Thursday, April 2, 2015

தப்லீக் ஜமாஅத் பற்றி சமஸ்த கேரள ஜம் இய்யத்துல் உலமாவின் தீர்ப்பு.
'தப்லீக் ஜமாஅத்' என்றும் புது இயக்கத்தைப் பற்றி பலர்களிடமிருந்து கேள்விகள் வந்தபடியால் அதைப் பற்றி தீர்மானம் எடுப்பதற்காக அவர்களுடைய நூல்களும் மற்றும் சரியாக யோசனை செய்து ஓர் ரிப்போர்ட் தயார் செய்வதற்காக ஒரு சப் கமிட்டி நியமனம் செய்திருந்தது.
அந்த சப் கமிட்டி, 1)பதாவா ரஷீதிய்யா 2)அல் முஹன்னது அலல் முபன்னது 3)மல்பூளாத் 4) பளாயிலுத் தப்லீக் 5) மக்தூபாத் 6) பஹஸ் கிஸைபர் 7) தீனி தஃவது 8) பறாஹீனே காத்திஆ 9) ஈளஹின் அதில்ல 10) சபீலுற் றஸாது என்ற அவர்களுடைய நூல்கள் சரியாக பரிசோதனை செய்ததில் சுன்னத் ஜமாஅத்தின் அடிப்படைக்குத் தகாது பல விஷயங்களும் உள்ளதாக ரிப்போர்ட் சமர்ப்பித்தார்கள்.
அந்த ரிப்பேர்ட்டின் அடிப்படையில் சமஸ்த கேரள ஜம் இய்யத்துல் உலமாவின் முஷாவிறா பரீசிலனை செய்ததில் தப்லீக் ஜமாஅத்து சுன்னத்து ஜமாஅத்துக்கு எதிரான கொள்கைகள் கொண்டது என்று முடிவு- பத்வா செய்து இருக்கிறார்கள். விளக்கமாக விபரம் பிற்பாடு வெளியிடுகிறதை எதிர்பாருங்கள்.
இப்படிக்கு,
                                              
செயலாளர் ஈ.கெ. அபுபக்கற் முஸலியார்,
7-11-1965    
                                                   சமஸ்த கேரள ஜம் இய்யத்துல் உலமா,
ஸமஸ்த காரியாலயம், கள்ளிக் கோட்டை
.

குறிப்பு: இந்த விபரம் 10-11-65 சந்திரிகா பேப்பரில் வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment