எச்சரிக்கை விஷக்கிருமிகளின் விபரீதம்அல்லாஹ் அருளியுள்ளவசனங்களையும் & வார்த்தைகள்யும்அவசியம் இல்லை என்று அலட்சியம் செய்யும் பி.ஜெ என்ற நவீன குழப்பவாதி குர்ஆனில் விளையாடுவதை பாருங்கள்
குழப்பவாதியான பி ஜெ எழுதியுள்ள திருகுர்ஆன் தமிழ் தர்ஜமாவில் வசனங்களையும் & வார்த்தைகளையும் தன் மன இச்சை படி விளக்கம் எழுதி உள்ளார் என்பதற்கு இந்த ஒரு உதாரணமே போதும் ,,
ஏன் ? என்றால் தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள்'' ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல '' பிஜெ எழுதிவுள்ள தமிழ் தர்ஜூமா முழுவதும் தவறு என்பதற்க்கு இந்த ஒரு ஆயத்தே சான்றாகும் .
நாம் அனைவரும் இந்த வசனத்தை அதிகமாக ஓதியுள்ளோம் & கேட்டுவுள்ளோம் .ஆனால் பிஜெ எப்படி அர்த்தம் செய்து இருகிறார் என்று பாருங்கள் .. "' [ முஹம்மதே] அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம் ""[அல்குர்ஆன் =21 / 107 ]
இதனுடைய சரியான அர்த்தம் பின்வருமாறு இருக்க வேண்டும் . "" [முஹம்மதே]அகிலத்தினருக்கு அருளாகவே தவிர உம்மை நாம் அனுப்பவில்லை "" இந்த ஆயத்தில் "' இல்லா '' என்ற வாசகத்திற்கு அர்த்தம் செய்யவில்லை , இவை போன்றுள்ள வசனங்களில்
மா '' என்பதற்கும்
இல்லா '' என்பதற்கும்
இன்ன' என்பதற்கும்
கத்' என்பதற்கும்
அன்ன ' என்பதற்கும்
அர்த்தம் எழுதாமல் ,அதிலிருந்துபெறப்படும் கருத்தை மட்டும் எழுதியுள்ளார் .
. '' [முஹம்மதே]அகிலத்தினருக்கு அருளாகவே தவிர உம்மை நாம் அனுப்பவில்லை "" என்பதற்கும் "' [ முஹம்மதே] அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம் ''
என்பதற்கும் என்ன வித்தியாசம் இரண்டும் ஒரே கருத்தை தான் கொண்டுதுள்ளது என்பது தானே உங்கள் மனதில் எழும் சந்தேகம் !
இந்த வசனத்தில் ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது அதை நீங்கள் விளங்க வேண்டும் என்றால் .ஓர் உதாரணத்தின் மூலம் இதனை விளங்கிக்கொள்ளலாம்..
[ 1 ] ஜைதுன் ஃபித்தாரி [ ஜைது வீட்டிலிருக்கிறான் ]
[ 2 ] மா ஃபித்தாரி இல்லா ஜைதுன் [ ஜைதைத் தவிர விட்டில் வேறு எவறும் இல்லை ] ..
இவ்விரு வாசகங்களும் வெளித்தோற்றத்தில் ஒரே மாதிரியான கருத்தை தெரிவிப்பது போன்றிருந்தாலும் .இவ்விரண்டுக்குமிடையே மிக பெரிய வித்தியாசமும் முக்கியமான வேறுபாடு உள்ளது .
அதாவது : முதல் வாசகம் ஜைது வீட்டிலிருஹிரான் என்பதை மட்டும் தெரியப்படுத்தும் .வேறு எவரும் அவ்வீட்டில் இல்லை என்பதை அது தெரிப்படுத்தாது .மற்றவரும் இருக்கலாம் என்பதற்கு இடமிருக்கிறது .. இரண்டாவது வாசகம் : ஜைதைத் தவிர வேறுஎவரும் அவ்வீட்டில் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தும் ....
இவ்வாறே-
[முஹம்மதே]அகிலத்தினருக்கு அருளாகவே தவிர உம்மை நாம் அனுப்பவில்லை ""என்றால் நம்முடைய தூதர் முஹம்மது [ ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸல்லம் ]அவர்களை மட்டுமே அகிலங்கள் அனைத்திற்கும் ரஹ்மத்தாக ஆக்கிவயுள்ளோம் . வேறு எவரையும் நாம் அவ்வாறு ஆக்கவில்லை ; அனுப்பவில்லை என்பது கருத்தாகும் .. ,,,
"' [ முஹம்மதே] அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம் '' என்றால் மேற்கூறப்பட்ட கருத்து அதில் அறவே கிடைக்காது . அல்லாஹ் அருளிய நோக்கத்தையும் அது தராது ...
இதனால்தான் '' வணக்கத்திற்குறியவன் அல்லாஹ் ஒருவன் தான் அவனைத் தவிர வேறு எவரும் -எப்பொருளுமே -இல்லை .என்பதற்கு '' லா இலாஹ இல்லல்லாஹ் '''என்ற உயர் மிகு கலிமாவை அல்லாஹூ தஃஆலா அமைத்துத் தந்துள்ளான் .
இப்புனித வாசகத்திற்கு '' வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை '' என்பது முஸ்லிம்கள் விளங்கிவைத்துள்ள அர்த்தம் ஏன் ?உலகம் முழுவதும் பிரபலமான அர்த்தமும்தான் .
இதற்கு ''' வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் தான் ''' என்று அர்த்தம் செய்தால் எவ்வாறு அதன் அர்த்தமும் நோக்கமும் சிதைந்துவிடுமோ அவ்வாறே மேற்கூறப்பட்ட வாசகத்திலும் ஏற்பட்டுவிடும் .எனவே "' [ முஹம்மதே] அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம் ''' என்று பிஜெ அர்த்தம் செய்திருப்பது மாபெரும் தவறாகும் .
மேலும் , அல்லாஹூதஃஆலா அருளியுள்ள வார்த்தைகளை நீக்கி விட்டு தன் மனோ ஆசைப்படி அர்த்தம் செய்திருப்பது அதற்கு திருகுர்ஆன் என்று பெயர் வைத்திருப்பது மாபெரும் குற்றமாகும் .
பொதுமக்கள் இவற்றையெல்லாம் சிந்தித்து , பிஜெ அல்லாஹூவுடைய வேதத்தில் செய்திருக்கும் மோசடியை விளங்கிட வேண்டுகிறோம் . அல்லாஹூ சுபஹானஹூ வதஃஆலா அனைவரையும் நேர்வழி நடத்திட போதுமானவன் .. வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமின் ! இன்ஷா அல்லாஹ் தொடரும் ... _
No comments:
Post a Comment