Thursday, September 25, 2014

குர்பானி பிராணிகளை அறுக்கும் & குர்பானி கொடுக்கும் போது ஓதும் துஆ செயல் முறை விளக்கம் !!!

நபிகள் நாயகம் [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் அறுத்த முறை :
நபிகள் நாயகம் [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் குர்பானி கொடுக்கும் போது தமது பாதத்தை அவற்றின் [ ஆட்டின் ] பக்கவாட்டின் மீது காலை வைத்து [ பிஸ்மில்லாஹி அல்லாஹூ அக்பர் ] என்று தமது கையால் அறுத்ததை நான் பார்த்தேன் என்று அனஸ் [ ரலியல்லாஹூ அன்ஹூ ]அவர்கள் கூறினார்கள் [ நூல் = புகாரி = 5558 ] 
கத்தி கூர்மை !!!
 நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள் ! உங்கள் கத்தியை கூர்மையாக்கிக்  கொள்ளுங்கள் ! [ விரைவாக ] அறுப்பதன் மூலம் அதற்க்கு நிம்மதியைக் கொடுங்கள் என்று நபிகள் நாயகம் [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் கூறினார்கள் [ நூல் =முஸ்லிம் ]
குர்பானி அறுக்கும் முறைகள்....!
<> குர்பானி கொடுப்பவர் தனது கையால் அறுத்துக் கொடுக்க வேண்டும் .
<>  கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ளவேண்டும் .
<> அறுக்க தெரியாதவர்கள் அறுப்பவரின் கையை லேசாக பிடித்துக் கொண்டு தக்பீர் சொல்ல வேண்டும் .
<>  கூட்டு குர்பானி கொடுப்பவர்கள் ஒருவர் அறுக்க மற்றவர்கள் தக்பீர் சொல்லிக் கொண்டால் போதுமானது ,
<>   குர்பானி கொடுக்கும் இடத்தில் குடும்பம் நின்று கொண்டு தக்பீர் சொல்ல வேண்டும் .
<>  குர்பானி பிராணியின் முகம் கிபுலாவின் பக்கம் திருப்பி வைக்க வேண்டும் .
<>   தேவையான அளவிற்க்கு கால்களை பிடிக்க வேண்டும் .
<>  கத்தியை கழுத்தில் அழுத்தி ஒரே அறுப்பில் நாங்கு நரம்புகள் அறுபட அறுத்து முடிக்க வேண்டும்.
<>  அறுத்த பிறகு இரத்தம் முழுமையாக வெளியான பிறகு சுத்தம் செய்ய வேண்டும் .
குறிப்பு : அதன் துடிப்பு வலியால் அல்ல ! இரத்தம் வெளியாவதினால் ! ஏற்படக்கூடிய துடிப்பு மட்டுமே ! என்பது ஆராச்சி உண்மை ! 
அறுக்கக் கூடாத முறைகள் !!!
<>  கூர்மையில்லாத கத்தியால் அறுத்து அதை துன்புறுத்தக் கூடாது .
<>  கயிற்றால் கட்டி அறுக்கக் கூடாது !
<>  கழுத்தை துண்டாக அறுக்கக் கூடாது ! 
<>  பழக்கமில்லாதவர்கள் அறுக்க கூடாது ! 
குர்பானி துஆ :::
நபிகள் நாயகம் [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் குர்பானி கொடுக்கும் முன்பும் அறுக்கும் போதும் அறுத்தப் பிறகும் துஆவும் தக்பீரும் கூறியுள்ளார்கள் 
குர்பானி பிராணியை அறுக்கும் முன் ஓதும் துஆ ;;
اني وجهت وجهي للذي فطر السموت والارض حنيفا وما انا من المشركين ان صلاتي و نسكي و محياي و مماتي لله رب العالمين لا شريك له و بذلك امرد وانا اول المسلمين 
அரபி தமிழில் :
 இன்னீ வஜ்ஜஹ்த்து வஜ்ஹிய  லில்லதீ ஃபதரஸ்ஸமாவத்தி  வல்அர்ழி ஹனீஃபவ்  வமா அன மீனல் முஸ்ரிகீன் ,இன்ன ஸலாத்தீ , வ  நுஸ்கீ , வ மஹ்யாய வ மமாத்தி லில்லாஹி ரப்பில் ஆலமீன் ,லா ஷரீகலஹூ ,வ பி தாலிக்க உமிர்த்து வன அவ்வலுல் முஸ்லிமீன் 
பொருள் ;  வானங்களையும் பூமிகளையும் எவன் படைத்தானோ அந்த ஒருவனின் பக்கமே நிச்சயமாக நான் முற்றிலும் நோக்கிறேன்,  நான் இணைவைப்பவன் அல்ல . நிச்சயமாக என் வாழ்க்கையும் , என் மரணமும் , உலகத்தாரைப் பக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரியது 
[ அல்குர்ஆன் = 7=79 ] [ அறிவிப்பாளர் = அபூ அய்யாஸ் ,முஹம்மது இப்னு இஸ்ஹாக்  [ ரலியல்லாஹூ அன்ஹூமா ] நூல் = அபூதாவூது , பைஹகி, இப்னு மாஜா ] 
குர்பானி பிராணியை அறுக்கும் போது ஓதும் துஆ [] [] [] 
اللهم هذا و منك بسم الله الله اكب
அரபி தமிழில் ::
அல்லாஹூம்ம ஹாதா லக , வ மின்க பிஸ்மில்லாஹி அல்லாஹூ அக்பர் 
பொருள் ;;
உன் புறத்திலிருந்து , உன் பெயர் கூறி அறுக்கிறேன் ,நீ மிகப் பெரியவன் 
[ அறிவிப்பாளர் = அனஸ் இப்னு மாலிக் [ரலியல்லாஹூ அன்ஹூ ] நூல் = அபூதாவூத் ] 
குர்பானி கொடுத்த பிறகு ஓதும் துஆ ;;
اللهم تقبل مني كما تقبلت من خليلك سيدنا ابراهيم عليه السلم و من حبيبك سيدنا محمد صلي الله عليه و سلم
அரபி தமிழில் {}{}{}அல்லாஹூம்ம   தகப்பல் மின்னீ கமா தகப்பல்த மின் கலீலிக ஸய்யிதினா இப்ராஹிம் அலைஹி வ ஸல்லம். வ மின் ஹபீபிக ஸய்யிதினா முஹம்மதின் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் .
 பொருள் :
யா அல்லாஹ் ! உன்னுடைய தோழர் இப்ராஹிம் [ அலைஹி வ ஸல்லம் ]அவர்களிடமிருந்தும், உன் நேசர் முஹம்மது[ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ] அவர்களிடமிருந்து நீ அங்கீகரித்துக் கொண்டது போல் என்னிடமிருந்தும் இந்தக் குர்பானியை நீ அங்கீகரிப்பாயாக!! என்று பிராத்தனை செய்ய வேண்டும் .
இதற்க்கான நற் கூலியை நமக்கு வழங்கிடுவானாக ! ஆமீன் ஆமீன் ஆமீன் 

No comments:

Post a Comment