குர்ஆனோடு விளையாடும் நவீன வழிகேடர்கள்
குர்ஆனை தூய்மையின்றி தொடலாமா ?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹூ பரக்கத்துஹூ
சமூதாய சிந்தனைக்கு ......
அல்லாஹூ தஃஆலா வழங்கிய வேதங்களில் இறுதி வேதம் புனிதம் நிறைந்த அல்குர்ஆன் . இந்த புனித குர்ஆனின் கண்ணியத்தை முஸ்லீம்களின் உள்ளத்தில் இருந்து அகற்றவேண்டும் என்று உலக அளவில் சூழ்ச்சி நடை பெறுகிறது .என்பதை இஸ்லாமியர்கள் அனைவரும் அறிந்த விசையம் !
- இஸ்லாத்தை சிரழித்திட வழிகேடற்கள் போடும் சதி திட்டம் .சிலவற்றை குறிப்பிடுகிறோம்
- இஸ்லாத்திற்கு எதிரான அமைப்பு ரீதியிலான பிரச்சாரம் .
- இஸ்லாத்தைப் பற்றிய ஆய்வு செய்வதாக சொல்லி சந்தேகங்களைத் தோற்றுவிக்கும் நூல்களையும் , எவரும் எளிதில் அறியா வண்ணம் தவறான கருத்துக்களை இடைச் சொற்கலாக புகுத்தி இஸ்லாமிய கருத்துக்களைத் தாங்கிய நூல்களையும் வெளியிடுவது .
- இஸ்லாமிய கொள்கை , கோட்பாடுகளை சிதைத்து குர்ஆன் மஜீதின் அடிப்படைக் கொள்கைக்கு முரணாக இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் பணி, அதற்கென தனி பாணி .
- இஸ்லாத்தில் குழப்பங்களை விளைவிப்பவர்களுக்கு பொருளாதார உதவி செய்தல் .
- இஸ்லாத்திற்க்கு புறம்பான கொள்கைகளைத் தாங்கிய வழிகேடர்களை உருவாக்கி அவர்களை இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களிடையே நடமாடவிடுதல் .
- கல்விப் பணி , சமூக பணி , அறப்பணி ,என பல முறைகளில் முஸ்லிம்களை ஈர்த்து வழிகெடுக்க முனைதல் .
பிஜெ மதம் ஒரு பேராபத்து
பிஜெ என்ற அதி மேதாவி தான் சொல்வது மட்டும் தான் மார்க்கம் மற்ற யார் சொன்னாலும் அது மார்க்கம் அல்ல என்று . சொல்வது அனைவருக்கும் தெரிந்த விசையம் , அதை உருதி செய்வதர்க்கு ஒரு உதாரணம் பார்போம் ...
- யார் ? வேண்டுமானாலும் சுத்தம் இல்லாமல் அதாவது
- ஒளூ இல்லாதவர்களும் ,
- குளிப்பு கடமையானவர்களும் ,
- மாதவிடாய் பெண்களும் ,
- பேருகாலத்தொடக்கு உள்ள பெண்களும் ,
- எல்லா நிலைகளிலும் , எல்லா மனிதர்களும் ,
- குர்ஆனை தொடலாம் , என்று தன் சுய அறிவின் படி கருத்தை சொல்கிறார் :
ஒளூ வின்றி குர்ஆனைத் தொடலாமா ? என்பதை பற்றிய குர்ஆன் & ஹதீஸ்களை வைத்து ஆறாயிவோம் .
ஒளூ இல்லாதவர்களும் , குளிப்பு கடமையானவர்களும் ,பெண்கள் மாதவிடாய் மற்றும் பேறு காலத்தொடக்கு உள்ளவர்களும் , குர்ஆனை தொடலாம் ? ஓதலாம் ? என்று இஸ்லாமிய பெயர்தாங்கியான பிஜெ என்ற வழிகேடர் கூறுகிறார் . இதுவும் ஷரீஅத்தீன் தீர்ப்புக்கு முற்றிலும் மாறுபட்டதும் , ஹராமான செயலுமாகும் .
ஸூரத்துல் வாகிஆவிலுள்ள 79 ஆவது வசனத்திற்கு அடைப்புக்குறிக்குள் ஒரு வார்த்தையைச் சேர்த்து தவறான அர்த்தம் எழுதி , அதனுடைய விளக்க குறிப்பு 291 ல் பின் வருமாறு எழுதுகிறார் .
பிஜெ வின் விளக்கம்
திருக்குர்ஆன் எழுத்துவடிவில் அருளப்படவில்லை எனும் போது எழுத்து வடிவில் அருளப்படாததை தொடும் பேச்சுக்கே இடமில்லை . தொடும் வித்த்தில அருளப்படிருந்தால் மட்டுமே இந்தக் குர்ஆனைத் தொடமாட்டார்கள் என்று கூறமுடியும் . திருக்குர்ஆன் நபிகள் நாயகத்திற்கு ஓதிக் காட்டப்பட்டதே தவிர எழுத்து வடிவில் அருளப்படவில்லை .எனவே . இதைத் தொடமாட்டார்கள் என்பது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனைக் குறிக்காது . எங்கிருந்து அருளப்பட்டதோ அந்த மூலப்பிரதியைத்தான் குறிக்கும் .
இவ்வாறு தன்னுடைய சுய விளக்கத்தை எழுதியபின் கடைசி பாராவில் இப்படி எழுதி இருக்கிறார் :
எல்லா நிலைகளிலும் , எல்லா மனிதர்களும் குர்ஆனை தொடலாம் , படிக்கலாம் , வாசிக்கலாம் , என்பது தான் குர்ஆனிலிருந்து பெறப்படுகிற ,நபிகள் நாயகத்தின் வழிமுறைகளிலிருந்து பெறப்படுகிற முடிவாகும் .
நூல் : பிஜெ வின் தர்ஜமா என்ற நாவல் பக்கம் : 1248
நம்முடைய விளக்கம்
இதிலும் தன் சொந்தக் கருத்தைத்தான் சொல்கிறார் , ஆதாரம் எதையும் காண்பிக்கவில்லை . குர்ஆனிலிருந்து ,நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளிலுருந்தும் பெறப்படுகின்ற முடிவு என்று பிஜெ கூறியிருப்பதும் தன்னிச்சையான முடிவேயாகும் .
இவ்வாறு தன் சுய அறிவுப்படி குர்ஆனுக்கு விளக்கம் சொல்ப்வரைப் பற்றி ஹதீஸ்கள் எச்சரிகிறது
ஹதீஸ் :
தன் சுய அறிவின்படி குர்ஆனுக்கு விளக்கம் கூறுகிறவர் தன் தங்குமிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும் என்று நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ நூல் : திர்மிதி ,மிஷ்காத் ,,
ஹதீஸ் = 2
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : யார் வேண்டும் என்றே என்மீது பொய் சொல்கிறாறோ அவர் தன் தங்குமிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும் .
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ நூல் : திர்மிதி ,மிஷ்காத் ,,
பிஜெ இது போன்ற ஹதீஸ்களை பார்பது இல்லை போல் ! குர்ஆன் & ஹதீஸ் இவைகளில் இருந்து ஆதாரம் இல்லையே ? மாறாக பெறப்படும் கருத்து என்று சொல்கிறார் . பிஜெ என்ற கருத்து கண்ணாயிரம்
குர்ஆனும் & ஹதீஸூம் அல்லாத வேறு எந்த மனித அபிப்பிராயத்தையும் ஏற்கவே முடியாது என்று முழங்கிக் கொண்டுருப்பவர் . பிஜெ என்ற கருத்து கண்ணாயிரம் தன்னுடைய அபிப்பிராயத்தை மட்டும் இங்கு புகுத்தி '' இதுதான் சரியான கருத்து '' என்று எவ்வாறு எழுதுகிறார் ?
எந்த ஆயத்திலும் & எந்த ஹதீஸிலும் இல்லாத , ஒரு விளக்கத்தை ,தன் அறிவை மட்டும் பயன் படுத்திக் கூறியிருப்பது . இவர் மிக பெரிய பொய்யன் , , வழிகேடன் என்பதற்க்கு சான்றாகும் . ..
இந்த பிஜெ என்ற கருத்து கண்ணாயிரம் : தன்னுடைய கருத்து மட்டுமே சரியானது , மற்றவை தவறானவை என்ற விதத்திலேயே குர்ஆனுடைய இந்த ஆயத்திற்கு அர்த்தம் எழுதியுள்ளார் ,
பிஜெ வின் விளக்கத்தை பாருங்கள் :
'' தூய்மையான ( வான ) வர்களைத் தவிர ( மற்றவர்கள் ) அதைத் தீண்டமாட்டார்கள் '' ( மொழிபெயர்ப்பு = 56 / 79 )
மற்ற மொழிபெயர்ப்புகளில் உள்ள அர்த்தம் :
'' பரிசுத்தமானவர்களைத் தவிர ( வேறு எவரும் ) இதனைத் தொடமாட்டார்கள் ''
பிஜெ தன்னுடைய மொழிபெயர்ப்பில் தூய்மையானவர்கள் வானவர்கள்தாம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக '' வான '' என்ற ஒரு வார்த்தையை அடைப்புக்குறிக்குள் அதிகப்படுத்தி எழுதியுள்ளார் . இது எந்த மொழிப்பெயர்ப்பாளரும் எழுதாத புதிய கருத்தாகும்
மேலும் ,பிஜெ என்ற கருத்து கண்ணாயிரம் '' லாயமஸ்ஸூஹூ '' என்பதற்க்கு தீண்டமாட்டார்கள் என்று தவறாக அர்த்தம் எழுதியுள்ளார் . '' லாயமஸ்ஸூஹூ '' என்பதற்கு தொடமாட்டார்கள் என்பது அர்த்தம் . தொடமாட்டார்கள் என்பதற்கும் , தீண்டமாட்டார்கள் என்பதற்க்கும் நிறைய வேறுபாடு உள்ளது .பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் கடிப்பதற்குத்தான் தீண்டுதல் என்று சொல்லப்படும் . அவருடைய மொழிபெயர்ப்பில் இது போன்ற தாறு மாறான மொழிபெயர்ப்பைக் கொண்டு விளக்கங்கள் கூறி குழப்பங்கள் செய்து வரும் இந்த வழிகேடர் பிஜெ என்ற கருத்து கண்ணாயிரம் அடையாளம் கண்டுகொள்ளுங்கள்
இது ஒரு சில வசனங்களுக்கு , மட்டும் மல்ல குர்ஆன் முழுமைக்கும் இவ்வாறே தவறான கருத்துக்கள் எழுதப்படுள்ளன ! இஸ்லாமியர்களே நம் ஈமானை பாதுகாக்க இது போன்ற வழிகேடர்கள் சொல்லும் & எழுதும் விளக்கம் வேண்டாம் .அல்லாஹூ நம்மை அனைவரையும் பாதுகாப்பானாக .
இனி நம் தஃப்ஸீர்களில் உள்ள விளக்கங்களைப் பார்ப்போம் :
பரிசுத்தமானவர்கள் என்று அல்லாஹூ தஃஆலா கூறியுள்ள இந்த வார்த்தைக்கு இரண்டு அர்த்தம் கூறப்படும் .
- பாவங்களை விட்டுப் பரிசுத்தமானவர்கள்
- அசுத்தாங்களை விட்டுப் பரிசுத்தமானவர்கள்
- முதல் அர்த்தத்தின் படி பரிசுத்தமானவர்கள் என்பவர்கள் மலக்குகளாகும் .அதன் படி தொடமாட்டார்கள் என்றால் '' லவ்ஹூல் மஹ்ஃபூள் என்னும் பதுகாக்கப்பட்ட பேரேட்டில் உள்ள்தை அவர்களைத் தவிர வேறெவரும் தொடமாட்டார்கள் என்பது கருத்தாகும் .
- இரண்டாவது அர்த்தத்தின் படி பரிசுத்தமானவர்கள் என்பவர்கள் மனிதர்களாகும் . ஒளு இல்லாமலிருப்பது , குளிப்பு கடமையாயிருப்பது , பெண்கள் மாதவிடாய் மற்றும் பேறு காலத்தொடக்கு உள்ளவர்களாக இருப்பது போன்று அசுத்தங்களை விட்டும் பரிசுத்தமாயிருப்பது என்று பொருளாகும் . இதன் படி தொடமாட்டார்கள் என்பது நம் மிடமுள்ள அச்சிடப்பட்ட தாள்களைக் கொண்டகுர்ஆன் ஷரீஃபாகும் . ''' குர்ஆனை (மேற்கூறப்பட்ட சிறிய பெரிய அசுத்தங்களை விட்டும் ) பரிசுத்ட்ட்ட்தமானவர்களான மனிதர்களைத் தவிர வேறு எவறும் தொடமாட்டார்கள் ''' எனக் கருத்தாகும் .
இவ்விரண்டு கருத்துகளுமே சரியானது தான் . ஒவ்வொரு கருத்தையும் ஸஹாபாக்களிலும் , தாபியீங்களிலும் , இமாம்களிலும் பலர் கூறியுள்ளனர் .
- முதல் கருத்தை ஹஜரத் இப்னு அப்பாஸ் , அனஸ் , ஸயீது ஜூபைர் ( ரலியல்லாஹூ அன்ஹூம் ) அவர்களும் , முஜாஹித் , இக்ரிமா , ளஹ்ஹாக் , ஜாபிர் பின் ஜைத் ( ரஹிமஹூ முல்லாஹ் ) போன்றோர் கூறியுள்ளார்கள் .
- இரண்டாவது கருத்தை ஹஜரத் அலீ , இப்னு மஸூது , ஸஃது பின் அபீவக்காஸ் , ஸயீது பின் ஜைது ( ரலியல்லாஹூ அன்ஹூம் ) அவர்களும் , முஹம்மது பாகர் , அதாஉ , தாவூஸ் , ஜுஹ்ரி , ஸாலிம் , நகயீ , ஹகம் , ஹம்மாது , மாலிக் பின் அனஸ் , அபூஹனிஃபா , ஷாஃபீ , அஹ்மது பின் ஹம்பல் , ( ரஹிமஹூல்லாஹூ ) போன்றோர்கள் க்றியுள்ளார்கள் .
இரண்டு கருத்துகளுமே சரியானது தான் . என்றாலும் இரண்டில் தீர்ப்புக்குரியதும், அமல் படுத்தப்பட வேண்டியதும் , இரண்டாவது கருத்தைத்தான் என்பது இமாம்கள் அனைவரின் ஏகோபித்த அபிப்பிராயமாகும் .
எனவே , பரிசுத்தமானவர்களைத் தவிர ( வேறு எவறும் ) இதனைத் தொடமாட்டார்கள் . என்ற ஆயத்திற்கு ஒளூ இல்லாதவர்கள் குர்ஆனைத் தொடுவதும் . குளிப்பு கடமையானவரும் , மாதவிடாய் மற்றும் பேறு காலத்தீட்டு உள்ள பெண்களும் , குர்ஆனைத் தொடுவதும் , ஓதுவதும் ஹராமாகும் .
இதற்கு நேர்மாற்றமாக பிஜெ என்ற வழிகேடர் எல்லா நிலைகளிலும் , எல்லா மனிதர்களும் , க்ர்ஆனைத் தொடலாம் . படிக்கலாம் . வாசிக்கலாம் , என்று பிஜெ எழுதியிருப்பது முற்றிலும் தவறாகும் . ஷரீஅத்தில் ஹராம் என்று தீர்ப்பாளிக்கப்பட்ட ஒரு செயலை ஹலாலாக்கிவைக்கிறார் .
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் பரிசுத்தமான மனிதர்கள் மட்டுமே இந்தக் குர்ஆனைத் தொடவேண்டுமெனக் கூறிய ஹதீஸ்களை பார்போம்
எனவே , பரிசுத்தமானவர்களைத் தவிர ( வேறு எவறும் ) இதனைத் தொடமாட்டார்கள் . என்ற ஆயத்திற்கு ஒளூ இல்லாதவர்கள் குர்ஆனைத் தொடுவதும் . குளிப்பு கடமையானவரும் , மாதவிடாய் மற்றும் பேறு காலத்தீட்டு உள்ள பெண்களும் , குர்ஆனைத் தொடுவதும் , ஓதுவதும் ஹராமாகும் .
இதற்கு நேர்மாற்றமாக பிஜெ என்ற வழிகேடர் எல்லா நிலைகளிலும் , எல்லா மனிதர்களும் , க்ர்ஆனைத் தொடலாம் . படிக்கலாம் . வாசிக்கலாம் , என்று பிஜெ எழுதியிருப்பது முற்றிலும் தவறாகும் . ஷரீஅத்தில் ஹராம் என்று தீர்ப்பாளிக்கப்பட்ட ஒரு செயலை ஹலாலாக்கிவைக்கிறார் .
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் பரிசுத்தமான மனிதர்கள் மட்டுமே இந்தக் குர்ஆனைத் தொடவேண்டுமெனக் கூறிய ஹதீஸ்களை பார்போம்
ஹதீஸ் : 1
யமன் நாட்டுக்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் : எழுதிய ஒரு கடிதத்தில் '' லா யமஸ்ஸூல் குர்ஆன இல்லா தாஹிருன் '' பொருள் : சுத்தமானவரைத் தவிர இந்தக் குர்ஆனைத் தொடவேண்டாம் '' என எழுதியனுப்பியதாக அம்ரு பின் ஹஜம் ( ரலியல்லாஹூ அன்ஹூ ) அவர்கள் அறிவித்துள்ளார்கள் . இந்த ஹதீஸ் தாருகுதீனி , யில் பதிவு செய்யப்பட்டுள்ளது , இதனை ஹாகிம் அவர்கள் மஃரி ஃபாவிலும் , பைஹகீ அவர்கள் கிலாஃபிய்யத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள் .
ஹதீஸ் : 2
'' பரிசுத்தமானவரைத் தவிர ( வேறு எவறும் ) இந்தக் குர்ஆனைத் தொடவேண்டாம் '' ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் :கூறினார்கள்
அறிவித்தவர் : இப்னு உமர் ரலயல்லாஹூ அன்ஹூ நூல் : தப்ரானீ
ஹதீஸ் : 3
ஹகீம் பின் ஹிஜாம் ( ரலியல்லாஹூ அன்ஹூ ) அவர்களை யமன் நாட்டிற்கு அனுப்பிய பொழுது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் : '' நீ பரிசுத்தமாயிருக்கும் நிலையிலே தவிர இந்தக் குர்ஆனைத் தொடவேண்டாம் என்று கூறி அனுப்பினார்கள் .
நூல் : தப்ரானீ , அபிதாவுத் , ஹாகிம் , கஞ்ஜுல் உம்மால் ( 1 / 615 )
நூல் : ரூஹூல் மஃஆனீ ( 9 / 155 ) இப்னு கதீர் (4 / 229 ) குர்துபீ (17 / 225 ) மள்ஹரீ ( 1 / 181 ) மஃஆரிஃபுல் குர்ஆன் (8 /287 ) ஆகிய விரிவுரைகளிலும் , எடுத்தெழுதப் பட்டுள்ளன . இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்றும் இப்னு கதீரில் குறிப்பிடப்பட்டுள்ளது ,
ஹதீஸ் ; 4
சுத்தம் ( ஒளூ ) இல்லாதவர்கள் குர்ஆனை தொட வேண்டாம் , தொடக்கூடாது . என நிச்சியமாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் யமன் வாசிகளுக்கு கடிதம் எழுதினார்கள்
( அறிவித்தவர் : அபூபக்ரு பின் முஹம்மது பின் ஹஜ்ம் ரலியல்லாஹூ அன்ஹூ நூல் : தப்ரானி )
ஹதீஸ் : 5
தூய்மை மூலம் தவிர எந்த தொழுகையும் ஏற்க்கப்படாது என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
அறிவித்தவர் : அபு குரைரா ரலியல்லாஹூ அன்ஹூ நூல் : முஸ்லிம் , அபூதாவுத்
இதில் தூய்மை என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள் இதில் தூய்மை என்பது ஒளூ மற்றும் குளிப்பு , இரண்டையும் குறிக்கும் . அதே போல் தான் தூய்மை இன்றி குர்ஆனை தொடாதே என்பதற்க்கு ஒளூ மற்றும் குளிப்பு இரன்டையும் குறிக்கும் .
ஹதீஸ் : 6
மாதவிடாய் ஏற்பட்டவர்களும் , குளிப்பு கடமையானவர்களும் , குர்ஆனை எதனையும் . ஓதலாகாது என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள்
( அறிவித்தவர் : இப்னு உமர் ரலியல்லாஹூ அன்ஹூ நூல் : திர்மிதீ , அபுதாவுத் , )
ஹதீஸ் : 7
ஜனாபத் இல்லாத எல்லா நிலையிலும் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்
அறிவித்தவர் : அலி ரலியல்லாஹூ அன்ஹூ நூல் : திர்மிதீ
மேற்கூறப்பட்ட ஹதீஸ்களில் குர்ஆனை ஒளூ வின்றித் தொடுவதும் , குளிப்பு கடமையானவர் , மாதவிடாய் மற்றும் பேறு காலத்தீட்டு உள்ள பெண் ஆகியோர்கள் தொடுவதும் , ஓதுவதும் ஹராம் என்பதைச் ஹதீஸ்கள் மூலம் ஆதாரம் காட்டிவுள்ளோம் இதைத்தான் சட்டமாமேதைகள் ஹராம் என்பதை விளக்கிவுள்ளார்கள் .
திருக்குர்ஆனை ஓளூ இல்லாமல் தொடலாம் என்பதற்க்கு இன்னோரு உதாரணத்தையும் எழுதியுள்ளார் பிஜெ என்ற கருத்து கண்ணாயிரம் இதை படியுங்கள் :
இந்தக் குரஆன்த் தூய்மையானவர்கள் தான் தொட்வேண்டும் , மற்றவர்கள் தொடக்கூடாது என்றெல்லாம் இவ்வசனத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு பலரும் சட்டங்களை வகுத்துள்ளனர் . ஆனால் இந்த வசனம் எல்லா மக்களுக்கும் , வழிகாட்டுவதற்காக அருளப்பட்டது . எல்லா நிலையிலும் வாசிப்பதற்காக அருளப்பட்டது . எல்லா மாந்தர்களும் படிப்பதற்காக அருளப்பட்டது .
முஸ்லிம்கள் அல்லாதாவர்கள் இந்தக் குர்ஆனை வாசித்தால் தான் அவர்கள் நேர்வழி பெற முடியும் . நீங்கள் தூய்மையாக இல்லை , நீங்கள் குர்ஆனைத் தொடக் கூடாது , என்று கூறினால் எந்த நோக்கத்திற்க்காக குர்ஆனை அல்லாஹூ அருளினானோ அந்த நோக்கத்தைச் சிதைத்தவர்களாக நாம் ஆகிவிடுவோம் .
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் பல நாடுகளின் தலைவர்களுக்கு திருக்குர்ஆன் வசனங்களை எழுதி இஸ்லாத்தின் பால் அழைப்புக் கொடுத்துள்ளார்கள் .
அந்த மன்னர்கள் அதைத் தம் கையால் தொட்டு வாசிப்பார்கள் என்பதை அறிந்தே திருக்குர்ஆன் வசனங்களை எழுதி அனுப்பியிருக்கும் போது திர்க்குர்ஆனைத் தூய்மையுடன் தான் தொடவேண்டும் என்று கூறுவது தவறாகும் . குர்ஆனிலிருந்து மக்களை அந்நியப்பத்தி விடும் .
பிஜெ வின் தர்ஜமா என்ற நாவல் பக்கம் : 1065
நம்முடைய விளக்கம்
இது , அவர் தன்னுடைய சுய அறிவின்படி எழுதியதாகும் இதற்காவது குர்ஆன் & ஹதீஸ்களில் இருந்து ஆதாரம் காட்டி இருக்க வேண்டும் அப்படியும் செய்யவில்லை .
குர்ஆனில் நாம் சுயகருத்தை சொல்லலாமா ?
ஹதீஸ் : 1
'' எவரொருவர் தன் சுயறிவுப்படி குர்ஆனுக்கு விளக்கம் கூறி ( உண்மையில் ) அது சரியாக இருந்தாலும் உறுதியாக அவர் தவறு செய்தவரேயாவார் ''
அறிவிப்பவர் :ஜூந்துப் பின் அப்தில்லாஹ் ரலியல்லாஹூ அன்ஹூ நூல் திர்மிதி
ஹதீஸ் : 2
'' யார் குர்ஆனில் தர்கம் செய்கிறறோ அவர் காஃபிராகி விட்டார் ''
( அறிவிப்பவர் : அபூஹூறைறா ரலியல்லாஹூ அன்ஹூ நூல் : அஹமது , அபூதாவூத் , )
அல்லாஹூ திருகுர்ஆனில் இணைவைத்து வணங்குபவர்களை பற்றி : ஈமான் கொண்டவர்களே ; நிச்சயமாக இணைவைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே ( 9 / 28 )
இந்த குர்ஆனை தூய்மையானவர்கள்தான் தொடவேண்டும் மென்பதற்க்கு மேலே பல ஆதாரமாக ஹதீஸ்களை காட்டி விட்டோம் ஆனால் பிஜெ குர்ஆனையோ & ஹதீஸையோ காட்டாமல் தன் சொந்த சரக்கை ( சுய அறிவை ) பயன்படுத்திவுள்ளார் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது .
நாம் பிஜெ பானியிலே கேட்போம் அதாவது
- அல்லாஹூவும் ,அவனுடைய ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் சொல்படி நடப்பது சிறந்ததா ?
- தன்னுடைய சுயஅறிவை பயன்படுதும் இந்த பிஜெ என்ற கருத்து கண்ணாயிரத்தை பின்பற்றுவது சிறந்ததா ?
பிஜெவின் கூற்று :
முஸ்லிம்கள் அல்லாதவர்கள் இந்தக் குர்ஆனை வாசித்தால் தான் அவர்கள் நேர்வழி பெற முடியும் , நீங்கள் தூய்மையாக இல்லை . நீங்கள் குர்ஆனைத் தொடக் கூடாது ? ( அவர்கள் எப்படி நேர்வழி பெறுவார்கள் ) என்று விளங்காமல் எழுதியுள்ளார் .
நம்முடைய விளக்கம் :
உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் மிகபெரிய ஒரு பாடத்தை நமக்கு அல்லாஹூ வைத்து இருக்கிறது !!!
கப்பாப் ( ரலி ) அவர்கள் உமரி ( ரலி ) அவர்களின் சகோதரிக்கும் ,அவறது கணவருக்கும் தனது ஏட்டிலுள்ள தாஹா எனத் தொடங்கும் . அத்தியாயம் தாஹாவின் வசனங்கள் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் உமர் ( ரலி ) அவர்கள் வருவதை அறிந்த கப்பாப் ( ரலி ) அவர்கள் வீட்டினுல் மறைந்து கொண்டார்கள் , உமரி ( ரலி ) அவர்களின் சகோதரியும் அந்த ஏட்டைமறைத்து விட்டார்கள் . எனினும் உமர் ( ரலி ) அவர்கள் வீட்டிற்க்கு அருகே வந்துபோது கப்பாப் ( ரலி ) அவர்கள் கற்றுக் கொடுத்த சப்ததை கேட்டு விட்டார்கள் .
வீட்டினுல் நூழைந்த உமர் ( ரலி ) அவர்கள் உங்களிடம் நான் செவிமடுத்த மெல்லிய சத்தம் என்ன ? என்று கேட்டதற்க்கு நாங்கள் பேசிக்கொண்டுருந்ததை தவுர வேறு எதுவும் இல்லை .என்று அவ்விருவரும் கூறினார்கள் . அப்போது உமர் ( ரலி ) அவர்கள் நீங்கள் மதம் மாறிவிட்டிர்களா ? என்று கேட்டார் அதற்க்கு அவரது மச்சான் உமரே ! சத்தியம் உன்னுடைய மார்க்கத்தை தவிர வேரொன்றில் இருந்தால் உங்கள் கருத்து என்ன ? என்று கேட்டார் .
உமர் ( ரலி ) அவர்கள் கடுஞ்சினம் கொண்டு தனது மச்சானின் மீது பாய்ந்து .அவரை பலமாகத்தாக்கி மிதிக்கவும் செய்தார் .அவரது சகோதரி தனது கணவரை விட்டு உமர் ( ரலி ) அவர்கள் விலக்கினார்கள் . உமர் ( ரலி ) அவர்கள் தன் சகோதரியின் கன்னத்தில் அறைந்தார் அவரது முகத்தை ரத்தக் காயப்படுத்தினார் கோபம் கொண்ட உமர் ( ரலி ) அவர்களின் சகோதரி உமது மார்க்கமல்லாத வேறோன்றில் உண்மை இருந்தாலுமா ? ( அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது )
அல்லாஹூவை தவிர வணக்கத்துக் கூறியவன் இரைவன் வேறு யாரும் இல்லை முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹூ வின் தூதர் என்று நான் சாட்ச்சி கூறுகிறேன் . என்று உரக்க கூறினார்கள் . தனது கோபம் பலனற்றுப் போனதை க் கண்ட உமர் ( ரலி ) அவர்கள் நிராசை அடைந்தார்கள் . தனது சகோதரிக்கு ஏற்ப்பட்ட ரத்தக் காயத்தைப் பார்த்து அவர்க்கு கைசேதமும் , வெக்கமும் , ஏற்பட்டது .
உங்களிடம் உள்ள இந்த புத்தகத்தை கொடுங்கள் .நான் அதை படிக்க வேண்டும் . என்று கூறினார்கள் . அதற்க்கு அவரது சகோதரி நீர் அசுத்தமானவர் ,நீர் குளித்து விட்டு வாரும் . என்று கூறி அதை தர மறுத்து விட்டர்கள் . பிறகு குளித்து வந்தவுடன் அந்த திருமரையின் எழுதியா அந்த தாளை கொடுத்தார்கள் . பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹிம் .என்று ஓதியவுடன் .
என்ன தூய்மையான பெயர்கள் ! என்று கூறி தொடர்ந்து தாஹா என்று தொடங்கி பதினாங்காம் வசனம் வரை ஓதினார்கள் .இது எவ்வளவு அசலான , சொற்கள் . எவ்வளவு இனிமையான தாக இருக்கிறது . எனக்கு முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் என்னை அழைத்து செல்லுங்கள் . என்று கேட்டார்கள் .
உமர் ( ரலி ) அவர்கள் பேச்சை கேட்ட கப்பாப் ( ரலி ) அவர்கள் வெளியே வந்தார்கள் .உமரே உங்கள் மீது நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள் ! வியாழன் இரவு அல்லாஹூவே ! உமர் அல்லது அபுஜஹ்ல் மூலமாக இஸ்லாத்திற்க்கு உயர்வை கொடு என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த பிராத்தனை உங்கள் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று உண்மையனறு நம்புகிறேன் என்று கப்பாப் ( ரலி ) அவர்கள் கூறினார்கம்
( நூல் : முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு )
இந்த வரலாறு நமக்கு மிக பெரிய படிப்பினை காட்டுகிறது !
- குர்ஆன் முழுவதும் எழுதப்பட வில்லை
- குர்ஆன் சில வசனங்கள் தான் இருந்தது
- அந்த எழுதிய தாளை தொடுவதர்கே சுத்தம் வேண்டும் என்றால் குர்ஆனை முழுவதும் தொடுவதற்க்கு சுத்தம் வேண்டாமா ?
- இந்த விளக்கமே போதும்
பிஜெ என்ற வழிகேடனுடைய அறிவுக்கு ஒத்து வரவில்லை என்று சொல்லி ஸஹாபாக்களுடைய கருத்தை அலட்சியமாக விட்டு விட முடியுமா ? ?
நாம் முஸ்லிமல்லாதவர்களுக்கு திருக்குர்ஆன் பிரதியைக் கொடுக்க வேண்டுமென்றால் , நீங்கள் சுத்தமாக இருந்து இதனைப் படிக்க வேண்டும் என்று சொல்லித்தான் கொடுத்திட வேண்டும். அவர்களாக அதனை வாங்கிச் சென்றால் அது நம்மீது குற்றமாகது . நமக்குத் தெரிந்தால் சுத்தாமாக இருந்து அதனை வாசியுங்கள் என்று அவசியம் சொல்லியாக வேண்டும் .
அவ்வாறு அவர்கள் சுத்தம் செய்து கொள்வது வெளித்தோற்றமான சுத்தமே ! உமர் ( ரலி ) அவர்கள் சுத்தம் செய்து கொண்டது போல்.
பிஜெ வின் விளக்கம் :
தலைவர்களுக்கெல்லாம் இஸ்லாமிய அழைப்பு அனுப்பியதைக் குறிப்பிள்ளார் அதாவது '' அந்த மன்னர்கள் அதைத் தம் கையால் தொட்டு வாசிப்பார்கள் என்பதை அறிந்தே திருக்குர்ஆன் வசனங்களை எழுதி அனுப்பியிருக்கும் போது திர்க்குர்ஆனைத் தூய்மையுடன் தான் தொடவேண்டும் என்று கூறுவது தவறாகும் . குர்ஆனிலிருந்து மக்களை அந்நியப்பத்தி விடும் .
பிஜெ வின் தர்ஜமா என்ற நாவல் பக்கம் : 1065
நம்முடைய விளக்கம் :
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
அதனால் தான் அந்த வசனத்தின் ஆரம்பத்திலுள்ள '' குல் '' ( கூறுவீறாக ) என்ற வார்த்தையை எழுதாமல் , '' யா அஹ்லல் கிதாபி தஆலவ் இலா கலிமத்தின் ..'' என்று தொடங்கி எழுதியுள்ளார்கள் . அல்லாஹூடைய கலாம் என்ற முறையில் அதனை எழுதியிருந்தால் இப்படி எழுதியிருப்பார்கள் '' குல் யா அஹ்லல் கிதாபி தஆலவ் இலா கலிமத்தின் ...'' குல் என்ற வார்த்தையை நீக்கியிருக்க மாட்டார்கள் .
அவ்வாறு ( ஒரு எழுத்தைக்கூட ) எடுத்து விட்டு எழுதுவதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அனுமதியில்லை .எனவே அழைப்புக் கடிதத்தில் எழுதிய வாசகத்தை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புறத்திலிருந்து எழுதியுள்ளார்கள் என்பதே முடிவு
நூல் : தஃப்ஸீர் மளஹரீ ( 9 / 181 )
அசுத்தமானவர்கள் குர்ஆனை எடுத்து அவமரியாதை செய்து விடுவார்கள் என்பதினால்தான் எதிரிகளிருக்கும் ஊர்களுக்கு அதனை எடுத்து செல்வதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தடைவிதித்தார்கள்
ஹதீஸ் : 1
எதிரிகள் கைப்பற்றிவிடுவார்கள் என்று பயந்தால் எதிரிகலிருக்கும் பகுதிக்குக் குர்ஆனைக் கொண்டு செல்வதற்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தடைவிதித்தார்கள்
(அறிவிப்பவர் : இப்னு உமர் ரலியல்லாஹூ அன்ஹூ நூல் : முஸ்லிம் )
திருக்குர்ஆன் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எழுத்து வடிவில் அருளப்படவில்லை என்பதால் , எழுத்து வடிவிலுள்ள இந்த குர்ஆனை சுத்தமில்லாதவர்களும் தொடலாம் , என்றொரு கருத்தையும் பிஜெ எழுதியுள்ளார் .
அல்லாஹூ தஆலா தன் வேதத்தைக் '' குர்ஆனுன் கரீம் '' சங்கைக்குரிய குர்ஆன் என்று கூறுகிறான் . அதனை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித இதயத்தில் இறக்கிவைத்ததாகவும் , கூறியுள்ளான் . அப்புனித இதயத்திலிருந்துதான் ஏட்டினில் எழுதப்பட்டுள்ளது .
சங்கைகுரிய அந்த வேதம் எழுதப்பட்டுள்ள ஏட்டிற்க்கு கண்ணியமளிக்க வில்லையானல் அது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் இதயத்தில் உள்ள குர்ஆனுக்கு கண்ணியமளிக்காததைப் போன்றாகும் . நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் இதயத்தில் உள்ள அல்லாஹ்வின் திரு வேதத்திற்கு மதிப்பளிக்கவில்லையென்றால் .
அது பாதுகாக்கப்பட்ட அந்த புனித ஏட்டிலுள்ள குர்ஆனையே ! அவமரியாதை செய்ததாகவே கருதப்படும் . எனவே ஒளூ இல்லாமல் இந்த குர்ஆனைத் தொடலாம் என்று கூறுவது , இது எங்கிருந்து அருளப்பட்டதோ அந்த அசல் ஏட்டையே சுத்தமில்லாமல் தொடலாம் என்று கூறுவதைப் போன்றதுதான் .
ஆகையால் , ஒளூ இல்லாமல் திருக்குர்ஆனைத் தொடுவதும் , குளிப்புக்கடமையானவரும் , மாதவிடாய் உள்ள பெண்ணும் , பேறு காலத் தொடக்குள்ள பெண்ணும் ,குர்ஆனைத் தொடுவதும் , ஓதுவதும் , ஹராம் என்பதே அனைத்து ஸஹாபாக்கள் ,தாபியீங்கள் , தபவு தாபியீங்கள், இமாம்கள் , இறை நேசர்கள் , ஸூஃபியாக்கள் , ஏகோபித்த முடிவாகும் இந்த ஏகோபித்த் முடிவுக்கு எதிராக பிஜெ செல்வதும் அவருடைய மொழிபெயர்ப்பும் தள்ளுபடி செய்யப்பட வேண்டியதாகும் ..
ஏன் ? என்றால் பிஜெ என்ற கருத்து கண்ணயிரம் அவரே சொல்லிருக்கார் & எழுதியிருக்கார் தன்னுடைய தர்ஜமா என்ற நாவலில் பக்கம் = 1304
ஒட்டு மொத்த சமூதாயமே சாட்சி கூறுவதும் , ஒருவரே சாட்சி கூறுவதும் சமமானதாக ஆகாது . எவ்வளவுதான் நம்பகமானவர்கள் என்றாலும் ஒருவர் & இருவர் அறிவிக்கும் செய்திகள் தவறுகள் நிகழ வாய்ப்புகள் உள்ளன்
என்ற பிஜெவின் கூற்றுக்கு இனங்க ஒளூ இல்லாமல் குர்ஆனைத் தொடலாம் என்பது தவறு ஆகும் .
இவர் ஆதாரம் இல்லாமல் தன் சுய கருத்தை சொல்வதாலும் & ஹதீஸ்களை முழுமையாக படிக்கமால் . அறைகுறையுமாக படித்துவிட்டு உளருவதும் , ஹதீஸ்களை ஆராய்வதில் ஞானம் இல்லாமல் இருப்பதுதான் இதற்க்கு காரணம் இனி மேலாவது முறையாக படித்து விட்டு மார்கத்தை பற்றி பேசுங்கள் . அல்லாஹூ இது போன்ற இஸ்லாமிய பெயர்தாங்கிகளை விட்டும் நம் அணைவரையும் பாதுகாத்து , சுன்னத் ஜமாஅத் கொள்கையில் மரணிக்க செய்வானக ஆமீன் , ஆமீன் ஆமீன் ,,,
No comments:
Post a Comment