Sunday, December 15, 2013

தேவ்பந்து மதர்ஸா தாருல் உலூம் காஸிமிய்யா வஹ்ஹாபிய            பாசறையே !!!  

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரக்கத்துஹூ                  

 ان الدين فرقوا دينهم وكنوا شيعا لست منهم في شيئ انما امرهم الي الله ثم ينبئهم بما كانوا يفعلون  

பொருள் : நிச்சயமாக எந்த ஜனங்கள் தங்கள் தீனைப் பிரித்து ஒரு (தனி) கூட்டமானார்களே,அவர்களுடன் நீர் எவ்வஷயத்திலும் சேர்ந்தவரல்லர் .அவர்களது காரியமெல்லாம் அல்லாஹ்வின் பால் உள்ளன.பின்னர் அவர்கள் ( இவ்வுலகில் ) செய்து கொண்டிருந்தவை குறித்து (மறுமையில் ) அவர்களுக்கு அவன் அறிவிப்பான் ( அல்குர்ஆன் : 6 =160 )

 பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
( ஓ ! ஆயிஷாவே ) ان الدين فرقوا دينهم وكنوا شيعا ( குர்ஆன் :6 /160 என்ற ஆயத்தை ஓதி ) நிச்சயமாக எந்த ஜனங்கள் தங்கள் தீனைப் பிரித்து ஒரு (தனி) கூட்டமானார்களே,என்று அல்லாஹ் கூறுகிந்றானே ! அவர்கள் தான் பித்அத்துகாரர்கள்.எந்த பாவமுள்ளவனுக்கு தௌபா உண்டு.ஆனால் தீனைப் பிரிக்கும் இந்த பித்அத்துக் காரர்களுக்கு பாவமன்னிப்பு அறவே இல்லை. நான் அவர்களை வெறுக்கிறேன்.அவர்கள் என்னை வெறுக்கிறார்கள் என்று அருளியுள்ளார்கள். 
( நூல் : கீமியாயே ஸஆதத் = பாகம் = 4 , பக்கம் = 4 )


 நாம் நினைக்கின்றோம்



இஸ்லாத்தின் எதிரிகள் யஹூதி,நஸரானிகள்,முஷ்ரிக்குகள்,காஃபிருகள் மாத்திராமல்ல சொந்த இனத்தையே கெடுக்கும்கோடாரிக்காம்பு என்னும் பழமொழிக்கொப்ப மேற்கண்ட ஹதீஸில் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் திருவாய் மொழிமூலம் இனங்காண்பித்து தந்துள்ள தீனை துண்டு போடும் பித்அத்துக் காரர்களாகியா நயவஞ்சகர்கள் எனப் புரிந்து கொள்ள் முடிகிறது 

உருது மொழியில் தேவ்பந்த் என்றாலே பேய்களையும்,பிசாசுகளையும்,ஷைத்தானையும் அடைத்து வைத்தல் என்றுதான் பொருள்.வஹ்ஹாபிய ஷைத்தான்களுடை கொள்கையை பரப்ப தேவ்பந்த் மதரஸாவும் தப்லீக் ஜமாஅத்தும் எப்படியெல்லாம் துணை நிற்கிறது என்பதை நீங்கள் இந்த கட்டுரையை படிக்கும் போது புரிந்துகொள்விர்கள் 

உலகில் தோற்றுவிக்கப்படும் எல்லா இயக்கங்களும்,அமைப்புகளும்,தங்களின் பிரதான நோக்கங்களையும்,கொள்கைகளையும்,அதை செயல்படுத்தும் நடைமுறைகளையும்,ஒளிவு,மறைவுன்றி மக்களிடத்தில் ஆதரவு கேட்டு தங்களை வளர்த்துக் கொள்கின்றன.இந்நிலை நாடு,தேசம்,மதம்,இனம், என்ற பாகுபாடின்றி அனைத்துக்கும் பொருந்தும்.

சமீபகாலங்களாக இஸ்லாமிய மார்க்கத்தில் புகுந்து மார்க்கத்தையே சல்லடையாக்க முயற்சிக்கும் வஹ்ஹாபிய தீவிரவாத இயக்கம் தமிழகத்திலும் தன்னை நிலை நிறுத்த முயற்சித்து அஹ்லுல்குர்ஆன்,அஹ்லுல்ஹதீஸ்,வஹாபிகள் தொடங்கி தவ்ஹீது வஹாபிகள் வரை தங்கள் கொள்கைகளையும் நோக்கங்களையும்'' நாங்கள் குர்ஆனை மட்டும் பின்பற்றுவோம்,ஹதிஸுக்கள் வேண்டாம்,நாங்கள் ஹதிஸை மட்டும் பின்பற்றுவோம்,குர்ஆன் வேண்டாம். ரஸூலுல்லாஹ் சாதாரன மனிதர்தான்,தனிப்பெரும் சிறப்பு ஒன்றுமில்லை,ஸஹாபாக்கள் தவறு இழைத்திருக்கிறார்கள்.

இஸ்லாத்தின் நாற்பெரும் இமாம்கள் எதற்க்கு ? எங்களுக்கு எல்லாம் தெரியும். யார் இந்த இறைநேசர்கள் இடைத் தரகர்களா ? என்று கொஞ்சமும் இஸ்லாமும்,ஈமானும் இன்றி தரக்குறைவாவும் தாறுமாறாகவும் விமர்சனம் செய்து தங்களுடைய முழுமையான அடையாளம் காட்டி சுன்னத் வல் ஜமாஆத் பொது மக்களை தம்பக்கம் இழுக்க முயற்சிக்கின்றார்கள்.


ஆனால் உத்திர பிரதேச மாநிலத்தில் தேவ்பந்து என்ற ஊரில் தாருல்உலூம் காஸிமிய்யா என்று தோற்றுவிக்கப்பட்ட வஹாபிய அமைப்பும் மதரஸாவும்,அதன் கொள்கைகளையும் நோக்கங்களையும் செயல்படுத்த துடிக்கும் தப்லீக் ஜமாஅத் இயக்கம்,முழுக்க முழுக்க வஹ்ஹாபிய கொள்கை கோட்பாடுகளையும்,சித்தாந்த நடைமுறைகளையும்,இன்னும் சொல்லப் போனால் தவ்ஹிது வஹாபிகளை விட கேவலமாக அல்லஹ்,ரஸூலுல்லாஹ்,வலிமார்கள் என எல்லோரையும் கேவலமாக தங்கள் நூல்களிலும் எழுதி அதனை திரும்ப திரும்ப பக்கங்களில் மாற்றி அச்சுப்போட்டு வெளியிட்டுக் கொண்டு பள்ளிவாசல்கள் தோரும்.


தாலீம் கிதாப் நிசாப் (1980 வரை வாசிக்கபட்டது ) பின் அதுவே சரியில்லை என்று கூறியபோது சற்று பக்கங்களை கூட்டி ஃபஜாயிலுல் ஆமால் (2000 வரை  வாசிக்க்ப்பட்டது ) அதுவும் சரியில்லை என்று கூறி இப்போது முந்தகபாத்து ஹதீஸ் என்று கூறி எதையோ வாசிக்கிறார்கள்.நாங்கள் கலிமா எத்திவைக்கிறோம்,தொழுகைக்கு அழைக்கிறோம் என்று வெளிப்படையாக கூறி,ஏமாற்றி தவ்ஹீதுவாதிகள் கூறும் அதே வஹாபியக் கொள்கையை மக்கள் மீது திணிக்கிறார்கள்.அதிலும் தாங்கல் சுன்னத் ஜமாஅத் தான் என்பதுதான் இதில் மாபெரும் முனாஃபிக்தனமான அவர்களின் கூற்றாகும்.


எனவேதான் எல்லா அமைப்புகளும்,இயக்கங்களும்,தங்கள் கொள்கைகளையும்,நோக்கங்களையும் வெளிப்படையாக கூறும்போது தேவ்பந்திகளும்,அதன் இயக்கமான தப்லீக் ஜமாஅத் மட்டும்தான் தங்களுடைய வஹாபியக் கொள்கையை மக்கள் முன் கூறாமல் கலிமாசொல்லிதர அழைக்கிறோம்?,தொழுகைக்கு அழைக்கிறோம் ?என்ற போர்வையில் நூழைந்து கொண்டு வஹாபிய கொள்கையைதான் சொல்கிறார்கள் ( தேவ்பந்து,தப்லீக் ஜமாஅத்தும் ஒருஅழுகியமரத்தின் வஹாபிய குட்டையில் ஊரிய மட்டைகள் )என்பதை  இந்த நூல் முடிவில் உங்களுக்கே புரியும் .. அன்பர்களே :


வஹ்ஹபிகள் என்று அழைக்கப்படுபவர்  யார் ?

اما محمد فهو صاحب الدعوة التي عرفت بالوهابية


முஹம்மத் என்னும் பெயருடையவரைத் தான் வஹ்ஹாபிகள் எனச் சொல்லப்படுகிறது


 عن  عبد بن عمر رضي الله عنهما قال:قال رسول الله صلي الله عليه و اله وسلم اللهم بارك لنا في شامنا اللهم برك لنا في يمننا قالوا وفي نجدنا قال اللهم بارك لنا في يمننا اللهم بارك لنا في شامنا قالوا و في نجدنا يارسول الله صلي الله عليه و اله وسلم فأظنه قال في الثالثة هناك الزلازل والفتن وبها يطلع قرن الشيطان

யா அல்லாஹ் ! எங்களின் ஷாமுக்கும் எமனுக்கும் பரக்கத்துச் செய்வாயாக என ஏந்தல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்தினர்.அப்போது அங்கிருந்த தோழர்களில் ஒருவர்,எங்களின் நஜ்துக்கும் ( அவர் அப்பகுதியை சேர்ந்தவர் ) என்று சொல்ல,நபியவர்கள் மீண்டும் இரண்டாவது முறையாக ஷாமுக்கும் எமனுக்கும் பிரார்த்திக்க,அவர்மீண்டும் இரண்டாவது முறையாக ஷாமுக்கும் எமனுக்கும் பிரார்த்திக்க,அவர் மீண்டும் எங்களின் நஜ்துக்கும் என்று சொல்ல, நபியவர்கள் மூன்றாம் முறையாக மறுபடியும் ஷாமுக்கு எமனுக்கும் பிரார்த்திக்க,அவர் மீண்டும் நபியவர்களிடம் எங்களின் நஜ்துக்கும் என்று சொல்ல,அதுகேட்ட நபியவர்கள் ;அங்கிருந்து தான் குழப்பங்களும் பூகம்பங்களும் ஷைத்தானுடைய கொம்பு உதயமாகும் என்று சொன்னாரகள்

(நூல் : புகாரி,திர்மிதீ. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹூ அன்ஹூ )


يخرج قوم من قبل المشرق يقرؤون القران لا يجاوز تراقيهم كلما قطع قرن نشأقرن حتي يخرج في بقيتهم الدجال

''கிழக்கிலிருந்து ஒரு கூட்டம் வெளியாகும்.அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்.அது அவர்களின் தொண்டைக் குழிக்குக் கீழே இறங்காது.ஒவ்வொரு கூட்டமும் மறையும் தாருவாயில் இன்னொரு கூட்டம் தோற்றம் எடுக்கும்.இவ்வாறு அவ்ர்கள் தஜ்ஜால் வெளிப்படும்வரை தோன்றிக் கொண்டிருப்பார்கள்''.

நூல் : முஸ்னத் அஹ்மது, பாகம்: 2 ,பக்கம் : 692 .எண்: 6952 

இப்னு தைமியா :


 நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் : கூற்றின் படி நஜ்து ( ரியாத் ) தேசத்தில் இப்னுதைமியா என்பவர் உண்டானார்.இவர் கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றருந்தும் அகக்கண் குருடானவர்;இறைவனால் இருதயத்துலும்,செவியிலும் முத்திரை இடப்பட்டவர்.இவர் எழுதிய புத்தகங்களில் சிராத்தல்-முஸ்தகீம் என்பது ஒன்று.இதில் அவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்,அஹ்லெ பைத்து,ஸஹாபக்கள்; இமாமெமுஜிதஹிதுக்கள்,அவ்லியாக்கள் ஆகியோரை இழிசொற்களால் நிந்தித்து சொல்லத்தகாத சொற்களால் தூஷணம் செய்துமிருக்கிறார்,மேலும் இமாமுகளின் ஏகோபித்த அபிப்பிராயங்களுக்கு முற்றிலும் முரணாக ( மஸாயில்கள் ) வதிமுறைகள் உண்டுபண்ணியிருக்கிறார்,

அக்காலத்தில் பிரபல உலமாக்கள்  இப்னுதைமியாவின் கருத்துக்கள் கொள்கைகளுக்கு மறுப்பு எழுதி இருக்கிறாரகள்.இவருடைய பிரச்சாரத்தால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டு இறுதியாக சிரியா அரசாங்கம் டமாஸ்கஸ் நகரசிறையில் இவரை சாகும் வரை காவலில் வைத்தது.இவர் ஹிஜ்ரி 728 இறந்தார்.

இப்னு தைமியாவை பின்பற்றிய அப்துல் வஹ்ஹாபு நஜ்தீ :


 ஹிஜ்ரி 1203 துருக்கி சுல்தான் 2-வது அப்துல் மஜிதுகானின் மறைவுக்குப் பின் நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டது,இந்த சந்தர்ப்பத்தை இப்னு தைமியாவின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி பிரச்சாரம் செய்துவந்த அப்துல் வஹ்ஹாப் நஜ்தீ என்பவர் பயன் படுத்திக்கொண்டு சூழ்ச்சி செய்து தாமே தலைவராக பிரகடனப்படுத்திக் கொண்டார்.இவர் தமது உறவினர்களை அரசாங்க அதிகாரிகளாக்கினார்.துருக்கி சுல்தானுடைய பெயருக்கு பதிலாக அப்துல் வஹ்ஹாபு நஜ்தீயுடைய பெயர் குத்பா வில் சேர்க்கப்பட்டது.

இவர் இப்னுதைமியாவை பின்பற்றி புதிய ஒரு மதுஹபு உண்டாக்க முற்பட்டு சுன்னத் வல்-ஜமாஅத்திற்க்கு முற்றிலும் முரண்பட்ட கொள்கைகளை உருவாக்கினார்.இவருடைய இளைய மகன் முஹம்மது என்பவர் அதற்கு மெருகேற்றி விரிவுரை செய்து அதற்கு கிதாபுத் தொஹிது என்று பெயரிட்டார்.

முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபு நஜ்தீ :


அப்துல் வஹ்ஹாபுடையமகன் முஹம்மது ( முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபு ) தகப்பனுக்குப்பின் தலைவராகி ஓதும்போதுதெல்லாம் '' நபியைக் கொண்டு சிபாரிசு தேடுகிறவன் காஃபிராவன் '' என்று ஓதுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.இவருடைய படைத்தலைவன் சவுது ( ஹிஜாஸ் பகுதிகளை உள்ளடக்கிய அரேபிய தீபகற்பம் இன்று இவன் பெயரலேயே சவுதி அரேபியா என்று சொல்லப்பபடுகிறது ) என்பவர் ஹிஜ்ரி 1221 ஹஜ்ஜூக்கு போவதாக பாசாங்கு செய்து பெரும்படையுடன் மக்காவுக்குள் நூழைந்து போருள்களை சூறையாடி,ஆண்,பெண்,குழந்தைகள்,வயோதிகர்கள் என்ற பாகுபாடு இன்றி எல்லாரையும் வெட்டி வீழ்த்தினான்.ஹரம் ஷரீபுக்குள் நூழைந்தவர்களையும் உயிர்பிழைக்கவில்லை.

பல பள்ளி வாயில்களும் கப்ருகளும் தகர்க்கப்பட்டன்,மதீனாவில்  ஹஜரத் அப்பாஸ் ,இப்னு அப்பாஸ் உஸ்மான்,ஃபத்திமா ஜவ்ரா ரலியல்லாஹூ  அன்ஹூம் ஆகியவர்களின் மக்பறாக்கள் இடித்து வீழ்த்தப்பட்டன். ஸலவாத் ஓதியவர்கள் கொல்லப்பட்டார்கள் ஹதீஸ் பிக்ஹ் நூற்கள் முதலியவை எரிக்கப்பட்டன.ஜித்தா,தாயிஃப்,மக்கா,மதினா,கர்பலா நகரங்கள் இக்கெடுதிக்குள்ளாகின;ரவுலத்துன் நபியையும் தரைமட்டமாக்க முற்பட்டபோது அந்த ஷைத்தாங்கள் அற்புதமாக செத்துமடிந்தார்கள்.அதாவது நபியின் மண்ணறையை இடிக்கப் முயன்றவன் பாம்பு கொட்டி இறந்தான்.இன்றைய தவ்ஹிது வாதிகள் அடாவடிகளின் மூலர்கள் இவர்கள்.

இந்தியாவில் வஹ்ஹாபியக் கொள்கையை பறப்பிய நபர் ;


பதிமூன்றாம் நூற்றாண்டின் டில்லி மாநிகரில் ஷாஹ் வலி( ரஹ் ) அவர்கள் இரண்டு மகன்கள் 1- அப்துல் அஸீஸ் திஹ்லவி , 2- அப்துல் கனி நதவி அவர்கள் இரண்டாவது மகனுக்கு பிறந்தவர் முஹம்மது இஸ்மாயில் திஹ்லவி  இவரை பற்றி வழிகேட்டின் மொத்த உருவம் தப்லீக் ஜமாஅத் என்ற தலைபில் எழுதிவுள்ளேன் அதை பார்துக்கொள்ளுங்கள் 

தேவுபந்தி என்று அழைக்கப்படுபவர்கள் யார் ???


தேவ்பந்தி என்பவர்கள் யார் ? என்பதை விளக்குகிறேன். வஹ்ஹாபிகள் இரு கூட்டத்தார்களாவார்கள்.
  1. ஒரு கூட்டத்தார் வஹ்ஹாபியக் கொள்கையின் ஸ்தாபகரான முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபு நஜ்தியையும்,வஹ்ஹாபி கொள்கையை இந்தியாவில் முதன் முதலாகப் பரப்பிய இஸ்மாயில் திஹ்லவியையும் முற்றிலும் பின்பற்றிய கைற முகல்லிது ( இமாம்களை பின் பற்றாத ) வஹ்ஹாபிகள்.
  2. இரண்டவது கூட்டத்தார்கள் முற்றிலும் கொள்கை விசயத்தில் முதல் கூட்டத்தாரை பின்பற்றி நடப்பதோடு கிரியைகள் விசயத்தில் மத்ஹபு இமாம்களைப் பின்பற்றி தங்களை ஹனஃபி,ஷாஃபி,மாலிகி,ஹம்பலி என்றும் சொல்லக் கூடிய முகல்லிது 
வஹ்ஹாபிகளாவார்கள்.இவர்களின் தலைவர்கள் முஹம்மது காசிம் நானூத்தவி,ரஷீத் அஹ்மது கொங்கோஹி,கலீல் அஹ்மது அம்பேட்டி,அஷ்ரஃப் அலிதானவி ஆகியோர் ஆவார்கள். இவர்கள் தேவுபந்து என்னும் நகரிலுள்ள தாருல் உலூம் காசிமிய்யா என்னும் மதரஸாவின் ஸ்தாபரும்,அதன் பிரதான ஆசிரியர்களுமாக,இருந்து அம்மதரஸாவில் இந்தக் கெட்ட கொள்கைகளைப் போதித்துப் பரப்பி வந்ததினால் அவர்களுக்கும் அவர்களைப் பின் பற்றியவர்களுக்கும் இவர்கள் எத்தேசத்தினரானாலும் சரியே ! தேவுபந்திகள் என்று அழைக்கப்படுவார்கள்.

( நூல் : காதியானி & தேவ்பந்தி சம்பாசனை )

மௌலவி காஸிம் நானோத்வி வஹ்ஹாபிய கொள்கையை பரப்புவதற்கென ஒரு பீடமாக தாருல் உலூம் காஸிமியா என்ற அரபிகலா சாலையை தேவ்பந்த் என்ற ஊரில் 1870 ல் துவக்கியவர்களில் ஒருவர் இந்த பாடசாலையைத்தான் ஊரின் பெயரால் தாருல் ஊலூம் தேவ்பந்த் என்று அழைக்கின்றனர்.

வஹ்ஹாபிய சித்தாந்த்தை பரப்புவதற்கென பாடுபட்டு,வெற்றிகண்ட தேவ்பந்திய மௌல்விகள்

  1. மௌலவி காஸிம் நானுத்தவி ;இவர் தேவ்பந்த் மதரஸாவின் ஸ்தாபகரும்,தேவ்பந்திய கூட்டத்தின் முதல் இமாமும் ஆவார்.
  2. மௌலவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி ; இவர் தேவ்பந்திய கூட்டத்தின் இரண்டாவது இமாமும்,தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகர்.மௌலவி இல்யாஸ் காங்கலவியின் முதல் குருவும் ஆவார்.இவரிடமே மௌலவி இல்யாஸ் 10 வருடங்கள் கல்வி பயின்றுள்ளார்.
  3. மௌலவி கலீல் அஹ்மது அம்பேட்டி ; இவர் தேவ்பந்திய கூட்டத்தின் மூன்றாவது இமாமும்,தப்லீ ஜமாஅத்தின் ஸ்தாபர் மௌலவி இல்யாஸ் காந்தலவியின் இரண்டாவது குருவும் ஆவார்.
  4. மௌலவி அஷ்ரஃப் அலி தானவி ; இவர் தேவ்பந்திய கூட்டத்தின் நாங்காவது இமாமும்,தப்லீக் ஜமாஅத்தின் மூலம் அஷ்ரஃப் அலி தானவியின் கொள்கையை பரவலாக்க விரும்புகிறேன் என்று தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகர் மௌலவி இல்யாஸ் காந்தலவி யாரை குறித்து பேசினாரோ,அந்த நபரே இவர் 
  5. மௌலவி இல்யாஸ்காந்தலவி, தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகர் அவர்.

மௌலவி இல்யாஸ் காந்தலவியும்,தப்லீக் ஜமாஅத்தும் :


தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தபகர் மௌலவி இல்யாஸ் வஹ்ஹாபிய்ய உலமாக்களுடைய சகவாசத்திலும் அவர்களுடைய கண்காணிப்பிலும் இருந்தார். அவர்களுடைய ( வஹ்ஹாபிய்ய ) மதஆர்வத்திலேயே வளர்ந்தார். அவர்களுடைய குணங்களையே ( கொள்கைகளை ) பூண்டார் என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளபட்டதாகும்.

அவர் பூரணமாக பத்து வருட காலத்தை வஹ்ஹாபிகளுடனேயே கழித்திருந்தார்.ஆரம்பகாலத்தில் வஹ்ஹாபிகளுடைய சற்குரு மௌலவி ற்ஷீத் அஹ்மத் காங்கோஹி இடத்தில் ( முரீதானார் ) தீட்சை பெற்றார்.

அவர்காலம் சென்ற பின் மற்றோரு பிரபல்யமான வஹ்ஹாபி மௌலவி கலீல் அஹ்மது அம்பேட்டி அவர் இடத்தில் பைஅத்துச் செய்தார்.மௌலவி இல்யாஸ் ஸாகிபு சில காலம் ஸஹாரன்பூரில் வஹ்ஹாபிய்யாக்களின் பிரபலமான மளாஹிருல் உலூம் என்ற மத்ரஸாவில் ஆசிரியராகவும் இருந்தார்.


தப்லீக் முறை கனவில் அருளப்பட்டது ;



மௌலவி இல்யாஸும் தனக்கு இந்த தப்லீக் முறை கனவில் அருளப்பட்டது என்று சொல்கிறார்.அவருடைய மல்பூஜாத்து =40 வது பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இல்யாஸ் சொன்னார் '' இந்த தப்லீக்கின் முறை எனக்கு கனவில் வெளியாயிற்று '' அல்லாஹ்வின் திருவசனமான 

كنتم خير امة اخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر و تؤمنون باالله ولو امن اهل الكتب لكان خيرا لهم منهم المؤمنون والكثرهم الفسقون 


٣=١١٠
ஜனங்கள் அளவில் அனுப்பப்பட்ட விஷேச உம்மத்தாக நீங்கள் நல்லவற்றைக் கொண்டு ஏவவும்,கெட்டவற்றை விட்டு விலக்கவும் அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொள்ளவும் .... என்ற திருமறை வசனத்திற்க்கு  வியக்கியானம் நீவிர் நபிமார்களைப் போன்றவர் உன்மை ஜனங்களுக்காக வெளியாக்கப்பட்டது என்பதாக கனவில் எனக்கு அறிவிக்கப்பட்டது.

மேலும் இல்யாஸ் தன்னுடைய கனவில் '' குன்தும் கைர  உம்மத்தின் '' என்ற திருமறை வசனத்தின்  வியக்கியானம்:நீர் (இல்யாஸ் ) நபிமார்களை போன்றவர்.உன்மை ஜனங்களுக்காக வெளியாக்கப்பட்டது.என்று  அறிவிக்கபட்டதாக சொல்வதனால் அவரும் நபித்துவத்தை தாவாச் செய்ய ஆசிக்கிறார்.என்னிப் பார்க்கிறார் என்பதும் விளங்கவில்லையா ? ஏன் அவருக்கு மாத்திரம் அந்த ஆசை வாரதிருக்குமா ? அவருடைய ஆசிரியரும் குருவுமான  '' றஷீத் அஹ்மது காங்கோஹிக்கும் அந்த ஆசை வரவில்லையா ? அவரின் தக்கிறதுர் றஷீது இரண்டாம் பாகம் 17 வது பக்கத்தில்  '' இக்காலத்தில் நேர்வழியும் ஈடேற்றமும் என்னைப் பின்பற்றுவதின் பேரிலேயே தரிப்படிருக்கிறது '' என்றும் சொல்கிறார்.

இன்னமும் இல்யாஸுடைய ஆசிரியரான தேவுபந்தி,ஹகீமுல் உம்மத் என்று அழைக்கப்படும் அஷ்ரஃப் அலி தானவியைத்தான் அந்த ஆசை விட்டாதா ? அவரின் முரிதுகளிலொருவர் கனவிலும்,அப்பால் விழிப்பிலும் என்று பலமுறை ஓதிக்கொண்டிருந்ததைப் பற்றி குரு தானவிக்கு எழுதிக்கேட்க  உம்முடைய இச்சம்பவத்தில் நன்மாராயமிருக்கிறது.நீர் எவர் பக்கம் மீளுகிறீரோ அவர் ( தானவி ) மார்க்கத்தைத் தொடர்ந்தவராக இருக்கும் என்று மாத்திமே பதில் எழுதி சீடரின் அச்செய்கையை சரி கண்டாரா இல்லையா ? 

 நூல்: அல் இம்தாத், பக்கம் = 35 

இதற்காகத்தான் இவர்களின் ஆசிரியப் பெரியார் முஹம்மது காசீம் நானுத்தவி என்பவர்  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை  ( காத்த மன்னபிய்யீன் ) அவர்களுக்குப் பின்பு  வேறு நபி இல்லை. அவர்களோடு நபித்துவத்தின் வாசல் அடைப்பட்டுவிட்டது என்பதற்கு மாற்றமாக அவர்   நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்பு  வேறு நபி வந்தாலுங் கூட   நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் காத்தமுன்னபிய்யீன் என்பதற்க்கு வித்தியாசம் ஏற்பாடது என்று சொல்லி நபித்துவத்தின் கதவைத் திறந்து வைத்தார் போலும்.

ஆங்கிலேயரின் கைக்கூலிகளே தேவ்பந்திகள் :


மௌலவி ஸையத் அஹ்மது பரேலவீ என்பவர்.இவரது சிஷ்யர் இஸ்மாயில் திஹ்லவியும் சேர்ந்து தங்களது வஹ்ஹாபியக் கொள்கைகளை முஸ்லிம்களிடையே பரப்பவும்,ஆங்கிலேயே அரசிற்க்கு கூலியாக செயல்பட்டனர்.இவர்களின் கொள்கைகள் மிக மோசமானதாக இருந்ததால் பட்டான் முஸ்லிம்களால் துண்டு துண்டாக வெட்டிகொல்லப்பட்டு தூர வீசப்பட்டனர்.

ஆனால இவர்களை இந்த தரீக்காவினரும்,தப்லீக் இயக்கத்தினர்களும் '' ஷஹீது '' என்கிறனர்.இவர்கள் ஷஹீதாவதற்கு முஸ்லிகளின் எதிரிகளோடு ஜிஹாத் செய்தார்களா ? என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கிறது.மேலும் அப்போது சுதந்திரத்திற்காக பாடுபட்ட இந்தியர்களுக்கு எதிராகவும்,ஆங்கிலேயே அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டனர் என்பதை இவர்கள் எழுதிய  புத்தகங்களிலிருந்து எடுத்துக் காட்டி '' பாஸ்பான் " என்னும் பத்திரிக்கை ஆசிரியர் மௌலவி முஸ்தாக் அஹ்மத் சாஹிப் நிஜாமி  ( இலாஹாபாத் ) அவார்கள் எழுதிய நூலானா '' கூன்கே ஆனஸு '' ( இரத்தக் கண்ணீர் ) என்னும் நூலிலிருந்து இங்கே தருகிறேன்.

  1. ஸையது சாஹிப் (பரேலவியுடன் முஜாஹிதீங்கள் ஒன்று திரள ஆரம்பித்தானர்.உடன் மௌலவி இஸ்மாயீல் (திஹ்லவி ) உடைய ஆலோசனையின் பேரில் இலாஹாபாத்தைச் சார்ந்த செல்வந்தர் ஷைகு குலாம் அலியவர்கள் மூலம் தொடர்பு கொண்டு வடமேற்க்கு மாகாண லெப்டினட் கவர்னருடைய சமூகத்திற்கு நாங்கள் சீக்கியர்களுடன் ஜிஹாத் செய்ய ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறோம்.இதில் ஆங்கிலேயே அரசுக்கு ஆட்சேபனை ஏதுமில்லையே ! என்று கேட்டோம். அதற்கவர்கள் ..... எங்களின் செயல்திட்டம் மற்றம் அமைதிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று லெப்டினல் கவர்னர் சாஹிப் தெளிவாக எழுதிவிட்டார்.
நூல் : ஹயாத்துத் தைய்யிபா பக்கம் 302 தொகுப்பு :மீர்ஜா ஹஜரத் தெஹ்லவி 

இந்திய நாட்டை அப்போது ஆக்கிரமித்து அட்டூழியங்களும்,கொடுமைகளும் செய்து கொண்டிருந்த ஆங்கிலேயே அரசை எதிர்த்து மார்க்கப்போர் புரிய இந்திய உலமாக்கள் ஃபத்வா வெளியிட்டு களத்திலும் இறங்கி செயல்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ( அதற்க்காக மௌலவி பஜ்லுல் ஹக் ஹைதராபாதி ரஹ் போன்ரவர்கள் தம் இன்னுயிரை நீத்தனர் ) ஆங்கிலேய அரசின் கைகூலிகளாக  செயல்பட்டு வந்த இந்த ஸையித் அஹ்மத் பரேலவி,இஸ்மாயில் தெஹ்லவி போன்றோர் அவர்களின் அனுசரணை,தயவிற்காக கடிதம் எழுதுகின்றனர் பாருங்கள்.இந்த உதவியுடன் செய்யும் சண்டைகளை '' ஜிஹாத் '' என்று சொல்லி ஜிஹாத்திற்கு புதுவிளக்கம் அளிக்கிறார்கள் இவர்கள். 

'' கல்கத்தாவில் மௌலவி இஸ்மாயீல் திஹ்லவி ஜிஹாதைப் பற்றி பாயன் செய்து கொண்டிருக்கும் போது,ஒருவர் நின்று '' நீங்கள் ஏன் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஜிஹாத் செய்ய ஃபத்வா கொடுப்பதில்லை '' என்று கேட்டார்,அதற்கு மௌலவி இஸ்மாயீல் ..... '' ஆங்கிலேயர்களுடன் ஜிஹாத் செய்வதென்பது எவ்வகையிலும் வாஜிப்பில்லை .... அவர்கள் மீது எவரேனும் தாக்குதல் நடத்தினால் அப்படி தாக்குவோரை எதிர்த்துப் போரிட வேண்டியது முஸ்லீம்கள் கடமையாகும் ..''
 நூல் : ஹயாத்துத் தைய்யிபா பக்கம் = 296 

இவர்கள் இந்த ஆங்கிலேய பாசம்தான் இவர்களை இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக செயல்படத் தூண்டிற்று.இந்த கொள்கைகளை இஸ்லாமிய மக்கள் மத்தியில் பரப்பி ஒன்றுபட்டு போராடும் முஸ்லிம்களை சிதறச் செய்து பலவீனப்படுத்தி ஆங்கிலேயர்களுக்கு எதிராக கொடுக்கப்பட்ட ஜிஹாத் ஃபத்வாவை பலம்மிலக்க செய்வதுதான் இவர்களின் நோக்கமாக இருந்தது.இதற்காக இவர்கள் ஊர் ஊராக சென்றனர்.அதற்கு ஆங்கிலேயே அரசும் உதவிக்கரம் பலவகையிலும் செய்து கொண்டே வந்தது .


தேவ்பந்திகளுக்கு ஆங்கிலேயர்கள் செய்த பொருள் உதவிகள் :

ஸையத் அஹ்மத் பரேலவிக்கு ஆங்கிலேயர் செய்த உதவி பற்றி அபுல் ஹசன் அலி நத்வியால் எழுதப்பட்ட '' ஸிரத்தே ஸையத் அஹ்மத் என்னும் நூலின் பாகம் = 1 ,பக்கம் = 190 -ல் கூறப்பட்டுள்ளது.

'' இதற்குள் குதிரை மீது சவாரி செய்த ஒரு ஆங்கிலேயன் சில பல்லக்குகளில் உணவுப் பொருட்களைச் சுமந்து கொண்டு  எங்கள் படகிற்கருகில் வருவதைப் பார்த்தோம்.அருகில் வந்த ஆங்கிலேயன்... பாதரிசாஹிப் எங்கேயிருக்கிறார் ? என்று வினவினான்.உடனே ஹஜரத் அவர்கள் படகிலிருந்து நான் '' இங்கே இருக்கிறேன்'' பதில் தந்தார்.
''..தாங்களுக்காக சூரியன் மறையும் வரை உணவு தயாரிப்பதில் மும்முரமாயிருந்தேன் ''.இது கேட்ட ஸையத் சாஹிப் பரேலவி அவர்கள்,கொண்டுவரப்பட்ட உணவு பொருடகளை தமது பாத்திரங்களுக்கு மாற்றுமாறு ஆணையிட,உணவு பெற்றுக் கொள்ள்ப்பட்டு கூட்டத்தினர்களுக்கு விநியோக்கப்பட்டது. 

தேவ்பந்திகளுக்கு ஆங்கிலேயர்கள் செய்த பண உதவிகள் : 

ஸையத் சாஹிப் பரேலவி ஜிஹாதில் மும்முரமாய் ஈடுபட்டிருந்த நேரம் அப்போது டில்லியைச் சார்ந்த தனவந்தர்கள் மூலமாக முஹம்மது இஸ்ஹாக் என்பவரிடமிருந்து சையத் சாஹிபுடைய பெயருக்கு ஏழாயிரம் ரூபாய்க்கான ஒரு உண்டி ( ஒருவகை செக் போன்றது ) அனுப்பப்பட்டது ....

 ( நூல் ; தாரீகே அஜீபாஹ்  , பக்கம் = 89 )

இவர்களில் அஷ்ரஃப் அலி தானவி ஆங்கிலேய அரசாங்கத்திடமிருந்து மாதந்தோறும் அறு நூறு ரூபாய் கைக் கூலி பெற்றுள்ளனார்

 ( ஆதாரம் நூல் : மகாலிமத்துஸ் ஸத்ரைன் , பக்கம் = 10,11 )

அஷ்ரஃப் அலி தானவின் பரிந்துரையின் பேரில் அவர் சகோதரர் மஜஹர் அலி பிரிட்டிஷ் உளவு ஸ்தாபனத்தில் சி.ஐ.டி. யாக பணியாற்றினார். 

 ( ஆதாரம் நூல்: மக்தூபாத்தே ஷஹீது, பக்கம் =297,299 )

மேலே நாம் விவரித்த அத்துனை சம்பவங்களையும்,சான்றுகளையும் ஒருங்கிணைந்து மனக்கண் முன்னிருத்தி பார்க்கும்போது,வஹாபிகள் சியொனிச் ஆங்கில ஏஜெண்டுகளாக இருந்துகொண்டு இஸ்லாத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு,வஹ்ஹாபி அல்லாத முஸ்லீம்களையும் காட்டிக் கொடுக்கும் கயவர்கள் ! துரோகிகள் ! என்பது நன்கு புரிகிறது அல்லவா ! 

இல்லாவிட்டால் பாபர் மசூதியை இடித்த சங் பாரிவாளர்களுக்கு துணை நின்ற தலைவர்களுக்கு தப்லீக் உலமாக்கள் தலைப்பாகை கட்டி கௌரவித்திருப்பார்களா ? அதை தொலைக்காட்சியும்,ஏடுகளும் பகிரங்கப்படுத்தின. பாபர் மசூதி இடிப்பட்டது எந்த இஸ்திமாவிலும் தப்லீக்கினார் கண்டித்து பேசியதுண்டா ?  சிந்தியுங்கள் ! 

லிபிய்யவிற்க்கு சென்ற தப்லீக் ஜமாஅத்தினரை சந்தேகித்து அங்குள்ள உலமாக்கள் மூலமாக இவர்களின் கொள்கைகள்,நோக்கங்கள்,திட்டங்களை அலசி ஆராய்ந்த பின் இவர்கள் சி.ஐ.ஏ. ஏஜெண்டுகள் என்றும் ( அமெரிக்க உளவு ஸ்தாபனம் ) ஷைத்தானியத்தான ஒரு கூட்டமென்றும் லிபிய்யாவின் அதிபர் கர்னல் முஹம்மது கத்தாபி பிரகடனப்படுத்தி தப்லீக் ஜமாஅத்தினர் லிபிய்யாவில் நூழையாமல் தடை செய்ததை கராச்சியிலிருந்து அக்டோபர் =6, 1989-ல் மெளிவந்த அஹ்வால் என்று உருது வார இதழ் இனங்காட்டியுள்ளது .


தேவ்பந்திகளின் போலி தரீக்கா வேஷம் :


''தொழுகைக்கு அழைக்கின்றோம் '' என்ற பசப்பு வார்த்தையின் மூலம் மக்களை வழி கெடுத்து போதாது என்று புனித தரீக்காவின் பெயர்களை கூறி தன்னை ஷைகு என போலி வேடம் தரித்து தற்காலத்தில் வஹ்ஹாபிய கொள்கைகளை பறப்ப தரீக்காவின் வேடம் பூண்டு நூழைந்துள்ளார்கள் இன்ஷா அல்லாஹ் இதை பற்றி போலி தரீக்கா என்ற தலைப்பில் எழுதவுள்ளேன் அதில் படித்து தெரிந்து கொள்ளுங்கள் .

தேவ்பந்திகளின் தமிழக ஏஜெண்டுகள் :

  1. பாக்கியாத்திலிருந்து தேவ்பந்திய கொள்கைகளுக்கு வால் பிடித்ததற்காக  வெளியேற்றப்பட்ட லால் பேட்டை அமானி ஹஜரத்தின் வெளிப்புசலைக்கண்டு ஏமாறாதீர்கள்
  2. காஸிபுல் ஹூதா என்ற பெயரில் மதரஸா ஒன்றை சென்னை நூம்பல் பகுதியில் நடத்திவரும் யாகூப் விஷார என்னும் தேவ்பந்த் ஏஜெண்ட் 

முடிவுரை 

இன்நூல் தொகுக்கப்பட்ட நோக்கத்திற்கான முடிவுரைக்கு வருவோம்.இதில் நாம் எடுத்து வைத்திருக்கின்ற கருத்துக்களில் சந்தேகங்களும்  வரலாம்.ஒரு நூற்றாண்டை கடந்த மாபெரும் மதரஸாவான தாருல் உலூம் காஸிமிய்யா ( எ ) தேவ்பந்து மதரஸா பிரிடிஷ் ஏகாதிபத்தின் அடிவருடியா ? இதை ஜீரணிக்க முடியவில்லையே என்று எண்ணம் தோன்றலாம்.ஆனால் உலக நடைமுறை வரலாறுகள் நம்மை நம்பச் செய்கின்றன.

700 ஆண்டுகள் இஸ்லாமிய ஸ்பெயின் ஆட்சியையும் அரேபிய தீபகற்பத்தில்  நிலைத்திருக்கும் துருக்கி நாட்டின் உஸ்மானிய பேரரசு கிலாபத் ஆட்சி சூழ்சிகள்,சதிகள் 200 ஆண்டுகள் செய்து சின்னபின்னமாக்கப்பட்டது.அரேபிய தீபகற்பத்தை துண்டு துண்டாக பிரித்து இஸ்ரேல் யூத அரசை அராஜகத்தோடு பாலஸ்தீனத்தீல் புகுத்தியதும் இன்றுவரை சவூதிய & யஹூதி பிரஜைகள் மக்கா,மதீனா,ஆட்சி பீடத்தில் அமர்த்தி இஸ்லாத்தின் அத்துணை புனித திருத்தலங்களை அழித்து ஒழித்து யூதவஹாபிய சவூதிய அமெரிக்க ஏகாபத்தியமே.

அதன் ஒர் திட்டமாக இந்தியாவில் வஹாபியத்தை சன்னம் சன்னமாக திணித்து தேவ்பந்து மதரஸா ஆரம்பிக்கப்பட்டு அதன் ஆக்டோபஸ் கரங்களால் தமிழகம் போற்றும் தாய் மதரஸாவாம் பாக்கியாத்தையே முழுங்கி ஏப்பம் விட தயாரான போதுதான் பாக்கியாத்தின் மீது உண்மை பற்றுள்ள பாக்கவிகள் துடித்தெழுந்து  முனைப்போடு செயல்பட்டு லிபாஸ் என்று சங்கம் நிறுவி விஷாரத்து வஹாபிய சாத்தாங்களையும்,சென்னை தவ்ஹித்  வஹாபிய காஷிஃபிக்களுடனும் மல்லுக்கடி போரடி வருகின்றனர்.

தேவ்பந்து மதரஸா தாருல் உலூம் காஸிமிய்யா வஹாபிய பாசறையின்றி வேறென்ன ? 

தேவ்பந்து மதரஸாவின் தப்லீக் ஜமாஅத் எத்தனை கலிமாவை எத்தி வைத்தாலும் ( காஃபீர்களுக்கு இல்லை,அதுவும் முஸ்லீம்களுக்கு ) எவ்வள்வு பேரை தொழுகைக்கு அழைத்தாலும் எத்தனை இஜ்திமாக்காளும் கூட்டம் கூட்டினாலும்,ஒரே ஒரு தீர்மானமோ இஸ்லாத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் ஏதும் செய்யாமல் மக்களை வியாபரத்திலிருந்து,உத்தியோகத்திருந்து,சொந்த தொழில்களிருந்து,போண்டியாக்கி வானத்துக்கு மேலும் பூமிக்கு கீழும் யோசிக்கவைத்து முஸ்லீம்களின் வாழ்வாதரங்களை ஒழித்துக்கட்டும் தப்லீக் ஜமாஅத் அமெரிக்கா அடிவருடிகளை என்பதற்க்கு பலவகைகளிலும் பல நாடுகளிலும், நிரூபிக்கப்பட்ட பின்னர் தப்லீக் இயக்கம் வஹாபிய இயக்கம்ல்லாமல் வேறு என்ன இயக்கம் ?

தப்லீக் இயக்கத்தின் ஸ்தாபகர் இல்யாஸ் கூற்றோடு பாருங்கள் ;ஜஹீருல் ஹசன் மக்கள் நினைக்கிறார்கள் ( தப்லீக் இயக்கம்) தொழுகைக்கு அழைக்கும் இயக்கமென்று நான் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சொல்கிறேன்.இது ஒருபோதும் தொழுகைக்கு அழைக்கும் இயக்கமல்ல, மாறக புதியதோர் கூட்டத்தை உருவாக்கும் இயக்கமே.

அந்த புதியதோர் கூட்டம் தான் வஹ்ஹாபிய்யத் என்ற உண்மை நிலையை உங்கள் சிந்தனைக்கு விட்டு விடுகிறோம்.

நேரான சுன்னத் வல் ஜமாஅத் பாதையில் எங்களை நடத்தாட்டுவாயாக யா அல்லாஹ் என்று இறை நேசச் செல்வர்களாம்  வல்ல வலிமார்கள் வஸீலா தேடி நிறைவு செய்கிறோம். 

                                                                    வஸ்ஸலாம் ....
  1.  



 











No comments:

Post a Comment