Friday, March 7, 2014

                 நாம் ஏன் இப்படி பொருள் செய்ய வேண்டும் !!!


 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்கத்துஹூ 
இது அழகா !!!   நீங்களே சற்று இதை சிந்தித்து பாருங்கள் . நாம் செய்யும் அர்த்தம் எவ்வளவு பெரிய தவறானதகவும் , இன்னும் குஃப்ரின் பக்கம் சேர்க்க கூடியதாக இருக்கிறது என்பதை பாருங்கள் 
.பொதுவாக குர்ஆனுக்கு மொழி பெயர்ப்பு செய்பவர்கள் குறிப்பாக தமிழில் மொழிப் பெயர்ப்பு இது போன்ற தவறுகளை சர்வ சாதாரணமாக செய்து விடுகிறார்கள் .முதலில் குர்ஆனுக்கோ , ஹதீஸூக்கோ ,மொழிப் பெயர்ப்பு செய்வதாக இருந்தால் ,நம்முடைய இஷ்தத்திற்க்கு மொழிப் பெயர்ப்பு செய்யக் கூடாது நாம் யாரை பற்றி சொல்லப் போகிறோமோ அவர்களுடைய அந்தஸ்தையும் , இறையச்சத்தையும் கவனித்து அவர்களுடைய தகுதிக்கு தகுந்தாற் போல் நாம் மொழி பெயர்ப்புச் செய்ய வேண்டும் .
 يايها المزمل O قم الليل الا قليلا O
 O போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே !
 O இரவில் ( தொழ ) எழுந்து நிற்பீராக ! சிறிது நேரம் தவிர !
இதில் என்ன தவறு இருக்கிறது என்பது தான் உங்களுடைய மனதில் ஒடக்கூடிய சந்தேகம் ( எண்ணம் ) இவர்கள் சரியாகதானே சொல்கிறார்கள் ! என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் அது உண்மை அல்ல ! நீங்களே பாருங்கள் :  يايها المزمل = போர்வை போர்த்திக் கொண்டுருப்பவரே ! இந்த குர்ஆன் வசனத்திற்க்கு ஏன் ? நாம் இப்படி பொருள் செய்யவேண்டும் . ஏதோ நம்மைப் போல்  ஒரு சாதாரண மனிதனுடைய செயலைப் போல் ஏன் சொல்ல வேண்டும் . முதலில் நாம் ஒரு விசையத்தை விளங்க வேண்டும் .அல்லாஹூ தாஆலா நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எந்த அளவுக்கு கண்ணியத்தை தந்துருக்கிறான் . நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்து இறைவன் எப்படி கண்ணியமாகச் சொல்கிறான் என்பதை பாருங்கள்
 .قد جاءكم من الله نورا (٥:١٥)
திட்டமாக அல்லாஹூவினிடமிருந்து உங்களுக்கு ஒர் ஒளியும் வந்திருக்கிறது .( 5 =15 )
இன்ஷா அல்லாஹ் தொடரும்



No comments:

Post a Comment