரயோசனம் செய்யக்கூடிய தாக இருக்கிறதோ அதுபோல கெட்ட்வர்களின் கெட்டகொள்கையுடையவர்களுடைய நேசம் , சகவாமும் மனிதனுக்கு எந்த வகையிலும் தங்கடம் செய்யக்கூடியதாகவே இருக்கும் மென்பதை தெளிவு படுத்தியிருக்கிறார்கள் ;     


ஹதீஸ் : 3 


عن انس رضي الله قال قال رسول الله صلي الله عليه و سلم مثل جليس السوع كمثل صاحب الكيران لم يصبك من سواده اصابك من دخانه
   
  رواه   ابوداؤد, 

நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : கெட்டவனோடு சிநேகம் வைப்பவனாகிறவன் கொல்லனுடைய உலையண்டையில் இருப்பவனைப் போலாவான் . அதன் கரி  உன்னைத் தொடாது போனாலும் அதன் புகையாவது உன்னைத் தொடும் .


(அறிவித்தவர் : அனஸ் ரலியல்லாஹூ அன்ஹூ   ,  நூல் : அபூதாவுத் )


ஹதீஸின் கருத்து :

    கெட்டவருடைய சகவாசத்தாலும் , வழிகேடருடைய உறவாலும் மனிதன் வழிகெட்டுப் போகாவிடினும் வழிகேட்டின் குணப்பாட்டையாவது அவசியம் ஏற்றுக்கொள்ளவும் , கொள்கையில் கெட்டுப்போகவும் நேரும் .  

ஹதீஸ்  : 4


عن الني صلي الله عليه وسلم من مشي الي صاحب بدعة ليوقره فقد اعان علي هدم الاسلام
رواه  , الطبراني  




'' கெட்டகொள்கைக்காரர்களை சங்கை செய்வதற்காக அவர்களோடு நடப்பவன் நிச்சயமாக இஸ்லாம் மார்க்கத்தை உடைத்துத் தகர்த்துப் போடுவதற்கு உதவி செய்தவனாகிறான் '' 



அறிவிப்பவர் : முஆஃத் ரலியல்லாஹூ அன்ஹூ   நூல் : தப்ரானி 



ஹதீஸ் : 5 


                                          عن الني صلي الله عليه وسلم وان لقيتموهم فلا تسلموهم
                      
                               رواه ابن ماجه 


''
அவர்களைக் ( கெட்ட கொள்கைக்காரர்களை ) சந்திப்பீர்களேயானால் அவ்ர்களுக்கு ஸலாம் சொல்லாதீர்கள் ''

(அறிவித்தவர் : ஜாபிர் ரலியல்லாஹூ அன்ஹூ  நூல் : இப்னு மாஜா )

ஹதீஸ் : 6 


                                       عن الني صلي الله عليه وسلم وان مرضوا فلا تعودوهم وان ماتوا فلاتشهدوهم


                                                            رواه ابوداؤد٩

'' அவர்கள் வியாதியஸ்தர்களாக இருந்தால் நோய்விசாரிக்கப் போகதீர்கள் , அவர்கள் மரணித்துவிட்டால் அவ்ர்களுடைய ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்ளாதீர்கள் ''

(அறிவித்தவர் : இப்னு உமர் ரலியல்லாஹூ அன்ஹூ  நூல் : அபூதாவுத் )

மேலே குறிப்பிட்ட ஹதீஸ்களை நன்கு சிந்தித்து உண்மையை உணர்ந்து இதயத்தில் பதியவைத்து தீய கூட்டத்தினரின் உறவையும் , பந்தத்தையும் , அகற்றி நல்லோர்களான சுன்னத் ஜமாஅத்தார்களுடனேயே சகவாசம் பூண்டிருப்பிர்களாக . இன்ஷா அல்லாஹூ தொடரும் ...



நாம் தப்லீக் ஜமாஅத்தை ஏன்  வழிகேடு என்கிறோம் :  


நம்மைப் பார்த்து ஷிர்க் செய்பவர்கள் , பித்அத் செய்பவர்கள் , கப்ர் வணங்கிகள் , என்று வசைப்பாடுவதால் தப்லீக் ஜமாஅத்தை வழிகெட்ட கூட்டம் என்று நாம் கூறுவது இல்லை மாறாக தப்லீக் ஜமாஅத்தை நாம் வழிகேடர்கள் என்று கூறுவது இஸ்லாத்தின் உயிர் நாடியான( அசலான ) அடிப்படைக் கொள்கை கோட்பாடுகளிலேயே  அவர்கள் கைவைத்ததுதான் அதாவது நமது உயிருக்கும் மேலான எம்பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மரியாதைக்கு  பங்கம் விளைவிக்கும் விதமாக பேசியிருப்பதாலும் , எழுதியிருப்பதாலும் , இன்னும் அந்த கிதாபுகளை ( புக்குகளை ) அச்சிட்டு கொடுப்பதாலும் தான் நாம் அவர்களை வழிகெட்ட கூட்டம் என்கிறோம் . 

ஏனெனில் குர்ஆனில் அல்லாஹூத்தஆலா நேர்வழியில் நடக்க வேண்டும் மென்று மட்டும் கட்டளையிடவில்லை , வழிகெட்டோரின் வழியை விட்டுதப்பிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறான் . ஆகவே இஸ்லாத்தின் அசல் , அடிப்படை கோட்பாடுகளில் கைவைக்கும்   . தப்லீக் ஜமாஅத்தினரின் . வேடத்தைதோலுரித்துக்காட்ட வேண்டிய நமது கடமையாகும் .

தப்லீக் ஜமாஅத்தை உருவாக்கிய தலைவர்களின் கூற்றுகளை & எழுதியிருப்பதை  காணும் எந்த ஒரு முஸ்லிமுகளும் அவர்களை  நேர்வழியிலுள்ளவர்கள் என்று சொல்லமாட்டார்கள் . சுன்னத் ஜமாஅத்  உலமாக்களை ( நம்மை ) என்னக்குறை  பேசினாலும் பரவாயில்லை . நம்மை பற்றி என்ன எழுதினாலும்  கவலையில்லை . இஸ்லாத்தின் அசல் அடிப்படைக் கொள்கை கோட்பாடுகளில் , நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவரகளின் மரியாதை  விஷயத்தில் கை வைப்பவர்கள் , 

  • காதியானிகளாக இருந்தாலும் சரி 
  • தேவ்பந்திய தப்லீக் ஜமாஆத்தாக இருந்தாலும் சரி 
  • தவ்ஹித் ஜமாஅத்தாக இருந்தாலும் சரி 
  • நூரிஷா மற்றும் அவர்களை சார்ந்த கலிஃபக்கலான பைஜிஷா , ஆமிரிஷா , ஜமாலிஷா போலி தரீக்காவக இருந்தாலும் சரி 
  • இந்திய தவ்ஹித் ஜமாஅத்தாக இருந்தாலும் சரி 
  • தமுமுக இருந்தாலும் சரி 
  • ஜாக்காக இருந்தாலும் சரி 
  • அஹ்லே குர் ஆனாக இருந்தாலும் சரி 
  • அஹ்லே ஹதீஸாக இருந்தாலும் சரி 
  • ஃபாபுலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவாக இருந்தாலும் சரி 
  • தாருல் ஹூதாவாக இருந்தாலும் சரி 
  • தாருல் அர்கம்மாக இருந்தாலும் சரி 
  • ஜமாஅத்தே இஸ்லாமியாக இருந்தாலும் சரி 
  • மர்கசுஸ் ஸலாமாக இருந்தாலும் சரி 

  • எந்தப் பிரிவினராக இருந்தாலும் சரி 
அவர்களது கருத்துக்களைக் கண்ணுற்ற நம்மால்  நம்மால் மௌனம் கொள்ளமுடியாது . 

உங்கள் கேள்வி :

        எந்த உலமாக்கள் சம்பந்தமாக சர்ச்சை நடக்கிறதோ அவர்களெல்லாம் மவ்த்தாகி விட்டார்கள்.ஆனால் கை சேதம் இன்னும் அவர்களால் (தப்லீக் தலைவர்களால் ) ஒரு தரப்பினருக்கிடையில் கருத்து மோதல் நீடிக்கிறது. 

நீங்கள் சொல்வது உண்மைதான்.என்றாலும் சர்ச்சை அந்த மரணித்து விட்ட பெரியார்களின் தனிப்பட்ட சொந்த விஷயங்களில் அல்ல.மாறாக,அவர்கள்  நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை பற்றி தரக்குறைவாக எழுதியிருப்பதால்தான்.ஆகவே தப்லீக்தலைவர்களின் கருத்துக்கு இஸ்லாம் வழங்கும் தீர்வு என்ன என்பதை ஃபத்வாக வெளிப்படுத்தாமல் சர்ச்சை ஓயப்போவதில்லை.


உலகில் உள்ள உலமா பெருமக்கள் வழங்கிய சில ஃபத்வாக்கள் ( மார்க்கத் தீர்ப்புகள் ) மட்டும் பாருங்கள் :

  1. மக்கா,மதினாவிலுள்ள 34 மபெரும் மார்க்க மேதைகள் '' ஹூஷாமுள் ஹரமைன் அலா மன்ஹரில் குஃப்ரிவல்மைன் "என்ற தலைப்பில் ஹிஜ்ரி 1324 ல் ரஷீது அஹ்மது கங்கோஹி,கலீல் அஹ்ம்மது அம்பேட்டி,அஷ்ரஃப் அலி தானவி ( இல்யாஸின் குரு )ஆகியோர்கள் காஃபிர்கள் என ஃபத்வா தந்துள்ளார்கள்.
  2. இந்தியாவின் பல பாகங்களிலிருந்து சங்கைக்குரிய 268 உலமாக்கள்  '' அஸ்ஷவாரிமுல் இந்தியா '' என்ற தலைப்பில் மேற்கூறப்பட்டவர்கள் காபிர்கள்,முர்த்ததுகள் என்ற மார்க்கத் தீர்ப்பு ஹிஜ்ரி 1345 ல் வழங்கியுள்ளார்கள் .
  3. இந்தியாவிலுள்ள 45 உலமாக்கள் '' அல் அதாபுல் பஃஸ்அலாரஃஷி இல்யாஸ் '' என்ற தலைப்பில் ஹிஜ்ரி 1327 -ல் இல்யாஸ் காஃபிர் என்று ஃபத்வா கொடுத்துள்ளார்கள்.
  4. வேலூர் பாக்கியாத்துஸ்சாலிஹாத் அரபிக் கல்லூரி முன்னால் முதல்வரும்,சென்னை மாநில ஜமாத்துல் உலமா சபை நிரந்தர கௌரவத் தலைவருமான மௌலானா.மௌலவி.அல்லாமா முஃப்தில் அஃலம் செய்ஹூ ஆதம் ஹஜரத் அவர்கள் அவர்களும்,கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் தப்லீக் ஜமாஅத்தில் சேரக் கூடாது.அது ஒரு நூதன வழிகெட்ட கூட்டம் என ஃபத்வா கொடுத்துள்ளார்கள்.
  5. தமிழ்நாடு அரசு முன்னாள் பிரதம காஜி.மௌலானா அல்லாமா முஃப்தி முஹம்மது ஹபீபுல்லாஹ் ஹஜரத் அவர்கள் '' தப்லீக்  ஜமாத்கீ  அஸ்லியத் '' என்ற தலைப்பில் இல்யாஸ் தப்லீக்கில் சேரகூடாது அது வழிகேடானது என ஃபத்வா கொடுத்துள்ளார்கள் 
  6. மஹாராஸ்டிய மாநில அரசாங்க காஜியும் கூட இல்யாஸ் தப்லீக்கை எதிர்த்து ஃபத்வா கொடுத்துள்ளார்கள்.
  7. தப்லீக்ஜமாஅத்துக்கும் இஸ்லாத்துக்கும் சம்மந்தமில்லை என்றுதான் தீர்ப்பு வந்தது ஜர்ஜீமெண்ட் NO,CC 2799/77 .
  8. சமஸ்தே கேரள ஜமீயத்துல் உலமா சபை ஃபத்வா கமிட்டி தப்லீக் ஜமாஅத்தார்களின் சகல நூல்களையும் ஆராய்ந்து தீர்வு கண்டு இந்த இல்யாஸின் தப்லீக் ஜமாத்தில் சேரக்கூடாது என்று 1965-ல் ஃபத்வா தந்துள்ளது.இந்த ஃபத்வா 10-11-1965 கேரள '' சந்திரிகா'' இதழில் வெளிவண்துள்ளது .
ஏன் ? எதற்க்கு ? இப்படி ஃபத்வாக்கள் கொடுத்துள்ளார்கள்,இதற்க்கு என்ன காரணம் இல்யாஸ் அவர்களின் ஆசிரியர்கள் ஒரு சில கூற்றை எடித்துக்காட்டுகிறேன்.ஏன் ? என்றால் தமிழில் ஒரு பலமொழி சொல்வார்கள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இவர்கள் வழிகெட்ட கொள்கையை பற்றி உங்களுக்கு தெரியும் ஏன் இவர்களை காஃபிர் என்று சொல்கிறார்கள்.என்பதை விளங்கிகொள்வீர்கள்.

1.  மௌலவி காசிம் நானுத்தவி இவர் தேவ்பந்த் மதரஸாவின் ஸ்தாபகரும்,தேவ்பந்திய கூட்டத்தின் முதல் இமாமும் ஆவார் : 

இவர் அவலச்சனத்தை பாருங்கள் : தேவ்பந்தீயான காசிம் நானூத்தவி தமது தஹ்தீருந்தாஸ் என்னும் நூலில் 24-ல் ( ஹஜ்ரி 1290-ம் ஆண்டு வெளியீட்டில் ) '' ஒரு வேளை நபிஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திற்குப்பின் யாராவது ஒருவர் தன்னை நபி என்று வாதித்தால் அதனால் முஹம்மத் நபியவர்கள் இறுதி நபி இல்லை என்பதல்ல.மாறாக அவர்களது காலத்தில் அவர்களது பூமியில் அவார்கள் இறுதி நபி.ஒரு வேளை  வேறொரு நபி வந்தால்,அவர் அவரது காலத்தில்,அவரது பூமியில் அவர் இறுதி நபியாக இருப்பார் '' என இஸ்மாயில் தெஹ்லவி சொன்னதை காசிம் நானூத்தாவி தெளிவாகவே கூறினார்.இதன் காரணமாகவே இவர் மிது காஃபிர் ஃபத்வா கொடுக்க்ப்பட்டது.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் எக்காலத்திலும்,எந்த பூமியுலும் எந்த நபியும் வரப் போவதில்லை என்பது குர்ஆன் & ஹதீஸ் அடிப்படையில் அமைந்த ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களின் இஜ்மாவான கொள்கையாகும்.

மிர்ஜா குலாம் அஹ்மத் காதியானி : இந்த வழிகெட்ட தேவ்பந்தீய ( தப்லீக் )ஜமாஅத் கூறிய இதே விளக்கத்தைக் கூறித்தான் வழிகெட்ட காதியானிகளின் தலைவன் மிர்ஜா குலாம் அஹ்மத் தன்னை நபி என்று வாதிட்டான்.இதன் காரணமாக இவர் மீது காஃபிர் என கொடுக்கப்பட்டது.

இருபிரிவினருக்குமிடையில் இவ்விஷயத்தில் ஒரே ஒரு வித்தியாசம் தான்.அதாவது தேவ்பந்தீகள் நபிகளாருக்குப் பின் ஒரு நபியின் வருகை சாத்தியம் என்றார்கள்.காதியானி நபிகளாருக்கும் பின் நபி சாத்தியம்தான்.அந்த நபி நான்தான் என்று கூறினான். 

காதியானிகளை வழிகேடர்கள்,காஃபிர்கள் என்று தேவ்பந்திகளும் கூறுகின்றானர்.ஆனல் காதியானிகள் நாயகத்திற்குப் பின் நபி இருப்பது சாத்தியம் என்பதற்கு தேவ்பண்ஹ்தீ காஸிம் நானூத்தவியின் தஹ்தீருன் நாஸையே ஆதாரமாக எடுத்துக் காட்டினார்.

என்ன ! வேடிக்கையான விஷயம் பாருங்கள்.தவறான கொள்கையுடைய வழிகேடர்களை ஒதுக்க வேண்டிய சமூதாயத்தின் தலைவர்களான இஸ்லாத்தின் காவலாளான உலமாக்களின் கடமை.ஆனால் அந்தோ பரிதாபம்.இந்த வழிகெட்ட தேவ்பந்தீகளின் கொள்கைக் காவலாளிகளான உலமாக்கள் சிலர் : '' ஏதோ ஒரு சில இடத்தில் அப்படிக் கூறினார்கள் என்பதற்காக தேவ்பந்தீய (தப்லீக் ) உலமாக்களை வழிகேடர்கள் என்று கூறாதீர்கள் அவர்கள் பல இடங்களில் பல சமயங்களில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் நபி இல்லை என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் "" என்று வக்காலத்து வாங்குகிறார்கள். 

இன்னும் சிலரோ '' அவர்கள் அந்த அர்த்தத்தில் கூறவில்லை.மக்கள் அதை தவறாக விளங்கிக் கொண்டனர் '' என்று வியாக்கியானம் பேசுகின்றார்கள்.இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராக இவ்வளவு தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.இதைக் கூட விளங்கிக் கொள்ளமுடியாத அளவிற்கு முஸ்லிம்கள் முழுமுட்டாள்களாகி விட்டார்கள் என்று  நினைக்கிறார்களா ? மேலும் 10,000 முறை நாயகம்தான் இறுதி நபி என்று கூறினாலும் ஒரு தடவை நாயகத்திற்குப்பின்  நபி சாத்தியமென்று கூறினால் அதற்குப் பெயர் நேர்வழியா ? ஏன் ? மிர்ஜா குலாம் அஹ்மத் காதியானி கூட பல இடங்களில்   நாயகத்தின் இறுதி நபித்துவத்தை உண்மை என்று கூறியாதாக வந்துள்ளது தான்.அதற்காக அவர் நாயகத்திற்கு பின்பு நபி சாத்தியம் என்று கூறியதையும்,தான் நபி என்று வாதிட்டதையும் ஏற்றுக் கொள்ள முடியுமா ? 

2 : மௌலவி கலீல் அஹ்மத் அம்பேட்டி :மௌலவி இல்யாஸ் காந்தலவியின் இரண்டாவது குருவும் ஆவார் 

'' பராஹீனே காத்திஆ ''  என்ற நூலை கலீல் அஹ்மத் அம்பேட்டி வெளியிட்டார்.அதில் பல தவறான கொள்கைகள் பேசப்பட்டிருப்பதுடன் கீழ்கண்டவாறும் கூறப்பட்டுள்ளது.

ஷைத்தானும்க்கும்,மலக்குல் மவ்த்தான இஜ்ராயீல் அலைஹிஸ்ஸலாமுக்கும் எல்லா மனிதர்களின் நிலையையும் அறியக்ககூடிய கல்வி இருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு அந்தளவு கல்வி நபிகள் நாயகத்திற்குமிருக்குறது என்று கூறுவது சரியான ஆதாரமாக அமையாது ஏனெனில் ஷைத்தானுக்கும்,இஜ்ராயீல் அலைஹிஸலாம் அவரக்ளுக்கும் எல்லா மனிதர்களின் நிலையையும் அறியும் கல்வி இருப்பது குர்ஆனில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிற்து.
ஆனால் நபிகளாருக்கு அந்தளவிற்கு அறிவு உள்ளதற்கு குர்ஆனில் என்ன ஆதாரமிருக்கிறது ?  (  பராஹீனே காதிஆ பக்கம் 51 ) 

 நஊதுபில்லாஹ் ! அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் நபிகளாரின் இல்ம் கல்வி ஞானத்தில் குறைகாண்பதில் எப்படி துனிச்சல் வந்திருக்கிறது பாருங்கள் ! 

நாயகமே ! தாங்கள் அறிந்திராத அனைத்தையும் தங்களுக்கு கற்பித்து விட்டோம் என்றும்,பல வசனங்களின் மூலமும் சஹீஹான ஹதீஸ்களின் மூலமும் கல்வியில் நபிகளாரை விஞ்சியவர் எவருமில்லை.அல்லாஹ்வின் படைப்புககளிலேயே,நபிமார்களிலேயே மிக மிக மேன்மைக்குரியவர்களும்,மிக மிக அதிகமாக கல்வி,ஞானம் வழங்கப்பட்டவர்களும் நமது கண்மனி  நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் என்பதை தெளிவாகச் சொல்ல்ப்பட்டிருப்பதும்,அதுவே ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் கொள்கையாக இருந்தும்,ஷைத்தானுடைய கல்வியை விட நபிகளாருக்கு அதிக கல்வி ஞானமுண்டு என்று தெளிவாக கூறப்பட்டால் தான் இவர்களை ஏற்றுக்கொள்வார்களாம் ? 

நபிகளாரின் கல்வி,ஞானத்தோடு அல்லாஹ்வின் சாபத்திற்குறிய ஷைத்தானின் கல்வி ஒப்பிடுவதே மிகப் பெரிய வழிகேட்டுத்தனமில்லையா ? அதிலும் ஷைத்தானுடைய கல்வியை விட நபிகளாரின் கல்வி,ஞானம் அதிகம் என்பதற்கு ஆதாரமில்லை என்று கூறியிருப்பது எவ்வளவு பெரிய வழிகேடு ? 

இறுதி நபித்துவத்திற்கும்,எல்லா படைப்புகளை விடவும் அதிக கல்வி,ஞானம் பெறுவதற்கும் நமது ரசூல் எந்த விதத்தில் குறைந்து போய் விட்டார்கள் ? நம் ரசூல் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை தரந்தாழ்த்திப் பேசுவதற்கு எப்படி அவர்களுக்கு தைரியம் வருகிறது ? இதன் காரணமாகவே இவர் மீது கஃபிர் என ஃபத்வா கொடுக்கப்பட்டது.

3 : மௌலவி ரஷித் அஹ்மத் கங்கோஹி இவரிடமே இல்யாஸ் 10 வருடங்கள் கல்வி பயின்றுள்ளார் 

இந்திய வஹ்ஹாபிய குழுவின் தலைவர் இஸ்மாயில் தெஹ்லவீயை பின்பற்றி முதலாவதாக அல்லாஹ் பொய் சொல்லுவது இடம்பாடுதான் ( சாத்தியம்தான் ) என்று சொன்னர்.பின்னர் அவர் கையொப்பதோடு ஒரு ஃபத்வா  (இது பம்பாயில் அச்சடிக்கப்பட்டது அதை பல போட்டோ காப்பிகள் எடுக்கப்பட்டது.மதீனா ஷரீஃபிலும் ஒரு காப்பி இருக்கிறது ) அதில் அவர் சொல்கிறார் அல்லாஹ் பொய் சொன்னதாக நம்பி அல்லாஹ் பொய் சொல்லி விட்டான்,இந்த குறைபாடு அல்லாஹ்விட்த்தில் ஏற்பட்டுவிட்டது.என்று ஒருவன் சொன்னால் அவனை காஃபிர் என்று சொல்லுவது இருக்கட்டும்.அவனை ஃபாஸிக் ( கெட்டவன் )என்றும் கூட சொல்லாதீர்கள்.ஏனென்றால் அநேக உலமாக்கள் அப்படி அவன் சொன்னது போல் சொல்லியுருக்கிறார்கள்.

இவ்வாறு அல்லஹ்வின் பரிசுத்தத்தின் மீதே இந்த தேவ்பந்தி ஆலிம் குறை காணுகிறார்கள்.இதன் காரணமாகவே இவர்மீது காஃபிர் என ஃபத்வா கொடுக்கப்பட்டது. இன்னும் இவர் வழிகெட்ட வஹ்ஹாபிய்ய ஜமாஅத்தின் தலைவர் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் நஜதியை நல்லவர் என்றும் வல்லவர் என்றும் புகழ்ந்து தள்ளுகிறார்.அந்த வழிகேடன் எழுதிய கிதாப் தௌஹீத் என்னும் நூலை ஒவ்வொரு முஸ்லீமும் படிப்பதும் பின்பற்றுவதும் அவசியம் என்று வஹ்ஹாபிய்யத்திற்க்கு வக்காலத்து வாங்குகிறார்.இன்னும் மீலாது நபி கூடாது நேர்சைகளை சாப்பிடுவது ஹராம் ஆனால் காகத்தை சாப்பிடுவது கூடும் என்று பல தவறான ஃபத்வாக்கள் கொடுத்தவர்.இவை அனைத்தையும் ஃபதாவா ரஷீதிய்யா என்னும் நூலில் காணலாம்.

4 ;மௌலன அஷ்ரஃப் அலி தானவி : தப்லீக் ஜமாஅத்தின் மூலம் அஷ்ரஃப் அலி தானவியின் கொள்கையை பரவலாக்க விருப்புகிறேன் என்று தப்லீக் ஜமாத்தின் ஸ்தாபகர் மௌலவி இல்யாஸ் காந்தலவி யாரை குறித்து பேசினாரோ அந்த நபரே இவர் 

ஹிஜ்ரி 1319-ல் கிபி 1901-ல் அஷ்ரஃப் அலி தானவி ஹிப்ளுல் ஈமான் என்னும் ஒரு நூலை எழுதி வெளியிட்டார்.அதில் எழுதுகிறார்.

நபிகளாருக்கு மறைவான விஷயங்களை அறியக் கூடிய ஞானம் உண்டு என்று ஏதோ ஒரு ஆதாரப்படி எடுத்துக் கொண்டாலும் நபிகளாருக்கு மறைவான விஷயங்கள் எல்லாமே தெரியுமா ? அல்லது ஒரு சில விஷயங்கள் மட்டும் தான் தெரியுமா ? ஏனெனில் ஒரு சில விஷயங்கள் தான் தெரியும் என்று எடுத்துக் கொண்டால் அதில் நபிகளாருக்கு என்ன தனிச் சிறப்பு இருக்கிறது ?ஒரு சில மறைவான வஷயங்கள் சாதாரண மனிதார்கள்,குழந்தைகள்,பைத்தியங்கள்,இவ்வள்வு ஏன் கால் நடைகள்,மிருகங்களுக்குக் கூடத் தெரியுமே! 

( ஹிப்ளுல் ஈமான் பக்கம் = 8 )


  நம் சிந்தனைக்கு :
                                              
                                         எந்த நபிக்கு முன்னால் முந்திக் கொண்டு பேசினாலோ,சப்தமிட்டுப் பேசினாலோ செய்த நன்மைகள் எல்லாம் அழிந்துவிடுமோ,எந்த நபிக்கு முன் வாய்திறந்து பேசுவதற்க்கு கூட ஸஹாபாக்கள் அச்சப்பட்டார்களோ,எந்த நபிக்கு முன் வானவர்கள் கூட மிக மிக கவனத்துடன்,ஒழுக்கத்துடன் நட்ந்து கொண்டார்களோ அந்த நபியுடைய கல்வியின் வஷயத்தில் கொஞ்சம் கூட கண்ணியமில்லாமல்,ஓழுக்கமில்லாமல்,பைத்தியம்,மிருகம்,கால் நடைகளின் கல்வி,விஷயத்தோடு சம்பந்தப்படுத்திப் பேசக் கூடிய மிக மோசமான வழிகேட்டில் உள்ளவர்கள்தான் தேவ்பந்தீ (தப்லீக் ) உலமாக்கள்.இதன் காரணமாகவே இவர் மீது காஃபிர் என ஃபத்வா கொடுக்கப்பட்டது 

தேவ்பந்தீய (தப்லீக் ) உலமாக்களின் வாசகங்கள்,நாயகத்தின் கண்ணியத்தை குறைக்கும் விதமாக மட்டுமின்றி,அவர்களது கல்வியை,ஞானத்தை,தரத்தை சாதாரண மனிதர்கள் விலங்குகள் ஏன் ? சாபத்திற்க்குரிய ஷைத்தானின் கல்வி,ஞானத்திற்க்கும் மட்டமாக இறக்கிப் பேசுகின்றனர்.


ஆகவே வேடதாரிகளான  தேவ்பந்தீய உலமாக்களை நம்பி வழிகேட்டில் போவதை விட்டும் அப்பாவி முஸ்லிம்களைக் காக்கும் நோக்கில் சுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்கள் தேவ்பந்தீகளின் கொள்கை,கோட்பாடுகளையும்,அதன் வழிகேட்டையும் பற்றி பேச்சுக்களாகவும்,எழுத்துக்களின் மூலமும் நிறைய வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.


அது மட்டும் மின்றி அவர்கள் தங்களது தவறான பேச்சுக்களையும்,நூல்களிலுள்ள தவறான வாசகங்களையும் நீக்கி,மறுப்புத் தெரிவித்து வெளியிட வேண்டும்.அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும் என்று சஅஹ்லுஸ்சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் தரப்பிலிருந்து தேவ்பந்தீ (தப்லீக் ) ஜமாஅத் உலமாக்களுக்கு சொல்வழியும்,கடிதங்கள் வழியும் கோரிக்கை வைக்கப்பட்டது.ஆனால் நமது கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. 



எனவே  அல்முஃதமதுல் முஸ்தனது என்னும் நூலில்
  1.  மிர்ஜாகுலாம் அஹ்மத் காதியானி,
  2. காஸிம் நானுத்தவி
  3. ரஷீத் அஹ்மத் கங்கோஹி
  4. அஸ்ரஃப் அலி தானவி 
  5. கலீல் அஹ்மத் அம்பேட்வி
போன்ற தேவ்பந்தீ ( தப்லீக் ) உலமாக்களின் வாசகங்களின் எடுத்துக்காட்டி அதிலுள்ள அடிப்படை,அசல் கொள்கைத் தவறுகளை ஆதாரங்களோடு சுட்டிக் காட்டி மேற்கண்ட நபர்களின் மீது குஃப்ர் ( காஃபிர் ) ஃபத்வாவை வெளியிட்டு அவர்களது கொள்கை இஸ்லாத்தின் அசல் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது.அவர்கள் இஸ்லாத்தை விட்டு.இஸ்லாத்தின் தூய கொள்கையை விட்டு நீங்கி விட்ட காஃபிர்கள் என்று தீர்ப்பளித்தார்கள்.

இந்த ஃபத்வா தேவ்பந்தீய ( தப்லீக் ) உலமாக்கள் மற்றும் மிர்ஜா குலாம் அஹ்மத் காதியானி மிதுள்ள சொந்த விருப்பு வெருப்புகளின் காரணமாக வெளியிட்ட தீர்ப்பல்ல.மாறக கோடான கோடி முஸ்லிம்கள் தாங்கள் உயிரை விட நேசிக்கக்கூடிய, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் மீது குறைகண்ட காரணத்திற்க்காத் தான்.

மேலும் நம் கருத்தானது தேவ்பந்து வஹாபிகள் தவ்ஹீது வஹாபிகளை விடபன்மடங்கு முனாஃபிக்தனமான செயல்பாட்டுடன் அல்லாஹ் பொய் சொல்வது சாத்தியம்,நபி மூத்த சாகோதரர்,ஷைத்தானைன் இல்முக்கு குர்ஆனில் ஆதாரம் உண்டு,நபியின் மறை ஞானத்திற்கு ஆதாரமில்லை,நபியை தொழுகையில் நினைவு கூறுவது மாடு,கழுதை,விபச்சாரத்தை  நினைவு கூறுவதை விட கேவலமானது.ரஸூல்மார்கள்,நபிமார்கள்,வலிமார்கள் மவுத்தாகி மண்ணோடு மண்ணாகி போனர்கள்.மீலாது,மௌலுது ஹாரம்.ஃபாத்திஹா,தப்ரூக்,நேர்ச்சை சாப்பிடுவது ஹராம்.

இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.அத்தனை வஹாபிய்ய விஷயங்களையும் தேவ்பந்து உலமாக்களும்,தப்லீக் ஜமாஅத் தலைவர்கலும் திரும்ப திரும்ப தத்தமது நூல்களில் பக்கம் மாற்றி பக்கம் புதிய புதிய பதிப்புகளில் அச்சுப் போட்டுக் கொண்டேயிருக்கிறார்கள் என்கிற போது வாசகர்களே ! நீங்களே உங்கள் நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள் அவர்களுடைய நூல்களில் உள்ளதை நன்றாக பார்த்து வாசித்தபின் உங்கள் மனச்சாட்சிபடி கூறுங்கள். இன்ஷாஅல்லாஹ் 

தப்லீக் ஜமாஅத் & தேவ்பந்து மதர்ஸா தாருல் உலூம் காஸிமிய்யா வஹாபிய பாசறையே !  & தேவ்பந்திளின் தரீக்கா வேஷம் ? என்ற தலைப்பில் விறைவில் நாம் இனம்காட்டுவோம்  .......


No comments:

Post a Comment