Monday, October 20, 2014

 கஃபாவின் மீது போர்த்தப்படும் "  கிஸ்வா " வைப் பற்றிய தகவல் !!!

நாம் அறியாத விபரங்கள் இதோ உங்களுக்காக.......
கஃபாவின் மீது போர்த்தப்படும் போர்வைக்கு என்ன பெயர் ?
எப்போது அந்த போர்வை மாற்றப் படும் ?
புது போர்வை போர்த்தப்பட்டால் பழைய போர்வையை என்ன செய்வார்கள் ?
இந்த போர்வை செய்ய எவ்வளவு செலவு ஆகிறது ? 
அந்த போர்வை கருப்பு நிறம் மட்டும் தானா ? 
இது போன்ற தகவல்களும் !!!
கஃபாவின் மீது போர்தப்படும் போர்க்கு பெயர்  :
கஃபாவின் மீது போர்த்தப்படும் கருப்பு நிற போர்வைக்கு " கிஸ்வா " என்று பெயர் சொல்லப்படும்.தங்க ஜரிகைகலால் ஆனது ,கஃபாவிற்க்கு போர்வை மாற்றம் வைபவம் என்றே ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறது 
 எப்போது மாற்றப்படும் !!!
வருடந்தோறும் துல் ஹஜ் பிறை 9 ம் நாள் ஹஜ்ஜோடு சேர்த்து இந்த போர்வையை மாற்றப்படுகிறது ,
  பழைய போர்வை !!!
 பழைய போர்வை சின்னஞ்சிறு துண்டுகளாக வெட்டப் பட்டு வெளி நாட்டு நிறுவனங்களுக்கும், பிரமுகர்களுக்கும் வழங்கப்படுகிறது . ஆனால் கலிஃபா உமர் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] ஆட்சி காலத்தில் அது ஹஜ் பயணிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது.14 -மீ-நீளமும் 101-செ.மீ அகலமும் கொண்ட 47 துண்டுகள் பயன் படுத்தப்படும்.இந்த போர்வையின் நீளம் -658 ச.மீ ஆகும் 670-கிலோ பட்டு நூலும் 15 கிலோ அசல் தங்க ஜரிகை இழைகள் பயன்படுத்தப்படுகிறது .இதற்காக ஆகும் செலவு சவுதி ரியால் -1கோடியே 70-லட்சம் என்று சொல்லப்படுகிறது .அது இந்தியா ரூபாய் சுமார் 20-கோடியை தொடும் 
போர்வை நெய்யப்பட்ட பிறகு திருக் குர்ஆன் வசனங்கள் ஜரிகை இழைகளால் கலை நயமிக்க எழுத்துக்களால் அதில் பின்னப்படுகின்றன .கிஸ்வாவின் நிறம் ஒவ்வொரு ஆட்சியாளர் காலங்களில் ,ஒவ்வொரு நிறத்திலும்  இருந்திருக்கிறது .ஆரம்பகாலங்களில் இந்த போர்வை மாற்றும் வைபவம். முஹர்ரம்-10-ஆம் நாள் நடை பெற்றது ,பிறகுதான் அது துல்ஹஜ் மாதம் மாற்றப்பட்டது 
முஆவியா பின் சுப்யான் (ரலி ) ; முஹர்ரத்தின் போதும் ரமளானின் போதும் இதை மாற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள் .பல கோத்திரத்தார்களும் தங்கள் பங்கிற்கு சிறு சிறுபோர்வைகளை போர்த்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள் .அத்துடன் ஒவ்வொரு கோத்திரத்தாரும் முறை வைத்து போர்வை போர்த்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள் 
   ஒரு முறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்களின் பாட்டி தனது பரிசாகவும் ,பங்களிப் பாகவும் வெள்ளை நிற கிஸ்வாவை கொடுத்தார்கள் .நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்களும் எமன் நாட்டின் துணியில் செய்யப்பட்ட வெள்ளை நிற கிஸ்வாவை ஒரு முறை போர்த்தியிருக்கிறார்கள் .ஹாரூன் அல் ரஷூத் ( ரலி )அவர்களும் இதையே பின் பற்றியிருக்கிறார்கள் .ஆனால் உமர்(ரலி) அவர்களும் ,உஸ்மான் (ரலி ) அவர்களும் குத்பி எனப்படும் எகிப்திய வெள்ளைப் போர்வைகளை பயன் படுத்தியிருக்கிறார்கள் மக்கா அரசியலில் யார் செல்வாக்கோடு இருக்கிறார்கள் என்பதை பொறுத்து கிஸ்வாக்கள் துணி எகிப்து ,ஈராக்,அல்லது எமன் என்று ஏதாவது ஒரு நாட்டிலிருந்து வந்து கொண்டிருந்தது . துருக்கிய சாம் ரகசியத்தை விட்டு பிரிந்த எகிப்தின் ஆளுனர் ,முஹம்மது அலி பாஷா தான் .கிஸ்வா தயாரிக்கும் பொறுப்பை எகிப்து அரசு ஏற்கும் என்று அறிவித்தார் .அதன் படபடி ஆண்டு தோறும் ஒரு ஒட்டக அணி இதனை மக்காவிற்கு சுமந்து சென்றது .கிபி 1160-க்கும ,1207-க்கும் இடையில் ஆட்சி புரிந்த நஸிர் அப்பாஸி என்பவர் பச்சை நிற கிஸ்வாவை பயன்படுத்தினார் .பிறகு அது கருப்பாக மாற்றப்பட்டது .இன்று வரை அந்த வண்ணமே நடித்து நிலைத்து நிற்கிறது .1926-ம் ஆண்டு வரை மன்னர் இப்னு சவுர் பக்தாதில் இருந்து கிஸ்வாவை வரவழைத்து பயன் படுத்தினார் 1926-ல் தான் மன்னர் அப்துல் அஜீஸ் மக்காவிலேயே கிஸ்வாவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை தொடங்கினார் 

கிஸ்வாவை பற்றிய தகவல் ;  ஆரம்பத்தில் இதை தயாரிக்கும் தொழில் வல்லுனர்கள் இந்தயா விலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தனர் .மரத்தினாலான தறியில் இதனை நெய்வதற்கு 100 பேர் தேவைப்பட்டனர் கால அளவும் ஏறக்குறைய ஒரு வருடம் பிடித்தது நெயவதை விட அழகிய கலை நயமிக்க ஜரிகை வேலைப்பாடுகளுக்குத்தான் அதிக காலங்கள் தேவைப்பட்டது .இதற்கான நவீன இயந்திரங்களை கண்டுபிடிக்கும் பணி தோல்வி அடையவே வேறு வழியில்லாமல் 1937- ல் இந்த தொழிற்சாலை மூடப்பட்டது .நீண்ட 25-வருட இடைவெளிக்கு பிறகு 1962-ல் அது மீண்டும் திறக்கப்பட்டது .ஜெர்மனினிலிருந்தும் இத்தாலியிலிருந்தும் மிக உயரஉயரந்த வகை பட்டு நூல்கள் இறக்குமதி செய்யப்பட்டு சிறந்த ஆலிவ் எண்ணைகளாலும் அழுக்கு நீக்கிகளை கொண்டும் அதிலுள்ள மெழுகுப்பசை நீக்கப்படுகிறது 90 டிகிரி உஷ்ண வெயிலில் இது பல முறை கழுகப்பட்ட பிறகே அதன் இயற்கையான கருமை நிறம் கிடைக்கிறது சாயம் பயன் படுத்துவதைவிட இது நல்ல பலன் தருகிறது .முன்பு இது கைகளால் செய்யப்பட்டு வந்தது இப்போது இதற்கென இயந்திரங்கள் வந்து விட்டதன இன்னபிற நெய்தல் பணியும் தொடங்குகிறது ஆரம்பத்தில் கஃபாவை சுற்றி 8 பட்டைகள் இருந்தன பிறகு அது இரட்டிப்பாகப்பட்டது 1971-ல் யா ஹய்யூ யா கைய்யூம் என்பன சேர்த்து கொள்ளப்பட்டது .கிஸ்வாவின் உட்புற வெளிப்புற வேலைகள் ஓரிடத்தில் நடை பெறுகின்றன திருக்குர்ஆன் வசனங்களை பொறிக்கும் ஜரிகை வேலைப்பாடுகள் கணினியில் செய்யப்படுகிறது மனிதர்கள் கை கொண்டு செய்ய எடுத்து கொண்ட நேரத்தை விட குறைவான நேரத்தையே கணினி எடுத்துக்கொள்வதா சொல்லப்படுகிறது ஆகவே வேலை வேகமாக முடிகிறது எம்பிராய்டரி வேலைப்பாடுகள் தங்க ,வெள்ளி ஜரிகை இழைகளால் செய்யப்படுகிறது இவை கஃபாவின் வாசலை நிறுவய அதே நபரால் சவுதியிலேயே செய்யப்படுகிறது .கிஸ்வா முழுமை அடையும் முன்பு அதில் இணையும் எல்லா அம்சங்களும் கடுமையான தரக்கட்டுப்பாட்டுக்கு உள்ளாகின்றன கை தேர்ந்த கைவினை கலைஞர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் தங்களது முழுத் திறமையை வெளிப்ப்டுத்த வாய்ப்பு கிடைக்கிறது .எம்பிராயிடரி வேலைகள் பல கட்டங்களாக நடை பெருகின்றன கருப்பு துணி மீது பருத்தி துணி வைத்துத் தைக்கப்படுகிறது பிறகு அதன் மீது குர்ஆன் வசனங்கள் பதிக்கப் படுகிறது அதன் மீது ஜரிகை வேலைப் பாடுகள் ஆரம்பமாகின்றன கைவினைப் பொருட்களிலேயே மிக மிக விலை உயர்ந்ததும் மிக அற்புதமானதும் கலைத் திறன் கொண்டதுமாக கிஸ்வா கருதப்படுகிறது மக்காவின் புற நகர்ப் பகுதியான உம்முல் ஜவ்தில் இந்தத் தொழிற்ச்சாலை இருக்கிறது.
 
245 நெசவாளர்களும் , கைவினைக் கலைஞர்களும் இங்கு பணியாற்று கின்றனர் . ஹஜ்ஜூக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே இந்த கிஸ்வா தயாராகி விட வேண்டும் என்பத்ற்க்காக இந்த உழியர்கள் அல்லும் பகலும் பணியாற்று கின்றானர்.இதை ஒரு வேலையாக கருதாமல் ஒரு புணிதப் ப்ணியாக அதை கருதி பயபத்தியுடன் தங்களது கடமைகளைச் செய்கிறார்கள் இனி ஒருமுறை கிஸ்வா என்று வரும்போது அதை வெறும் போர்வௌயாக எண்ணாமல் பல்வேறு மனிதர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட இறை அர்ப்பண்ம் எண்றே கருத வேண்டும்  

No comments:

Post a Comment