Saturday, November 23, 2013

              எச்சரிகை விஷக்கிருமிகளின் விபரீதம்  
                பி.ஜெ என்ற வழிகேடன் எழுதிய                             திருக்குர்ஆன் தமிழ் தர்ஜமாவின் தவறுகள் 
              " அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்கதுஹூ' "

அன்பார்ந்த இஸ்லாமிய சமூதாய பெருமக்களே !

 இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக திட்டமிட்டுச் செயல்படும் கூட்டத்தினர் பலர் உலகெங்கும் நிறைந்துள்ளனர்,என்பதை நாம் அறிவோம்.அக்கூட்டத்தினரை அடையாளம் கண்டு கொள்ளலாம் அவ்வாறே ![இந்த நவீன குழப்பவாதி பிஜெ]நாங்களும் முஸ்லிம்கள் தான் என்று சொல்லிகொண்டு இந்த வழிகேடர்கள் இஸ்லாமிய கொள்கையை பற்றியும்.

கண்ணியமான குர் ஆன் ஷரீஃபையும்,கண்ணியமான ஹதிஸ் ஷரீஃபையும்,சரியான விளக்கம் [ ஞானம் ] இல்லாமல் திருகுர்ஆன் ,ஹதிஸ்கள் உடைய கண்ணியங்களை கொஞ்சங் கொஞ்சமாக முஸ்லிம்களிடமிருந்து அகற்றிட முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள்.அந்த வழிகேடர்களின் கொள்கையை பற்றி  தெரியாத நிலையில் அவர்களுடன் சேர்ந்து கொண்டு தங்களுடைய ஈமானையும் அமல்களையும் வீணாக்கிகொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் பி.ஜைனுல் ஆபிதீன் என்ற வழிகேடர் திருகுர்ஆனிற்க்கு தமிழ் மொழியாக்கம் என்ற பெயரில் தனது மனதில் தோன்றிய வற்றை எல்லாம் குர்ஆனின் விளக்கம் என்று [399விளக்கங்கள்] 287 பக்கங்களை விளக்ககுறிப்புகள் என்று 
சொல்லி அதில் குர்ஆனுடைய வசனங்களுக்கு தவறான
அர்த்தங்களை எழுதியிருப்பதுடன் முன்னோர்களான
ஸஹாபாக்கள் 
தாபியீங்கள்
தஃப்வுதாபியீங்கள்
முஃபஸ்ரிங்கள் 
இமாம்முகள்
இறைநேசர்கள்
விரிவுரையாளர்கள் எவருமே எழுதாத சொல்லாத கருத்துகளை எழுதி இதுதான் சரியானது மற்றவர்கள் எழுதிய அனைத்தும் தவறானது என்று குறிப்பிட்டுவுள்ளார்.

முந்தியவர்களின் எந்த நூலையும் ஆதாரம் காட்டாமல்.இதை இப்படிதான் விளங்க வேண்டும்,இதுவே சரியான கருத்தாகும் இவ்வாறுதான் புரிந்து கொள்ளவேண்டும்.

என்றெல்லாம் எழுதி தன்னுடைய சுய அறிவை பயண்படுத்தி விளக்கங்கள் எழுதியிருப்பது  [ தஃப்ஸிர் பிர்ரஃயி ] தன் சுய அறிவின்படி விளக்கம் கூறுதல் எனற குற்றத்திற்க்கு ஆள் ஆகிறார்.தன்னுடைய சுயஅறிவை கொண்டு குர்ஆனுக்கு விளக்கம் சொன்னால் என்ன மிகபெரிய குற்றமா ? என்பதுதானே உங்கள் கேள்வி ? பின் வரும் ஹதிஸை படியுங்கள் அதுமட்டும் இல்லை இந்த வழிகேடர்கள் எங்கே போவார்கள் என்று உங்களுக்கே புரியும் ..

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் கூறினார்கள் [குர்ஆனை பற்றிய] சரியான அறிவின்றி குர்ஆனுக்கு விளக்கம் சொல்கிறவன் தன்னுடைய தங்குமிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும் என்று எச்சரித்து உள்ளார்கள். 
 அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூஅன்ஹு                  நூல்:திரீமிதி 

மற்றோரு ஹதிஸ் : 
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் கூறினார்கள் தன்  சுய அறிவின் படி குர்ஆனுக்கு விளக்கம் கூறுகிறவர் தன் தங்கும்மிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்                                                           அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹு                  நூல்:திரீமிதி  

மற்றோரு ஹதிஸ் ;
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் கூறினார்கள் எவரொருவர் தன் சுய அறிவின்படி குர்ஆனுக்கு விளக்கம் கூறி [ உண்மையில் ] அது சரியாக இருந்தாலும் உறுதியாக அவர் தவறு செய்தவரேயாவார் .
அறிவிப்பவர் :ஜூனைதுப் பின் அப்தில்லாஹ்  ரலியல்லாஹூ அன்ஹு   நூல்:திரீமிதி

மேலே கூறப்பட்டுள்ள ஹதீஸ்களை படித்தால் தெரிகிறது.தன்னுடைய அறிவையோ,விளக்கத்தையோ.குர்ஆனில் பயன்படுத்த கூடாது அப்படி பயன்படுத்தினால் அவர் செல்லும் இடம் நரகம் என்பதையே நமக்கு இந்த நபி மொழிகள் எச்சரிக்கிறது ... 
மேலும் நவீன குழப்பவாதியான பி.ஜெ குர்ஆனும் ஹதீஸூம் அல்லாத வேறு எந்தமனிதர்களின் (ஸஹாபாகள்,தாபியீங்கள்,தஃப்வுதாபியீங்கள்,
இமாம்கள்,முஃபஸ்ரின்கள்இறைநேசர்கள்] போன்றவர்களின்
அபிப்பிராயத்தையும் ஏற்கவேமுடியாது என்று முழங்கிக்கொண்டு.தன்னுடைய அபிப்பிராயத்தையும்,தன்னுடைய 
அறிவையும் மட்டும் இங்கு புகுத்தி 

" இதுதான் சரியான கருத்து "என்று இவ்வாறு எழுதுகிறார் எந்த ஆயத்திலும்,எந்த ஹதீஸிலும் இல்லாத,ஒரு விளக்கத்தை,தன் அறிவை மட்டும் பயன்படுத்திக் கூறியிருப்பது குர்ஆனில் இவர் செய்துள்ள மோசடியாகும்.

 நவீன குழப்பவாதியான பி.ஜெ செய்துள்ள மிக பெரிய தவறு 

குர்ஆனுக்கு மொழிபெயர்ப்போ,விரிவுரையோ நூலாக வெளியிடும் பொது,அதற்க்கு குர்ஆன் என்றோ,குர்ஆன் மஜீத் என்றோ,குர்ஆன் கரீம் என்றோ,பெயர் வைப்பது கூடாது.ஏனெனில் மனிதர்கள் எழுதிய மொழி பெயர்போ,விரிவுரையோ,குர்ஆன் ஆகாது.எனவே இது போன்ற பெயர்கள்தான் வைக்க வேண்டும்.எஆனில் குர்ஆன் 

[ குர்ஆனின் கருத்து ] ஜவாஹிருல் குர்ஆன்
[ குர்ஆனின் மாணிக்கங்கள் ] அன்வாருல் குர்ஆன்
[ குர்ஆனின் ஒளிகள் ] தஃப் ஹீமுல் கர்ஆன் 
குர்ஆனை விளங்கவைதல் ] என்று பெயர் இடவேண்டும் 
குர்ஆன் என்று அசல் பெயர் வைதுயிருப்பதே மாபெரும் குற்றமாகும் 

இந்த நவீன குழப்பவாதியான பி.ஜெ   எழுதிவுள்ள திருகுர்ஆனுடைய வசனங்களுக்கு எழுதியுள்ள அர்த்தங்களை கவனியுங்கள் . 

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளையே தகர்த்தெரியும்.தவறான அர்த்தங்களை எழுதியிருப்பது மட்டுமல்லாமல்.அதுதான் சரியானது மற்ற மொழிபெயர்ப்புகளெல்லாம் தவறானவை என்றும் எழுதியுள்ளார் இது ஒரு சில வசனங்களுக்கு மட்டுமல்ல. குர்ஆன் முழுவதையும் தவறான கருத்துக்கள்  எழுதப்பட்டுள்ளன... 
இன்ஷா அல்லாஹ் விரைவில் 

No comments:

Post a Comment