Tuesday, January 5, 2016

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்கதுஹூ

ஈமானை பாதுகாக்க வழி!!

ஒரு அரசன் விலை உயர்ந்த வைரத்தை பாதுகாக்க ஒரு தங்கப்பெட்டி செய்தான்.தங்கப்பெட்டியை பாதுகாக்க செம்புப்பெட்டி செய்தான்.செம்புப்பெட்டியை பாதுகாக்க இரும்புப்பெட்டி செய்தான் பின் இரும்புப்பெட்டியை பாதுகாக்க மண்ணாலான குடுவை செய்தான்.
இப்போது திருடன் வந்து மண் பானையை திருடிச்சென்று உடைத்தால் இரும்புப்பெட்டி கிடைக்கும் அதை உடைத்தால் செம்பு அதை உடைத்தால் தங்கம் அதை உடைத்தால் வைரம் கிடைக்கும்.
அதுபோலவே,அந்த வைரம் தான் ஈமான்.அந்த தங்கப்பெட்டி பர்ளான வணக்கம்.செம்புப்பெட்டு தான் சுன்னத்.இரும்புப்பெட்டி வாஜிபு.மண்பானை தான் நபிலான வணக்கம்.
அந்த திருடன் தான் ஷைத்தான்.முதலில் மண்பானை பிறகு இரும்பு பிறகு செம்பு பிறகு தங்கப்பெட்டிகளை உடைப்பான் நம் மனதிலிருந்து.பின் தான் வைரத்தில் கை வைக்க முடியும்.அதற்கு வழி வகுக்காமல் நம் அமல்களை பேணிப்பாதுகாத்தால் மண்பானையை கூட உடைக்க விடாமல் பாதுகாக்கலாம்.
இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி
             அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்கதுஹூ


நமது முன்னோடிகள் யார்?
நல்லோர்களான இமாம்களா?
நவீன ஏகத்துவ ஏஜெண்ட்களா?

இமாம்களின் வழி நடப்போம்!
இறைவனின் பொருத்தத்தை அடைவோம்!

இஸ்லாம் மட்டுமே நேர்வழி என்ற நிலைமாறி,
இஸ்லாமில் எது நேர்வழி என்ற குழப்பமான கால சூழ்னிலையில் நாம் வாழ்கிறோம்.

குர்ஆன், ஹதீஸிலிருந்து மார்க்கச் சட்டங்களை வாழ்வில் நடைமுறைப்படுத்த நாம் யாருடைய விளக்கங்களைப் பின்பற்றுவது.
இன்றைய நவீன அறிஞர்களையா?
அல்லது அல்லாஹ்வுக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணம் செய்த இமாம்கள் மற்றும் ஹதீஸ் கலை வல்லுநர்களையா?
இதோ உங்கள் சிந்தனைக்கு........


நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்திற்கு ஏறத்தாள 90 ஆண்டுகளுக்கு பிறகு மத்ஹப்கள் தோன்றியது.
மத்ஹப்கள் உருவாகியதன் முக்கிய நோக்கம் குழப்பம் இல்லாமல் சிறந்த வழியில் மக்கள் அமல்களை செய்யவும், மார்க்கச் சடங்களை  நிறைவேற்றவும் வேண்டும் என்பதேயாகும்.
மத்ஹபில் 4 வழிமுறைகள் உள்ளது. அந்த நான்கு வழிமுறைகளும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காட்டிதந்ததே..
அதில் பிரிவுகள் இல்லை. மனநோய் உள்ளவர்களுக்கு மட்டுமே மத்ஹப்கள் பிரிவாகத் தெரியும்.

1. ஹனபி மத்ஹப் =
அபு ஹனிபா நுஃமான் இப்னு ஸாபித் (ரஹ்).
வாழ்ந்த காலம்:  ஹிஜ்ரி  80  - 150.

2. மாலிகி மத்ஹப் =
மாலிக் இப்ன் அத்ப்த்ிய்ரஹ்).
வாழ்ந்த காலம்:  ஹிஜ்ரி 93 - 179.

3. ஷாபி மத்ஹப் =
அபு அப்தில்லாஹ் முஹம்மது இப்ன் இத்ரிஸ் அஷ்-ஷாபி .
வாழ்ந்த காலம்:  ஹிஜ்ரி 150 - 204.

4. ஹன்பலி மத்ஹப் =
அஹ்மத் இப்னு முஹம்மது இப்னு ஹன்பல் (ரஹ்).
வாழ்ந்த காலம்:  164 - 241.

மார்க்கச் சட்டங்களைத் தொகுத்த மத்ஹப் இமாம்களின்  காலங்களும் கிட்டத்தட்ட ஒரே காலம்தான் .
மத்ஹப்பில் பிரிவினை இருந்தது என்று வைத்துக்கொண்டால்  நான்கு இமாம்களிடமும் "நீ பெரியவனா? அல்லது நான் பெரியவனா?" என்ற தர்க்கம் ஏற்ப்பட்டு அன்றைக்கே நான்கு நாற்பதாக மாறியிருக்கும்!

ஆனால் மத்ஹப் தோன்றி 1300 வருடங்கள் ஆகியும் அதே 4 வழிகள்தான் இன்று வரைக்கும் இருக்கிறது.
புதிதாக ஒன்று கூட தோன்றவில்லை.  மத்ஹப்பில் பிரிவினை இல்லை என்பதற்கு இதுவே தக்க சான்று.
நான்கு இமாம்களையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. ஆமீன்.

(ஆனால் இன்றோ மத்ஹப்பில் பிரிவினை என்று வந்த ஒரு கூட்டத்தை அல்லாஹ் வேர் வேறாக பிரித்து அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் சூழலை உருவாக்கி மக்களுக்கு அந்த கூட்டத்தை பிரித்து காட்டியுள்ளான்.
வெறும் முப்பது வருடங்களுக்குள்.)

ஹதீஸும், ஹதீஸ் கலை வல்லுநர்களும்!
ஆதாரப்பூர்வமான ஆறு மிகப்பெரிய ஹதீஸ்  நூல்களைத் தொகுத்த ஆறு இமாம்களும் மத்ஹப்பை பின்பற்றியவர்களே!!
அந்த ஆறு இமாம்களும் ஹதீதுகளை தொகுப்பதற்கு முன் தங்களுக்கென ஓர் வரைவிலக்கணம் வகுத்து அதன் படியே தங்கள் நூல்களில் ஹதீஸ்களைப் பதிய தொடங்கினார்கள்!

1. ஸஹீஹ் அல் புகாரி =
அபு அப்துல்லாஹ் முஹம்மது பின் இஸ்மாயில் அல் புகாரி .
வாழ்ந்த காலம்:  194 - 256.
பின்பற்றிய மத்ஹப் =  ஷாஃபி.
தொகுத்த ஹதீத்கள் =  7275.

2.  ஸஹீஹ் முஸ்லிம் =
அபு அல் ஹசன் அஸ்கர் அத்தீன் முஸ்லிம் அன் நய்சாபூரி.
வாழ்ந்த காலம்:  204-261
பின்பற்றிய மத்ஹப் =  ஷாஃபி.
தொகுத்த ஹதீத்கள் =  2200.

3. அபு தாவூத் =
அபு தாவூத் சுலைமான் இப்னு அல் அசாத் (ரஹ்).
வாழ்ந்த காலம்:  202 - 275.
பின்பற்றிய மத்ஹப் =  ஹன்பலி
தொகுத்த ஹதீத்கள் = 4800.

4.  திர்மிதீ=
அபு ஈஸா இப்னு ஈஸா திர்மிதீ (ரஹ்).
வாழ்ந்த காலம்:  209-279.
பின்பற்றிய மத்ஹப் = ஷாஃபி
தொகுத்த ஹதீத்கள் = 3956.

5.  நஸாயீ =
அஹ்மத் இப்னு சுஹைப் இப்னுஅலி அந்-நஸாயீ (ரஹ்).
வாழ்ந்த காலம்:  215 - 300.
பின்பற்றிய மத்ஹப் = ஹன்பலி.
தொகுத்த ஹதீத்கள் = 5270

6. இப்னு மாஜா = அபு அப்தில்லாஹ் முஹம்மது இப்னு யாஜித் இப்னு மாஜா (ரஹ்).
வாழ்ந்த காலம்:  209 - 273.
பின்பற்றிய மத்ஹப் =  ஷாஃபி.
தொகுத்த ஹதீத்கள் = 4000.

மத்ஹப்கள் அனைத்தும் குப்பை, இமாம்களைப் பின்பற்றக்கூடாது, இமாம்களின் கருத்துகளை ஏற்கக்கூடாது ,
குர்ஆன் மற்றும் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று கூறும் கூட்டத்தார்க்கு பகிரங்க அறைகூவல்.!

ஹதீஸ்களை தொகுப்பதற்கு முன் அனைத்து இமாம்களும் அவர்களுக்கு என்று ஓர் வரைவிலக்கணத்தை (இமாம்களின் சொந்த கூற்று) வடிவமைத்துக்கொண்டு அதன் படியே ஹதீஸ்களைத் தொகுத்தார்கள்.
ஆகையால் இமாம்களின் கூற்றினை ஏற்கக்கூடாது என சொல்பவர்கள் முதலில் அவர்கள் வகுத்த வரைவிலக்கணத்தை தூக்கியெறிய வேண்டும்!
பின்பு மத்ஹப்வாதிகள் வழிகேடர்கள், காஃபிர்கள்.
அவர்களின் தொகுப்பினை ஏற்கக்கூடாது எனில்,
ஹதீஸ்களைத் தொகுத்த அனைத்து இமாம்களும் நான்கு மத்ஹப்களில் ஒன்றைப் பின்பற்றியே வாழ்ந்துள்ளார்கள்.
ஆகையால் அவர்கள் தொகுத்த  அனைத்து ஹதீத்களையும் கட்டுக்கதைகள் என புறம் தள்ள  வேண்டும்!!
செய்வார்களா ???
எதற்கெடுத்தாலும் புகாரியில் இருக்கிறதா?
முஸ்லிமில் இருக்கிறதா?
(ஸிஹாஹ் சித்தா) ஆதாரபூர்வமான ஆறு ஹதீஸ் கிதாபுகளில் இருக்கிறதா? என்று கேள்வி கேட்கும் நவீன ஏகத்துவவாதிகளே!
மத்ஹப்களை வழிகேடுகள் என்றும் குப்பைகள் என்றும் நாவு கூசாமல் அநாகரீகமாக விமர்சிக்கும்
ஏகத்துவத்தின் ஏகபோக உரிமையாளர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் கணவான்களே!
இமாம் புஹாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸாயீ போன்ற இந்த சமுதாயத்திற்கு ஹதீஸைத் தொகுத்தளித்த அத்தனை மிகப் பெரிய இமாம்களும் தங்கள் வாழ்நாள் முழுவதும் மத்ஹப் இமாம்கள் வகுத்துத் தந்த மார்க்கச் சட்டங்களின் அடிப்படையிலேயே வாழ்ந்து மறைந்தவர்கள்.
மத்ஹபை பின்பற்றுவோரை வழிகேடர்கள், காஃபிர்கள் என்று முத்திரை குத்தும் நீங்கள்
தங்கள் வாழ்வையே அர்ப்பணித்து,
இந்த சமுதாயத்திற்கு ஹதீஸ்களை வழங்கிய மத்ஹப்களை பின்பற்றி வாழ்ந்த மரியாதைக்குரிய ஹதீஸ்களை வல்லுநர்களையும் நிராகரிப்பில் தள்ளுகிறீர்களா?
சகோதரர்களே!
நல்லடியார்களாக வாழ்ந்து மறைந்த நம் இமாம்களின் விளக்கங்களை ஏற்று அவ்வழியில் ஒற்றுமையான சமூகமாக, பலம் மிக்க உம்மத்தாக பயணிப்போமா?
அல்லது பிரிவினையை வளர்க்கும் நவீன ஏகத்துவ ஏஜண்ட்களைப் பின்பற்றி சிதறுண்டு கிடப்போமா?
சிந்தியுங்கள்!
செயல்படுங்கள்!



அல்லாஹ்  நம் அனைவருக்கும் அருள் புறிவானாக....ஆமீன்

Sunday, January 3, 2016

                                              அமைதி பெறும் ஷிஃபா மன்ஜீல் :-

              அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகத்துஹூ :-




வாழ்வின் சஞ்சலங்கள் நீங்க வேண்டும் . அவையாவும் உள்ளத்திற்கு
அமைதி ஏற்பட வேண்டும் . உடலில் ஏற்படும் வியாதிகள் நீங்கி சுகம் பெற வேண்டும் . வாழ்வில் ஏற்படும் சோக நிகழ்வுகளை சொல்லி மனச் சுமையை நீக்கீக் கொள்ள வேண்டும் . வியாபாரம் பெருகவும் , மற்றும் எல்லா தீவினைகளும் நீங்கிடவும்......
நம் வாழ்கையில் ஏற்பட்ட எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி , குடும்பம் , தொழில், உடல் நிலை ,ஆன்மீகம் இப்படி எல்லா பிரச்சனைகளுக்கு தீர்வு கான இப்போதே தொடர்புகளுங்கள் ....
தொலை பேசி எண் :-
ஷிஃபா மன்ஜீல்

செல் நம்பர் :-9597860405,  9751537860 

போன் நம்பர் :-04546 : 232545


அல்லாஹ்வின் அருளாளும்
நபிகள் கோமான் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பரக்கத்தாலும்
உலகில் உள்ள இறைநேசர்களின் மற்றும் நமது ஷேகு மார்கள் பொருட்டாலும் ...
உங்களின் இரு உலக வாழ்விற்க்கும் மகத்த வெற்றி பெற இறைவன் அருள் புரிவானாக .....ஆமீன்
யாரப்பல் ஆலமீன் ......




Thursday, September 24, 2015

🌾"ஒருவரை பற்றி தப்பகா கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு நல்லதாக கணிக்கவும்"🌾

💁💁💁
ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்.. அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்.

👰👰👰
தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி, பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்..
பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..
தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது.

⚡தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்.
உடனே அந்த சிறுமி, தாயிடம் சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு
நீ எடுத்துக்க என்றாள்....

 ⚡நீஙகள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..
அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.
அடுத்தவருக்கு போதுமான அளவு இடைவெளி கொடுத்து அவரை அறியவும். நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.
எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல் ,அவசரப்படாமல்
ஆழயோசித்து கணியுங்கள்..
மனக்கணக்கு தவறலாம்..
மனிதரை பற்றிய கணக்கு தவறக்கூடாது...
🌾"நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் அழகிய உருவ அமைப்புக்கள் 🌾

1⃣ அனஸ்(ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் நெட்டையாகவோ, குட்டையாகவோ இல்லாமல் நடுத்தர உயரமானவர்களாகவும் அழகிய உடலமைப்புடையவர்களாகவும் இருந்தனர்.
அவர்களின் முடி முற்றிலும் சுருண்டவையாகவோ, முற்றிலும் நீண்டவையாகவோ இருக்கவில்லை.
அவர்கள் கோதுமை நிறமுடையவர்களாக இருந்தனர்.
நடக்கும் போது (முன்புறம்) சாய்ந்து நடப்பார்கள்.
(நூல் - ஸூனன் திர்மிதி)

2⃣ பரா இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது : சிவப்புநிற ஆடையணிந்து, தோள் புஜத்தைத் தொடும் தலைமுடியுடன் அழகுற நபி (ஸல்) அவர்கள் விளங்கியது போல் வேறெவரையும் நான் கண்டதில்லை.
அவர்களின் தலைமுடி தோள்புஜத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும்.
இரண்டு தோள் புஜங்களுக்கு இடைப்பட்ட தொலைவு அதிகமாக இருக்கும். (மார்பு அகன்றிருக்கும்).
அவர்கள் குட்டையாகவோ நெட்டையாகவோ இருக்கவில்லை.
(நூல் - ஸூனன் திர்மிதி, புகாரி, முஸ்லீம், நஸயீ,)

3⃣ அலி (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் நெட்டையாகவோ, குட்டையாகவோ இருக்கவில்லை. இரு உள்ளங்கைகளும், இரு பாதங்களும் சதைபிடிப்புள்ளதாக (உறுதி வாய்ந்ததாக) இருக்கும்.
தலையும், மூட்டுகளும் பெரிதாக இருக்கும். நெஞ்சிலிருந்து தொப்புள் வரை (கோடுகள்) போன்று முடிகளிலிருக்கும். மேடான இடத்திலிருந்து பள்ளமான இடத்திற்கு இறங்கும் போது அடிஎடுத்து வைப்பது போல் அடிஎடுத்து நடப்பார்கள்
(கால்களை தேய்த்துக் கொண்டு நடக்க மாட்டார்கள்)
இவர்களைப் போன்றவரை இதற்கு முன்பும் இதற்கு பின்பும் நான் கண்டதில்லை.
(நூல் - ஸூனன் திர்மிதி)

4⃣ ஹஸன் இப்னு அலி (ரலி) அவர்கள் கூறியதாவது : நான் என் மாமா ஹின்த் இப்னு அபீஹாலா அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் அங்க அடையாளங்களைப் பற்றி வினவினேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பற்றி வர்ணிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.
எனவே அவர்களைப் பற்றி (அறிந்து) மனனம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன்.
அவர்கள் கூறினார்கள்:

♦ நபி (ஸல்) அவர்கள் கண்ணியம் வாய்ந்தவர்களாகவும், பிறரால் மதிக்கப்படுபவர்களாகவும் இருந்தனர்.

♦ நபி (ஸல்) அவர்களின் முகம் பௌர்ணமி இரவின் சந்திரன் போல் பிரகாசிக்கும். நடுத்தரமான உயரமுடையவர்களை விட சற்று கூடுதலாகவும், நெட்டையான மனிதர்களை விட சற்று குறைவானவர்களாகவும் இருந்தனர்.

♦ தலை நடுத்தரத்தை விட சற்று பெரிதாக இருந்தது. அவர்களின் முடி சுருண்டிருந்தது. தலையில் தற்செயலாக வகிடுப
டிந்துவிடுமாயின் அதை அப்படியே விட்டுவிடுவார்கள்.
இல்லையெனில் (வகிடு எடுப்பதை) பிராதனப்படுத்துவதில்லை. முடியை வளரவிட்டுருந்தால் அது காதின் சோனையைத் தாண்டிவிடுவதும் உண்டு.

♦ மேனி ஒளிவீசிக் கொண்டிருக்கும். படர்ந்த நெற்றி, அடர்ந்த புருவம், இரு புருவங்களும் சேர்ந்திருக்காது.
இரு புருவங்களுக்கு மத்தியில் ஒரு நரம்பிருக்கும். கோபம் வரும் போது அது எழும்பிக் கொள்ளும்.

♦ அவர்களை முதன்முதலில் காண்போர் மூக்கு நீண்டதாக காண்பர். ஆனால் கவனித்துப் பார்த்தால் அதில் ஒளி வீசிக்கொண்டிருக்கும்.

♦ தாடி அடர்ந்திருக்கும்.கன்னங்கள் மிருதுவாயிருக்கும். வாய் அகன்றிருக்கும். பற்கள் இடைவெளிவிட்டவையாக இருக்கும்.

♦ அவர்களின் கழுத்து வெள்ளியால் செதுக்கப்பட்ட உருவத்தைப் போல அழகாயிருக்கும்.

♦ அவர்களின் அவையங்கள் அனைத்தும் நடுத்தரமானதாகவும் சதைப்பிடிப்புள்ளதாகவும் இருக்கும்

♦ வயிறும் நெஞ்சும் சமமானதாகவும் இருக்கும். நெஞ்சு விரிந்திருக்கும். இரண்டு தோள்புஜங்களுக்கு மத்தியில் இடைவெளி அதிகமாக இருக்கும்.

♦ மூட்டுகள் உறுதிவாய்ந்தவையாக இருக்கும். ஆடைகளை அகற்றும் போது உடல் பிரகாசமாயிருக்கும். நெஞ்சுக்கும் தொப்புளுக்கும் மத்தியில் கோடுகள் போன்ற நீண்ட முடியிருக்கும்.

♦ மார்பிலும், வயிற்றிலும் முடியிருக்காது.முழங்கைகள், தோள்புஜங்கள், நெஞ்சின் மேற்பகுதி ஆகியவற்றில் முடியிருக்கும்.

♦ இரு உள்ளங்கைகளின் மூட்டுகள் நீளமானதாக இருக்கும். உள்ளங்கை விரிந்து இருக்கும். உள்ளங்கையும், பாதமும் சதைபிடிப்புடன் இருக்கும்.

♦கை, கால், விரல்கள் பொருத்தமான அளவிலிருக்கும்.பாதங்கள் சற்று குழிந்திருக்கும். இரு பாதங்களும் சமமாய் இருக்கும். பாதங்கள் மிருதுவாயிருப்பதால் அதன் மீது தண்ணீர் பட்டால் தங்குவதில்லை.

♦ நடக்கும் போது முன்புறம் சாய்ந்து நடப்பார்கள். நடக்கும்போது மேடான இடத்தில் இருந்து பள்ளமான பகுதியில் இறங்குவது போல் அவர்கள் நடையிருக்கும்

♦ யாராவது அழைத்தால் முகத்தை மட்டும் திருப்பாமல் முழுமையாக திரும்புவார்கள். அவர்கள் பார்வை பூமியை பார்த்தே இருக்கும். ஒரு சாதாரணப் பொருளைப் பார்ப்பது போல் பார்ப்பார்கள்.

♦ தன் தோழர்களை முன்னால் செல்லவிட்டு அவர்கள் பின்னால் வருவார்கள். தன்னைச் சந்திப்பவர்களுக்கு அவர்களே ஸலாம் கூறி ஆரம்பிப்பார்கள்

5⃣ ஜாபிர் இப்னு சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்களின் வாய் அகன்றதாக இருக்கும்.
கண்களின் வெண்மையில் செவ்வரி படர்ந்

ிருக்கும்.
குதிங்கால் சதைப் பிடிப்பில்லாததாக இருக்கும்.
(நூல் - ஸூனன் திர்மிதி, அஹமத், முஸ்லீம்)

6⃣ ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது : நிலா ஒளிவீசிக் கொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் சிவப்பு நிற ஆடை அணிந்திருக்கக் கண்டேன்.
நபியவர்கள் சந்திரனை விட அழகானவர்களாக எனக்குத் தோன்றினார்கள்.
(நூல் - ஸூனன் திர்மிதி, தாரமீ)

7⃣ அபுஹூரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் வெள்ளியால் உருவாக்கப் பட்டவர்களைப் போல் வெண்மையாக இருப்பார்கள்.
அவர்களின் முடி முற்றிலும் சுருண்டைவையாகவோ, முற்றிலும் நீண்டவையாகவோ இல்லாமல் நடுத்தரமாக இருக்கும்.
🌾"நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் அழகிய உருவ அமைப்புக்கள் 🌾

1⃣ அனஸ்(ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் நெட்டையாகவோ, குட்டையாகவோ இல்லாமல் நடுத்தர உயரமானவர்களாகவும் அழகிய உடலமைப்புடையவர்களாகவும் இருந்தனர்.
அவர்களின் முடி முற்றிலும் சுருண்டவையாகவோ, முற்றிலும் நீண்டவையாகவோ இருக்கவில்லை.
அவர்கள் கோதுமை நிறமுடையவர்களாக இருந்தனர்.
நடக்கும் போது (முன்புறம்) சாய்ந்து நடப்பார்கள்.
(நூல் - ஸூனன் திர்மிதி)

2⃣ பரா இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது : சிவப்புநிற ஆடையணிந்து, தோள் புஜத்தைத் தொடும் தலைமுடியுடன் அழகுற நபி (ஸல்) அவர்கள் விளங்கியது போல் வேறெவரையும் நான் கண்டதில்லை.
அவர்களின் தலைமுடி தோள்புஜத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும்.
இரண்டு தோள் புஜங்களுக்கு இடைப்பட்ட தொலைவு அதிகமாக இருக்கும். (மார்பு அகன்றிருக்கும்).
அவர்கள் குட்டையாகவோ நெட்டையாகவோ இருக்கவில்லை.
(நூல் - ஸூனன் திர்மிதி, புகாரி, முஸ்லீம், நஸயீ,)

3⃣ அலி (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் நெட்டையாகவோ, குட்டையாகவோ இருக்கவில்லை. இரு உள்ளங்கைகளும், இரு பாதங்களும் சதைபிடிப்புள்ளதாக (உறுதி வாய்ந்ததாக) இருக்கும்.
தலையும், மூட்டுகளும் பெரிதாக இருக்கும். நெஞ்சிலிருந்து தொப்புள் வரை (கோடுகள்) போன்று முடிகளிலிருக்கும். மேடான இடத்திலிருந்து பள்ளமான இடத்திற்கு இறங்கும் போது அடிஎடுத்து வைப்பது போல் அடிஎடுத்து நடப்பார்கள்
(கால்களை தேய்த்துக் கொண்டு நடக்க மாட்டார்கள்)
இவர்களைப் போன்றவரை இதற்கு முன்பும் இதற்கு பின்பும் நான் கண்டதில்லை.
(நூல் - ஸூனன் திர்மிதி)

4⃣ ஹஸன் இப்னு அலி (ரலி) அவர்கள் கூறியதாவது : நான் என் மாமா ஹின்த் இப்னு அபீஹாலா அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் அங்க அடையாளங்களைப் பற்றி வினவினேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பற்றி வர்ணிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.
எனவே அவர்களைப் பற்றி (அறிந்து) மனனம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன்.
அவர்கள் கூறினார்கள்:

♦ நபி (ஸல்) அவர்கள் கண்ணியம் வாய்ந்தவர்களாகவும், பிறரால் மதிக்கப்படுபவர்களாகவும் இருந்தனர்.

♦ நபி (ஸல்) அவர்களின் முகம் பௌர்ணமி இரவின் சந்திரன் போல் பிரகாசிக்கும். நடுத்தரமான உயரமுடையவர்களை விட சற்று கூடுதலாகவும், நெட்டையான மனிதர்களை விட சற்று குறைவானவர்களாகவும் இருந்தனர்.

♦ தலை நடுத்தரத்தை விட சற்று பெரிதாக இருந்தது. அவர்களின் முடி சுருண்டிருந்தது. தலையில் தற்செயலாக வகிடுப
டிந்துவிடுமாயின் அதை அப்படியே விட்டுவிடுவார்கள்.
இல்லையெனில் (வகிடு எடுப்பதை) பிராதனப்படுத்துவதில்லை. முடியை வளரவிட்டுருந்தால் அது காதின் சோனையைத் தாண்டிவிடுவதும் உண்டு.

♦ மேனி ஒளிவீசிக் கொண்டிருக்கும். படர்ந்த நெற்றி, அடர்ந்த புருவம், இரு புருவங்களும் சேர்ந்திருக்காது.
இரு புருவங்களுக்கு மத்தியில் ஒரு நரம்பிருக்கும். கோபம் வரும் போது அது எழும்பிக் கொள்ளும்.

♦ அவர்களை முதன்முதலில் காண்போர் மூக்கு நீண்டதாக காண்பர். ஆனால் கவனித்துப் பார்த்தால் அதில் ஒளி வீசிக்கொண்டிருக்கும்.

♦ தாடி அடர்ந்திருக்கும்.கன்னங்கள் மிருதுவாயிருக்கும். வாய் அகன்றிருக்கும். பற்கள் இடைவெளிவிட்டவையாக இருக்கும்.

♦ அவர்களின் கழுத்து வெள்ளியால் செதுக்கப்பட்ட உருவத்தைப் போல அழகாயிருக்கும்.

♦ அவர்களின் அவையங்கள் அனைத்தும் நடுத்தரமானதாகவும் சதைப்பிடிப்புள்ளதாகவும் இருக்கும்

♦ வயிறும் நெஞ்சும் சமமானதாகவும் இருக்கும். நெஞ்சு விரிந்திருக்கும். இரண்டு தோள்புஜங்களுக்கு மத்தியில் இடைவெளி அதிகமாக இருக்கும்.

♦ மூட்டுகள் உறுதிவாய்ந்தவையாக இருக்கும். ஆடைகளை அகற்றும் போது உடல் பிரகாசமாயிருக்கும். நெஞ்சுக்கும் தொப்புளுக்கும் மத்தியில் கோடுகள் போன்ற நீண்ட முடியிருக்கும்.

♦ மார்பிலும், வயிற்றிலும் முடியிருக்காது.முழங்கைகள், தோள்புஜங்கள், நெஞ்சின் மேற்பகுதி ஆகியவற்றில் முடியிருக்கும்.

♦ இரு உள்ளங்கைகளின் மூட்டுகள் நீளமானதாக இருக்கும். உள்ளங்கை விரிந்து இருக்கும். உள்ளங்கையும், பாதமும் சதைபிடிப்புடன் இருக்கும்.

♦கை, கால், விரல்கள் பொருத்தமான அளவிலிருக்கும்.பாதங்கள் சற்று குழிந்திருக்கும். இரு பாதங்களும் சமமாய் இருக்கும். பாதங்கள் மிருதுவாயிருப்பதால் அதன் மீது தண்ணீர் பட்டால் தங்குவதில்லை.

♦ நடக்கும்
போது முன்புறம் சாய்ந்து நடப்பார்கள். நடக்கும்போது மேடான இடத்தில் இருந்து பள்ளமான பகுதியில் இறங்குவது போல் அவர்கள் நடையிருக்கும்

♦ யாராவது அழைத்தால் முகத்தை மட்டும் திருப்பாமல் முழுமையாக திரும்புவார்கள். அவர்கள் பார்வை பூமியை பார்த்தே இருக்கும். ஒரு சாதாரணப் பொருளைப் பார்ப்பது போல் பார்ப்பார்கள்.

♦ தன் தோழர்களை முன்னால் செல்லவிட்டு அவர்கள் பின்னால் வருவார்கள். தன்னைச் சந்திப்பவர்களுக்கு அவர்களே ஸலாம் கூறி ஆரம்பிப்பார்கள்

5⃣ ஜாபிர் இப்னு சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்களின் வாய் அகன்றதாக இருக்கும்.
கண்களின் வெண்மையில் செவ்வரி படர்ந்

ிருக்கும்.
குதிங்கால் சதைப் பிடிப்பில்லாததாக இருக்கும்.
(நூல் - ஸூனன் திர்மிதி, அஹமத், முஸ்லீம்)

6⃣ ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது : நிலா ஒளிவீசிக் கொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் சிவப்பு நிற ஆடை அணிந்திருக்கக் கண்டேன்.
நபியவர்கள் சந்திரனை விட அழகானவர்களாக எனக்குத் தோன்றினார்கள்.
(நூல் - ஸூனன் திர்மிதி, தாரமீ)

7⃣ அபுஹூரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் வெள்ளியால் உருவாக்கப் பட்டவர்களைப் போல் வெண்மையாக இருப்பார்கள்.
அவர்களின் முடி முற்றிலும் சுருண்டைவையாகவோ, முற்றிலும் நீண்டவையாகவோ இல்லாமல் நடுத்தரமாக இருக்கும்.
தியாகத்தின் விளக்கு !
தியாகத்தின்  செம்மல் !
அல்லாஹ்வின் தோழர் !
நபி இப்ராஹிம் அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்.

இறைவனின் திருப் பொருத்தத்திற்க்காக வாழ்வது தான் சுகங்களில் பெரும் சுகம் .இதை தான் நபி இப்ராஹிம் அலைஹி வஸல்லம் அவர்கள் நிரூபித்து காட்டினார்கள் .

கால வெள்ளத்தால் கரைக்க முடியாத , தியாகத்தின் சின்னமாக இன்றும் வரலாற்றின் பொன்னேடுகளில் அவர் மின்னுகிறார் .

பல வருடங்கள் தவமாய் தவமிருந்து !
பெற்ற பிள்ளையை அறுத்து பலியிடு என இறைக்கட்டளை வந்தபோது மறுக்காமல் ! முன்வந்தவர் .

ஆனால் இத்தனை பெரிய தியாகங்களையெல்லாம் நாம்செய்ய முடியாவிட்டாலும் .

இறைவனின் திருப்பொருத்தத்திற்க்காக .தியாகப் பண்புகளையும்,நற்பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் .

இறைவனுக்காக இனிய வாழ்கையையும்,இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பிய எளிய வாழ்க்கையையும் ,வாழ்வதற்க்கு இந்த தியாகத் திருநாளில் சபதம் ஏற்ப்போம்.
அணைவருக்கும் தியாகப் பெருநாள் நல் வாழ்த்துக்கள் .
ஈத் முபாரக் ...

உலக மக்கள் அணைவருக்கும் தியாகப் பெருநாள் நல் வாழ்த்துகள் .....

Friday, August 7, 2015

ஜல்வத் நாயகம் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் மகள் வழி பேரர் ;

அம்பா நாயகம் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் உடன் பிற்ந்த அக்காள்  நபிஸா ரலியல்லாஹூ அன்ஹா அவர்களின் மகன் 

ஹசன்  அம்பா அவர்கள் ;





 

Tuesday, April 7, 2015

தப்லீக் ஜமாத்தின் வஹாபிய கொள்கைகள் :

1. அல்லாஹுதஆலா பொய் சொல்லுவது சாத்தியம்.
[ ஃபதாவா ரஷீதியா, வால்யூம் 1,பக்கம் 19 ]

2. அல்லாஹுதஆலா தனது படைப்புகள் செய்யும் செயலை முன்னறே அறிந்திருக்க மாட்டான்.படைப்புகள் ஒரு செயலை செய்த பின்னரே அல்லாஹ் அதை அறிகின்றான்.
[ தஃப்சீர் புல்காதுல் ஹைரான்,பக்கம் 157,158]

3. ஷைத்தானும், மலக்குல் மவ்த்தும் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களை விட நிறைய அறிந்துள்ளார்கள்.
[ பராஹீனே காதியா,பக்கம் 51 ,52 ]

4.  நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தனது இறுதி முடிவு என்னவென்று தெரியாது , மேலும் அவர்களுக்கு சுவற்றுக்கு பின்னால் இருப்பது கூட தெரியாது.
[ பராஹீனே காதியா,பக்கம் 51 ]

5. அல்லாஹுதஆலாவால் அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவும்,மறைவான ஞானமும் விலங்குகளுக்கும்,மதழைகளுக்கும்,பைத்தியக்காரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
 [ஹிஃப்ஸுல் ஈமான், பக்கம் 7 ]

6. தொழுகையில் அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிந்தனை வருவது எருமை அல்லது கழுதையின் சிந்தனையில் மூழ்குவதி விட மோசமானது.
[ ஸிராத்தே முஸ்தகீம் ,பக்கம் 86 ]

7. ரஹ்மத்துல் ஆலமீன் என்பது நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட தனித்துவமான பண்பு அல்ல,பிற நல்லடியார்களையும் ரஹ்மத்துல் ஆலமீன் என்று அழைக்கலாம்.
[ ஃபதாவா ரஷீதியா,வால்யூம் 2,பக்கம் 12 ]

8. மார்க்கம் அறியாத பாமர மக்களுக்கு “காத்தமுன் நபீயீன்” என்பது இறுதி நபி என்று அர்த்தம் கொள்வர்.எனினும் விஷயம் அறிந்தவர்களுக்கு இது சரியான விளக்கமன்று. அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னர் ஒரு நபி பிறந்தாலும் அது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இறுதியானவர்கள் என்பதில் எந்த விளைவையும் உண்டாக்காது .
[ தக்தீருன் நாஸ் ,பக்கம் 3,25 ]

9. அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உர்து மொழியை தாருல் உலூம் தேவ்பந்தின் உலமாக்களிடம் இருந்து கற்றார்கள் 
 [ பராஹீனே காதியா,பக்கம் 26 ]

10. நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒரு மூத்த சகோதரரைப் போன்று தான் கண்ணியமளிக்கப்பட வேண்டும் .[ தக்வியத்துல் ஈமான் , பக்கம் 58 ]

11. அல்லாஹ் நாடினால்  நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் போன்று கோடானு கோடி பேர்களை உருவாக்குவான் . [தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 16 ]

12.பெருமானார் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறைந்த பிறகு மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள். 
 [ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 59 ]

13.அனைத்து அன்பியாக்களும்,இறைத்தூதர்களும் பயனற்றவர்கள்.  [தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 29 ]

14.இறைத்தூதர்கள் பொய்யை விட்டு தூய்மையானவர்களாக 
இருக்க வேண்டிய தேவைஇல்லை .
 [ தஸ் பியதுல் அகாயித்,பக்கம் 25]

15.ஒரு நபியை ஒரு மனிதனைப் போல மட்டும் தான் புகழ வேண்டும் ,இன்னும் அதற்கு குறைவாகவே புகழவேண்டும் .
 [தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 35 ]

16.படைப்புகளில் மேலானவர்களான நபிமார்களும் ,கீழான பிற படைப்புகளும் ,எல்லாரும் இல்ம் என்னும் அறிவற்றவர்களாகவும் அறியாமையிலும் இருக்கிறார்கள் . 
[தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 3]

17.படைப்புகளில் மேலானவர்களான நபிமார்களும் ,கீழான பிற படைப்புகளும், அல்லாஹ்வின் திருமுன் ஒரு செருப்பு தைக்கும் செம்மானை விட கீழாகவே உள்ளனர் .
 [ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 14]

18.நபிமார்களை தாகூத் (ஷைத்தான்) என்று அழைக்க அனுமதி உள்ளது .[தப்ஸீர் புல்காதுல் ஹைரான் ,பக்கம் 43 ]

19.ஒரு நபிக்கு தனது உம்மதிடம் உள்ள அந்தஸ்து ஒரு கிராம தலைவரைப் போன்று அல்லது நிலக்கிழார் போன்றது. 
 [ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 61 ]

20.யாருடைய பெயர் முஹம்மது ,அலி என்று உள்ளதோ அவர்களுக்கு எதன் மீதும் அதிகாரம் இல்லை.ஒரு நபியோ அல்லது வலியோ அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது. 
[ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 41 ]

21.நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது நுண்ணறிவை இழந்து விட்டார்கள் .
 [ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 55 ]

22.உம்மத்துகள் தங்களது நபியை அமல்களில் முந்திவிடுவர் .[தக்தீருன்னாஸ் ,பக்கம் 5 ]

23.நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
 அவர்களை ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தில் இருந்து கீழே விழாமல் ஒரு தேவ்பந்த் உலமா காப்பாற்றினார்.
 [புல்காதுள் ஹைரான் ,பக்கம் 8 ]

24.லா இலாஹா இல்லல்லாஹு அஷ்ரப் அலி ரசூலுல்லாஹ் , அல்லாஹும்ம ஸல்லிஅலா செய்யதினா நபியினா அஷ்ரப் அலி என்று கூறுவது ஆகுமானதே ,அவ்வாறு கூறுவதால் எந்த கேடும் இல்லை .
 [ரிஸாலா அல் இம்தாத்,பக்கம் 35 சபர் மாதம் 1336 ஹிஜ்ரி  ]

25. மீலாதுந்நபி கொண்டாடுவது இந்துக்கள் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுவது போன்றது .
 [பதாவா மீலாத் ஷரீப் ,பக்கம் 8 / பராஹீனே காதியா ,பக்கம் 148 ]

26. நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தஜ்ஜாலும் வாழ்வைக் கொண்டு நன்மாரயம் பெற்றவர்கள்.எந்த பண்புகள் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குணநலன்களாக உள்ளதோ  அவை தஜ்ஜாலி டமும்   உள்ளன. [ஆபே ஹயாத் ,பக்கம் 69 ]

27.நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பும் எதுவும் எந்த விளைவையும் ஏற்படுத்தாது .
 [ஆபே ஹயாத் ,பக்கம் 69 ]

28.அல்லாஹ்வின் திருமுன் ,நபிமார்களும் வலிமார்களும் தூசுக்கு சமம் [தக்வீயதுல் ஈமான்,பக்கம் 54 ]

29.நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒரு சகோதரர் என்று அழைப்பது சரியானதே .
 [பராஹீனே காதியா ,பக்கம் 3 ]

30.எந்த முஸ்லிமும் நபிமார்களையும் ,வலிமார்களையும் அல்லாஹ்வின் படைப்புகளாகவும்,அடியாராகவும் ஏற்று பின்னர் அவர்களை வசீலாவாக்கி (இடைப்பொருள்) உதவி கோரி,நேர்ச்சை,காணிக்கை செலுத்தினால்  குப்ரில் அபுஜஹலுக்கு ஒப்பாவார் .
 [தக்வீயதுல் ஈமான்,பக்கம் 7 மற்றும் 27]

31.தரூத் தாஜ் விரும்பத்தக்கதல்ல,இன்னும் அதை ஓதுவதும் கூடாது .[ பழாயிலே தரூத் ஷரீப் ,பக்கம் 73 மற்றும் தஸ்கிரதுர் ரஷீத் பாகம் 2,பக்கம் 117]

32.தேவ்பந்தைச் சார்ந்த ஒரு வலிக்கு ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 
குளிப்பாட்டி ஹஜ்ரத் பாத்திமா ரலிய்யல்லாஹு அன்ஹு அவர்கள் ஆடை போர்த்திவிட்டார்கள் .
[சிராதே முஸ்தகீம் ,பார்சி பக்கம் 164,உர்து பக்கம் 280 ]

33.மீலாத் ஷரீப்,மிஹ்ராஜ் ஷரீப் ,கியார்வீன் ஷரீப்,உர்ஸ் ஷரீப்,கத்தம் ஷரீப் ,சைலும்,பாதிஹா,ஈசாலே சவாப் இவை ஷரியத்திற்கு மாற்றமாகவும்,கெட்ட பித்அத்களாகும்,மேலும் இவை ஹிந்துக்களின் நடைமுறையாகும்.
[பதாவா அஷ்ராபியா,பாகம் 2,பக்கம் 58.பதாவா ரஷீதியா பாகம் 2 பக்கம் 144 மற்றும் 150,பாகம் 3 பக்கம் 93,941  ]      

34.காகம் உண்பது ஆன்மீகரீதியாக நன்மைபயக்கும் செயலாகும்.
 [பதாவா ரஷீதியா பாகம் 2, பக்கம் 1301 ]

35.வலிமார்களை அல்லாஹ்வின் படைப்புகள் என்று நன்கு உணர்ந்த நிலையிலும் விளிப்பது விலக்கப்பட்டுள்ளது .
 [தக்வியதுல் ஈமான் பக்கம் 7 ]

36.ஜனாஸா தொழுகைக்குப்பின் துஆ ஓதுவது கூடாது .
 [பத்வா ஜமீல் அஹ்மத் தான்வி ,ஜாமிஆ அஷ்ரபியா ,லாகூர் ]

37.ஹிந்துக்களின் திபாவளி ,ஹோலி பண்டிகைகளின் போது வழங்கப்படும் பரிசுகளையும்,உணவையும்   முஸ்லிம்கள் வாங்குவது கூடும்.
 [ பதாவா ரஷீதியா ,பாகம் 2,பக்கம் 130 ]

38.காபிர்கள் வட்டி பணம் மூலம் வைத்திருக்கும் குடிநீர் பந்தல்களில் முஸ்லிம்கள் தண்ணீர் குடிப்பது கூடும்.
 [பதாவா ரஷீதியா ,பாகம் 3,பக்கம் 113,114 ]

மூலநூல் ஆதாரங்களை காண இங்கே க்ளிக் செய்யவும்

                                      அஸ்தக்பிருல்லாஹ் !!!
                      லா ஹவ்ல வலா ஹுவத்த இல்லா பில்லாஹ் !!!

யா அல்லாஹ் உன் ஹபீபாகிய எம் உயிரினும் மேலான கண்மணி நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் பொருட்டால் இந்த தேவ்பந்திய வஹாபிய கொள்கைகளை விட்டும் காப்பாயாக !! ஆமீன் !!

தப்லீக் ஜமாத் நிறுவனர், அவர்தம் குருநாதர்கள் மற்றும் தப்லீக் ஜமாத் பற்றி கொடுக்கப்பட்டுள்ள மார்க்க தீர்ப்புகள் :


தீன் பணி செய்கிறோம் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு கபடத் தனமாக தீனோர்களை வழிகெடுக்கும்தப்லீக் ஜமாத்தின் போர்வையை கிழித்தும்,போலி வேஷத்தை கலைத்தும் பல கோணங்களிலிருந்து ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் மறுப்பு பத்வாக்கள் ,கண்டனங்கள் வெளியிட்டு வந்துள்ளனர் .இந்த ஃபத்வாக்கள் கொடுத்தவர்கள் எல்லாம் மிகவும் சாமானியர்கள் அல்ல. இவர்கள் எல்லாம் இஸ்லாத்திற்காக பாடுபட்ட இறைநெசர்கள் என்பது யாவரும் அறிந்ததே .

  அந்த ஆணித்தரமான பத்வாக்களின் தொகுப்பு பின்வருமாறு .

1.  ஹிஜ்ரி 1336ல் பர்ரத் மின் கஸ்வரா என்ற தலைப்பில் அல் ஆலிமுல் அல்லாமா அப்துல் அழீம் ஸித்தீகி காதிரிமீரட் மௌலானா அவர்கள் அஷ்ரஃப் அலி தானவியை(இல்யாஸின் குருவை) “காஃபிர்” என்று ஃபத்வா வெளியிட்டுள்ளார்கள்.

2. மக்கா மதீனாவிலுள்ள 34 மாபெரும் உலமாக்களின் கையொப்பங்கள் சிறப்புரைகளொடு “ஹுஸாமுல் ஹரமைன் அலா மன் ஹரில் குப்றிவல்மைன் “ என்ற தலைப்பில் ஹிஜ்ரி 1324ல் குலாம் அஹமது காதியானி, ரஷீத் அஹமது கங்கோஹி, கலீல் அஹமது அம்பேட்டி,அஷ்ரஃப் அலி தானவி ஆகியொர்கள் காஃபிர்கள் என்று ஃபத்வா வெளிவந்துள்ளது.

3. ஷம்ஷுல் உலமா,குத்புல் அவ்லியா,இமாமுல் ஃபுகஹா முஹம்மது அப்துல்லாஹில் குராஸானி ஜிஷ்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் “அஸ்ஸுயுபுல் பாரிகா அலாரு ஊசில் பாசிகா” என்ற தலைப்பில் இஸ்மாயில் திஹ்லவியை காஃபிர் என்று ஃபத்வா கொடுத்திருக்கிரார்கள்.

   இந்த ஃபத்வாவை மக்கா முகர்ரமா,மதினா முனவ்வராவில் உள்ள சங்கைக்குரிய 12 உலமாக்கள் சரி கண்டு சிறப்புரை வழங்கியுள்ளார்கள்.அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் நான்கு மத்ஹபுகளுக்குரிய  மக்கா முஃப்தியும்,சங்கைமிகு புஹாரி ஷரிஃபின் “அபூர்வ துவா” கோர்வையாளரும்,ஷாதுலியா தரீக்காவைச் சார்ந்தவர்களுமான அல்லாமா ஸெய்யித் அஹ்மத் இப்னு ஜெய்னி தஹ்லானி ஷாதுலி ரஹ்மதுல்லாஹி ஆவார்கள்.

4. கீழக்கரை சங்கைக்குரிய பெரியார் அல் ஆலிமுல் அரூஸ் அல்லாமா ஸெய்யிது முஹம்மது மாப்பிள்ளை லெப்பை ஆலிம் வலியுல்லாஹ் அவர்கள் ‘மஙஆனி’ யில் 177-178 பக்கங்களில் இஸ்மாயில் திஹ்லவியை முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியை பின்பற்றிய வழிகெட்ட மடையன் என்று எழுதியுள்ளர்கள். அதேபோன்று ‘ஹதியா ஷரீபிலும்’ வந்துள்ளது.

5. இந்தியாவின் பல பாகங்களிலுள்ள சங்கைக்குரிய 268 உலமாக்கள் “அஸ்ஸவாரிமுல் ஹிந்தியா” என்ற தலைப்பில் மேற்கூறப்பட்டவர்கள் காஃபிர்கள்,முர்தத்துகள் என்று மார்க்கத் தீர்ப்பு ஹிஜ்ரி 1345ல் வழங்கியுள்ளார்கள்.

6. ஹிஜ்ரி 1372ல் மௌலானா மௌலவி முஹம்மது மஹ்பூப்
அலிகான் லக்னவி அவர்கள் “அல்அதாபூல் பஸ்  அலாரஸி
இல்யாஸ் (இல்யாஸ் தலைக்கு கொடிய வேதனை) என்ற தலைப்பில்
இல்யாஸ் காபிர் என்று பத்வா கொடுத்துள்ளார்கள். இதை இந்தியாவிலுள்ள 45 உலமாக்கள் சரிகண்டு கையொப்பம் இட்டுள்ளனர்.

7. வேலூர் பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் அரபிக் கல்லூரி முன்னாள் முதல்வரும் சென்னை மாநில ஜமாஅத்துல்உலமா சபை நிரந்தர கௌரவ தலைவருமான மௌலானா மௌலவி அல்லாமா முப்தியுல் அஃலம் ஷெய்கு ஆதம் ஹழரத்அவர்களும், மேற்படி கல்லூரி பேராசிரியர்கள் அனைவர்களும்,தேவ்பந்த் தாருல் உலூம் அரபிக் கல்லூரி நாயிபு முப்தி மௌலானா மௌலவி மஸ்ஊத் அஹ்மத் சாஹிப் அவர்களும், லக்னோ ஆலிய்யா நிஜாமிய்யா அரபிக் கல்லூரி முப்தி மௌலானா முஹம்மது அப்துல் காதிர் சாகிப் அவர்களும், தமிழ்நாடு அரசு காஜி மௌலானா மௌலவி முஹம்மது ஹபீபுல்லாஹ் ஹழரத் அவர்களும் பெங்களூர் ஹக்கானிய்யா அரபிக் கல்லூரி முப்தி மௌலானா மௌலவி அபுல்கமால் முகம்மது ஹபீபுல்லா பாகவி,நத்வீ அவர்களும் இல்யாஸ் தப்லீக் ஜமா அத்தை எதிர்த்து 1956ல் கொடுத்த பத்வாக்களின் தொகுப்பு “பதாவா ஆலிய்யா” என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.             
செய்தி: மறுமலர்ச்சி வார இதழ்

8. இந்தூர் சிட்டி மௌலானா மௌலவி முப்தி அபுல் ஜமீல் முஹம்மது ரிள்வானுர் ரஹ்மான் சாகிபு ஹனவி, பாரூகி அவர்கள்,ஜராதீமுல் வஹ்ஹாபிய்யா பில் ஜமா அத்தித் தப்லீகிய்யா என்ற தலைப்பில்    ஒருநூல் 1954ல் தப்லீகை எதிர்த்து வெளியிட்டுள்ளார்கள்.

9. உத்திரபிரதேசம் பாந்தா தாருல் உலூம் அரபிக் கல்லூரி முதல்வர் மௌலானா மௌலவி முப்தி பீர்ஜாதா செய்யித் மள்ஹர் ரப்பானி அவர்கள் “தப்லீக் ஜமாஅத் கியோஹே” என்ற தலைப்பில் 1962ல் இல்யாஸ் தப்லீகை எதிர்த்து நூல் வெளியிட்டுள்ளார்கள்.    

10. பரேலி ஆலி ஜனாப். மௌலானா மௌலவி ஸீபிஷாஹ் அஜீஸ் அஹ்மது சாகிபு அவர்கள் இஸ்மாயில் திஹ்லவி எழுதிய “தக்வியத்துல் ஈமான்” என்ற நூலுக்கு மறுப்பாக “ இஸ்லாஹே தப்வியத்துல் ஈமான்” என்ற நூலை எழுதியுள்ளார்கள்.

11. தமிழ்நாடு அரசு பிரதம காஜி மௌலானா மௌலவி அல்லாமா முப்தி முஹம்மது ஹபீபுல்லாஹ் ஹழரத் அவர்கள்தப்லீக் ஜமாஅத்கீ அஸலியத் என்ற தலைப்பில் இல்யாஸ் தப்லீகை எதிர்த்தும்,அதில் சேரக்கூடாது என்றும் 1970ல் தீர்ப்பளித்துள்ளார்கள்.இந்த ஃபத்வாவின் கடைசிப் பக்கத்தில் தப்லீக் ஜமாத்தை எதிர்த்து ஃபத்வா கொடுத்த இந்தியாவின் முக்கிய நகரங்களின் சங்கையான 21 உலமாக்களின் பெயர்கள் வரையப்பட்டுள்ளது.

12. பீகார் மௌலானா அர்ஷதுல் காதிரி ஹழ்ரத் அவர்கள் தப்லீக் ஜமாத் என்ற தலைப்பில் இல்யாஸ் தப்லீக் ஜமாத்தை எதிர்த்து 1971ல் நூல் வெளியிட்டார்கள்.

13. சமஸ்த கேரள ஜம்யத்துல் உலமா சபை ஃபத்வா கமிட்டியரால் தப்லீக் ஜமாத்தின் சகல நூல்களையும் ஆராய்ந்து  தீர்வு கண்டு இந்த இல்யாஸின் தப்லீக் ஜமாதில் சேரக்கூடாது என்று 1965ல் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.இந்த தீர்மானம் 10-11-1965 “சந்திரிகா” இதழில் வந்துள்ளது.

14. வேலூர் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி,காயல்பட்டணம் மஹ்லரத்துல் காதிரியா அரபிக் கல்லூரி,முன்னாள் முதல்வரும் கண்ணியமிக்க மௌலான மௌலவி முஃப்தி பி.ஏ.முஹம்மது அபூபக்கர் கிப்லா ஹலரத்அவர்கள் 12-8-1971ல் நல்ல விளக்கமாக தப்லீக்கை எதிர்த்து ஃபத்வா கொடுத்துள்ளார்கள். இது முஸ்லீம் முரசு இதழ் 1972,ஜனவரி,பிப்ரவரி,மார்ச் இதழ்களில் வந்துள்ளது.

15. இலங்கை கஹட்டோவிட்டையில் சமாதியுற்றிலங்கும் சங்கைகுரிய மௌலான ஷெய்கு அப்துல்லா பாதிப் ரஹிமஹுல்லாஹு அலஜருல் காஸி என்ற நூல் பக்கம் 176ல் இஸ்மாயில் திஹ்லவி தான் விரும்பியவாரு குராஆனுக்கு தப்பாக அர்த்தம் செய்பவன் என்றும்,முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியை பின்பற்றியவன் என்றும் எழுதியுள்ளார்கள்.

16. ஓரிஸ்ஸாவின் சிங்கம் என புகழப்படும் காதிரீயா தரீகாவின் ஷெய்குமான மதிப்பிற்குறிய ஹாஜி முஃப்தி மௌலானா மௌலவி ஹபிபுர் ரஹ்மா ஹழரத் அவர்கள் ஓர் ஃபத்வாவை இல்யாஸ் தப்லீகை எதிர்த்து உர்துவில் வெளியிட்டிருப்பதோடு,நாடெங்கும் தப்லீகின் முக்மூடியை கிழித்தெறிந்தார்கள்.

17. தேவ்ப்ந்த் கொள்கையுடைய உலமாக்கள் பின்னால் தொழுவது கூடாது என்ற ஃபத்வா ஒன்று பாகிஸ்தான் கராச்சியிலிருந்து வெளிவரும் “டெய்லி முஷாவத்” என்ர தினசரியில் 30-7-79 வெளியிடப்பட்டது.

18. தப்லீக் இயக்க ஸ்தாபகர் மௌலவி இல்யாஸின் சகலரும் அவ்வியக்கத்தை நிறுவுவதில் ஒத்துழைத்து சமீபகாலம் வரை தப்லீக் ஜமாத்தினரால் போற்றப்பட்டு வந்தவருமான மௌலான இஹ்த்திஷாமுல் ஹஸன் காந்தலவி என்பவர் மனம் மாறி அவ்வியக்கத்தின் அந்தரங்கள் பற்றி சில ரகசியங்களை வெளியிட்டு “வழமையல்லாத வழிகெடுக்கும் நடைமுறை” (பித்அத் தேளலாலத்) என்று வர்ணித்து இருப்பதாக தெரிகிறது.  – முஸ்லிம் முரசு,செப்டம்பர் 1971.

19. காயல்பட்டிணம் கண்ணியத்திற்குறிய மௌலானா,மௌலவி அல் ஆலிமுல் ஃபாழில் ஷெய்கு அப்துல் காதிரி நூரிய்யி ஸித்தீகி ஸூஃபி அவர்கள் 1) இள்ஹாருள் ஹக்    2)தப்லீக் என்றால் என்ன        3)தப்லீக் ஜமாத்தை பற்றிய உலமாக்க்ளின் உண்மை ஃபத்வா       4)புலியைக் கண்டு ஓட்டம்        5)அல் முஹன்னதின் அண்டப்புளுகு        6)தப்லீக் ஜமாத்தில் வஹ் ஹாபியத்தின் விஷக்கிருமிகள்             6)சுவர்க்க நகைகளா அல்ல,அது நரக விலங்குகள்       7)தன்னறிவில்லா தக்கபதிலுக்கு தகுந்தவிதமாக தலையில் தட்டு என்று தப்லீக் ஜமாத் பற்றி எதிர்த்து பல நூல்கள் வெளியிட்ட்டுள்ளார்கள்.

20. சிங்கப்பூரில் “அறிவுச்சுடர்” என்ற தமிழேடு தப்லீக் இயக்கத்தின் வஹ் ஹாபியக் கொள்கையைஅம்பலபப்படுத்தியுள்ளது.துருக்கிலிருந்து இஸ்லாமிய நூல்களை வெளிடும் ஒரு நிறுவனம்,தப்லீக் ஜமாத் பற்றியும்,அதன் தலைவர்களையும்,அவரின் குருமார்களையும் “காஃபிர்கள்” என்று ஃபத்வாக்களை மேற்கோள்காட்டி தக்க ஆதாரத்தோடு,வழிகெட்ட கூட்டங்களில் தப்லீக் இயக்கமும் ஒன்று,அதில் சேரக்கூடாது என்று “தெ ரிலிஜீயஸ் ரிஃபார்மஸ் இன் இஸ்லாம்” நூல் ,பக்கம் 206ல் சுட்டிக்காட்டியுள்ளது.

21. ஹக் வ பாதில் கி ஜ்ங்க்” ஆசிரியர் மௌலனா மௌலவி ஹாஃபிழ் காரி அபூநஸர் ஷாஹ் இனாயத் ரஸூல் முஹம்மது உமர் ஸாஹிப் காதிரி ஜிஸ்தி லக்னவி அவர்கள்.

22. அதாபுஸ்ஸதிது” ஆசிரியர் முபாரக்பூர் மௌலானா மௌலவி முஃப்தி ஹாஃபிழ் அப்துல் அஜீஸ் ஸாகிபு கிப்லா அவர்கள்.

23. ரிஸாலா –தப்ஹீமுல் முஃத்ற்” சரிகண்டு கையெழுத்திட்ட 38 பேர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் 1) சென்னைஅல்லாமா முஃப்தி முஹம்மது ஸிப்கத்துல்லாஹ் ஆலிம் அவர்கள் 2) அல்லமா முஃப்தி முஹம்மது இர்தழா அலிகான்(ஆசிரியர்-நபாயிஸ்) அவர்கள்.

24. “ஹக் வ பாதில்கி பஹ்சானா “ ஆசிரியர் முழபர்பூர்- ஹழ்ரத் அல்லாமா முஃப்தி முஹம்மது அப்துல் கலாம் சாஹிபு ஹஸன் காதிரி அவர்கள்.

25. “தப்லீக்-ஏ-தோகா” ஆசிரியர் மௌலனா மௌலவி முஹம்மது மன்ஸூர் அலி கான் காதிரி ரிஸ்வி அவர்கள்.

26. “ஏந்தல் நபி அவர்கள் எச்சரிக்கிறார்கள்” ஆசிரியர் மௌலவி முஹம்மது லுக்மான் அஜீஸி ,மதுரை அவர்கள்.

27. “அத்தங்கீது – அலத்தங்கீது” ஆசிரியர்கள் வேலூர்,பெங்களூர் உலமாப் பெருமக்கள்.

28. “தப்லீக் அசாயித்-அவுர்-உலமாகெ ஃபத்வா” ஆசிரியர் டி.பி.முஹம்மது உதுமான் ரப்பானி நாழிமி அவர்கள்.

29. “அல் ஜபனுத்தானவி அலாகுல்லியத்துல் தானவி” ஆசிரியர் மௌலவி முஃப்தி காரி முஹம்மது அஹ்மது ரிழாகான்.

30. “தப்லீக் ஜமாத்-கி-ஹகீக செஹ்ரா” ஆசிரியர் மௌலவி செய்யது அஸ்மத் பாஷா சாஹிபு.

31. “இல்யாஸி ஜமாத்” ஆசிரியர் கான்பூர் அல்லாமா முஃப்தியுல் அஃழம் ஷாஹ் ரிபாகத் ஹுஸைன் ஆலிம் அவர்கள்.

32. “தப்லீக் ஜமாத்-அஹாதீத்க-ரொஷினிமே” ஆசிரியர் மௌலவி அர்ஷத் காதிரி.

33. “தப்லீக் ஜமாத்-க-பரீப்” ஆசிரியர் அல்லாமா முஃப்தி துராபுல் ஹக் சாஹிபு அவர்கள்.

34. “இம்தியாசுல் ஹக்" ஆசிரியர் லாஹுர் மௌலானா முஃப்தி ராஜ்குலாம் முஹம்ம்து அவர்கள்.

35. “அகீதா உலமாயி தேவ்பந்த்" ஆசிரியர் மௌலானா மௌலவி ஷாஹ் அப்துல் அஜீஸ் முராதாபாத் அவர்கள்.

36. “தப்லீக் ஜமாத்கா ஆயீனா-மௌலானா இல்யாஸ்கா ஆயீனா” ஆசிரியர் மௌலானா மௌலவி முஹம்மது ஹபீபுல்லாஹ் ஆலிம் முஃப்தி பாகவி-நத்வி காதிரி வேலூர் அவர்கள்.

37. “ரத்தே தக்வித்துல் ஈமான்” ஆசிரியர் மௌலானா மௌலவி முஃப்தியல் அஃழம் பத்ருத்தீன் சாகிபு கிபுலா ரிஜ்வி மும்பாய் அவர்கள்.

38. 'ஹிதாயத்துல் அனாம் அலா ஜியாரத்தில் அவ்லியாயே கிராம் '- அல்ஹாஜ் மௌலானா மௌலவி முஹம்மது பாக்கர் சாஹிப் ஆலிம் காதிரி (நாகூர் ஷரீப்) .மேற்கண்ட நூலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 35 உலமாக்கள் சரிபார்த்து ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

இஸ்லாமிய சகோதரர்கள் இல்யாஸி தப்லீக் ஜமாதின் திருட்டுத்தனத்தையும், ஆலிம்கள் என்னும் வேஷத்தையும் தெரிந்து கொள்வதற்கும் இந்த ஆதாரங்கள் போதுமானவையாக இருக்கும் என்று நம்புகிறோம் .

 இன்ஷாஅல்லாஹ். இன்னும் அநேக ஆதாரங்களும்,  நூல்களும் இன்ஷாஅல்லாஹ் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

   நாம் யாவரும் இந்த வழிகெட்ட கூட்டதிலிருந்து தவிர்த்து நேரான வழியில் நடப்பதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக!
புகழனைத்தும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே !

                 ஸலாத்தும் ஸலாமும் எம் உயிரினும் மேலான கண்மணி நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் மீதும்,அவர்தம் உத்தம தோழர்களான ஸஹாபாக்கள் மீதும்,அவர்தம் பரிசுத்த குடும்பத்தினர் மீதும்,தாபயீன்கள்,தபாத் தாபயீன்கள், ஸித்தீக்கீன்கள்,ஷுஹதாக்கள்,வலிமார்கள்,மஷாயிகுமார்கள்,ஸாலீஹீன்கள் மீதும்  என்றென்றும் நிலவட்டுமாக !!!


        பெரும்பான்பையான தமிழக இஸ்லாமியர்கள் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் அகீதா உடையவர்களாகவே இருக்கின்றனர். எனினும் வஹ்ஹாபிய தாக்கம் தமிழகத்தில் மெல்ல நுழைந்தது 1950களில். தப்லீக் ஜமாஅத்தின் வடிவில் ஆரம்பித்து தேவ்பந்தி,ஜமாத்தே இஸ்லாமி,எஸ்.ஐ.எம்,அஹ்லே ஹதீஸ் ,ஜாக்,நஜாத் ,ஸலபி,தௌஹீத் என்னும் பல வடிவங்களில் தமிழக முஸ்லிம்களிடத்தில் தஞ்சம் புகுந்துள்ளது . அல்லாஹ் காப்பாற்றுவானாக !!!

                  இதில் ஏனைய வழிகேடர்களை இனம் கண்ட இஸ்லாமிய சமூகம், தப்லீக் ஜமாத்தின் கோரப் பிடியில் சிக்கியுள்ளது. அவர்கள் தொழுகைக்கு தானே அழைக்கின்றனர் ,அவர்கள் மார்க்கம் தானே சொல்கின்றனர் என்று எண்ணுகின்றனர் . தப்லீக் ஜமாத்தின் வெளிரங்க அமல்களினால் மக்களின் மதி குழம்பியுள்ளது.இந்த வஹ்ஹாபிய கொள்கையைத்தான் இல்யாஸி தப்லீக்வாதிகள் தவ்ஹீது,கலிமா,தொழுகை,கஷ்த்,சில்லா,ஷப்குஜாரி,அமீர்,

கார்க்கூன்,இஜ்திமா,ஜோடு எனும் போலி  லேபிள்களை ஒட்டி ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

           ஆனால் அவர்கள் நோக்கம் என்ன என்பதை தப்லீக் இயக்கத்தின் ஸ்தாபகார் மௌலவி இல்யாசே கூறுகிறார் ,
எனது கருத்துகளை எவரும் விளங்கிக் கொள்ளவில்லை.ஜனங்கள் நினைகிறார்கள் .இது தொழுகைக்கு அழைக்கும் இயக்கம் என்று.நான் சத்தியமாக சொல்கிறேன் .இது ஒரு போதும் தொழுகைக்கு அழைக்கும் இயக்கமல்ல.மாறாக ஒரு புதிய கூட்டத்தை உண்டாக்குவதே இதன் நோக்கம் "                          
                                   [ நூல் : தீனி தஃவத் ,பக்கம் -234 ]

மௌலவி இல்யாஸ் பிறிதொரு இடத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் .
" கலிமாவைச் சொல்லவும்,தொழுகையைச் சரியாகப் பேணச்செய்வதும்  இவ்வியக்கத்தின் தப்லீக் ஜமாத்தின் கருத்தல்ல " 
                             [நூல் : மகாதீபே   இல்யாஸ்,பக்கம் -122]

"கலிமா தொழுகையை பற்றிப் போதிப்பதும்,கற்றுக் கொடுப்பதும் ,நமது முழுத்திட்டத்தில் பாலர் பாடத்திற்கு அலீப் ,பே க்கு ஒப்பானதே "
                            [ நூல் : மல்பூஜாத்தே இல்யாஸ்,பக்கம்- 40]

இனி இவர்களின் முழுத்திட்டத்தை மௌலவி இல்யாஸ் இவ்வாறு கூருகிறார் ,
"ஹஜ்ரத் மௌலானா அஷ்ரப் அலி தானவி அவர்கள் மிகப்பெரிய வேலை செய்திருக்கின்றார்கள் ,எனது மனம் விரும்புகிறது .கல்வி ,ஞானபோதனை அவர்களுடையதாகவும் ,தப்லீக் முறை என்னுடையதாகவும் இருக்கட்டும் .ஏனேனில் இவ்வாறு அவர்களுடைய (அஷ்ரப் அலி தானவியுடைய) போதனை விரிவாகி விடும் ."
                            [நூல்:மல்பூஜாத்தே இல்யாஸ் ,பக்கம் -71,72]

மேலும் இவர்கள் தானவியுடைய வஹ்ஹாபிய கொள்கைகளை வெளிப்படுத்தாது ,மறைமுகமாகவும் ,தந்திரமாகவும் போதிக்கின்றனர் என்பதையும் மௌலவி இல்யாஸ் பின்வருமாறு கூறுகின்றார் .
" பொது மக்களிடம் இது விஷயம் கூறலாகாது .எங்கு அவசியமோ அங்கு நமது இரகசியங்களையும் ,நோக்கங்களையும் விளக்குவது பாதகமில்லை "
                            [ நூல்: மல்பூஜாத்தே இல்யாஸ் ,பக்கம் -72]

                  இதில்,மிகவும் வருந்தத்ததக்க விஷயம் மார்க்கம் கற்ற உலமாக்களும் அவர்களை சுன்னத் ஜமாஅத் என்று நம்பி ஏமாறுவது இன்று வரை தொடர்கிறது.பின்னர் பாமர மக்களின் நிலையை என்ன வென்பது ???
         உலக இன்பங்களுக்காக சோடை போனவர்களை பற்றிய கவலை இல்லை,அவர்கள் அல்லாஹ்வின் கேள்வி கணக்கை எதிர் கொண்டே ஆகவேண்டும். எமது ஆதங்கம் எல்லாம் அவர்களை பற்றிய உண்மை முகம் தெரியாமல் இருப்போரை பற்றியே. 


                             சமகால தமிழக உலமா பெருமக்களில் பெருவாரியானோர் தப்லீக் ஜமாத்தின் உண்மை முகத்தை தற்போது தான் உணரத்துவங்கியுள்ளனர்.  ஆனால் வேதனை என்னவெனில் தப்லீக் ஜமாஅத் வஹ்ஹாபிகள் ,தாருல் உலூம்  தேவ்பந்த் அஹ்லுஸ் சுன்னத் என்ற இரட்டை நிலைப்பாடு உங்களையும் குழப்பி சமுதாய மக்களையும் குழப்பும் செயலாகும் .
உண்மையை அறியாதவர்கள் தான் இஸ்லாமிய கொள்கைகளான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கைகளை ஷிர்க்,குஃப்ர், பித்அத் எனப் பித்ற்றித் திரிகிறார்களென்றால்,மார்க்கம் அறிந்த ஸுன்னத் ஜமாத் உலமாக்கள் பலர் கூட உண்மையைக் கூறாது வாய்மூடி இருப்பது தான் விந்தையாக இருக்கின்றது. பஸாது குழப்பதிற்கு அஞ்சி மௌனமாக இருப்பவர்கள் சுயமாகத் தங்கள் அபிப்பிராயங்களைக் கூறாவிட்டாலும் அக்கூற்றை மறுத்து முன்னொர்கள் கொடுத்திருக்கும் ‘ஃபத்வா’ எனும் மார்க்கத் தீர்ப்பையாகிலும் எடுத்துக் கொண்பிக்கலாமே. அதன் காரணமாக அவர்கள் உண்மையை உணர்ந்து நேரான பாதையில் நடக்க அனுகூலமாயிருக்கும். அவர்களது விஷமப் பிரச்சாரத்தில் கற்றோர்கள் தங்கள் கவனத்தைச் செலுத்தாது கண்மூடித்தனமாயிருப்பது நேர்மையன்று.பேயன் எறியும் கல்லும் அபாயத்தை விளைவிக்குமாகையால் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வாறே விஷமத்தனமான பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தி மெய் இன்னதென மக்களுக்கு எடுத்துரைத்துக் காட்ட வேண்டியது மார்க்கம் அறிந்த ஸுன்னத் ஜமாத் உலமாக்களின் கடமையாகும். 

        அண்ணல் அஃலா  ஹஜ்ரத் ஷம்சுல் உலமா அப்துல் வஹ்ஹாப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழகத்தின் தாய் மதரஸா பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் இன்று தப்லீக் வஹ்ஹாபிகளால்  உடுரூவல் செய்யப்பட்டுள்ள நிலை ஒன்றே தமிழத்தின் இன்றைய குழப்ப நிலையை விளக்க போதுமானது . அல்லாஹ் இந்த தப்லீக் தேவ்பந்திய வஹ்ஹாபிகளை விட்டும் இஸ்லாமியர்களை காப்பாற்றுவனாக !!!

        இதோ தேவ்பந்த் உலமாக்களே தாங்கள் யார் என்று வெளிப்படுத்துகின்றனர் ,

மௌலவி ரஷீத் அஹமத் கங்கோஹி கூறுகிறார் , " முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபை பின்பற்றுவோரை வஹ்ஹாபிகள் என்று அழைக்கப்படும் . அவர்களது கொள்கைகள் மிகவும் சிறந்தது "
[ நூல் - பதாவா ரஷீதியா  ,வால்யூம் 1, பக்கம் 111 ]

தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் கொள்கைகளை விளக்கும் விதமாக மௌலவி மன்சூர் நுஃமானி கூறுகிறார் , " மேலும் நாங்கள் இங்கே தெளிவாக குறிப்பிடுகின்றோம் நாங்கள் தீவிர வஹ்ஹாபிகள் "
[ நூல் - சவானெஹ் மௌலானா முஹம்மத் யூசுப் காந்தலவி,பக்கம் 192 ]

மௌலானா முஹம்மத் ஜக்கரியா காந்தலவி கூறுகிறார் , " மௌலவி சாஹிப் , நானோ உங்களை விட பெரிய வஹ்ஹாபி "
[ நூல் - சவானெஹ் மௌலானா முஹம்மத் யூசுப் காந்தலவி,பக்கம் 192 ]

அஷ்ரப் அலி தானவி கூறுகிறார் , " சகோதரரே, இங்கு வஹ்ஹாபிகள் உள்ளோம். இங்கு பாத்திஹா,நியாஜ் என்று எந்த பொருளையும் கொண்டு வராதீர்கள் "
[ நூல் -அஷ்ரபுஸ் சவானெஹ் ,புத்தகம் 1, பக்கம் 45]  

தேவ்பந்த் தப்லீக் ஜமாத்தின் முன்னோடிகள் வாயிலிருந்தே அவர்கள் யார் என்று விளக்கியபின்னரும், உங்கள் சிந்தையில் தெளிவாகவில்லையாயின் , அல்லாஹ் காப்பாற்றட்டும் !!!

      ஒரு முஸ்லிமான அடியானின் அகீதா(கொள்கைகள்) சீர்கெட்டால் அவனது  ஈமான் முறையற்றதாகிறது, மேலும் ஈமான் சரியாக இல்லை என்றால், அவரது அமல்கள்(இஸ்லாமிய செயல்முறைகள்)  பயனற்றதாகிறது. 
இதை விளக்கமாக கூறுவதென்றால் ,
அகீதா ஆன்மா, ஈமான் உடல், அமல் ஆடை ஆகின்றது.நல்ல வலுவான ஈமான் வேண்டுமென்றால், அகீதா சரியான முறையில் அமைய வேண்டும். இதன் காரணமாகவே இத்தளத்தில் நாம் மேற்கோள்காட்டும் இஸ்லாமிய கொள்கையல்லாதவை, முறையான இஸ்லாமிய கொள்கைகளைக் கொண்டு பதிலளிக்கப்படும் .அதை படித்த பிறகு அப்பாவியான முஸ்லிம்கள் அத்தகைய வழிகெட்ட கொள்கைகளை விட்டும் தவ்பா செய்து ,அதை விட்டும் விலகி மன உறுதியோடு நேரான கொள்கையோடு நடக்க வேண்டும்.
வழிகேட்ட கொள்கைகள் குஃப்ருக்கு வழிவகுக்கிறது,அதேசமயம் சரியான அகீதா ஈமானை வலிமைபடுத்துகிறது.  


       இதோ,உங்கள் முன் தப்லீக் ஜமாஅத் பற்றிய எல்லா ஆதாரங்களும் எடுத்து வைக்கபடும்.குரோதமான கண் கொண்டல்லாமல் நீதமான நன்னோக்குடன் இதை வாசியுங்கள்,நீங்களும் பயன் பெற்று மற்றும் நம் சகோதரர்களும் பயன்பெற செய்யுங்கள்.அதன்பின் தப்லீக் ஜமாஅத் சுன்னத் ஜமாஅத் இல்லை என்பது அல்லாஹ்  நாடினால் உங்கள் சிந்தையில் தெளிவாகும்.


   "நேரான வழி இன்னதென்று தமக்கு தெளிவான பின்பும்,யார் (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து விசுவாசிகளின் வழியல்லாதவற்றில் செல்கின்றானோ,அவனை நாம் அவன் செல்லலும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு பின்னர் அவனை நரகத்தில் சேர்த்து விடுவோம் .அது செல்லும் இடங்களில் மிகக் கெட்டதாகும் . "                அல் குரான் :சூரா 4,வசனம்-115.
     
பின்குறிப்பு : 
         இதில் உள்ள பெருவாரியான பதிவுகள் யாவும் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தின் சத்திய சீலர்களான சங்கையான உலமாப் பெருமக்களின் நூல்களில் இருந்தும் ,இணையத்திலும் இருந்தும் எடுத்து கொடுக்கப்பட்டுள்ளது . 

இதன் நோக்கம் தேவ்பந்தி தப்லீக்  ஜமாஅத் பற்றிய அனைத்து வஹாபிய ஆதாரங்களையும் ஒருசேர ஓரிடத்தில் பதிவு செய்வதே அன்றி வேறு எந்த சுயவிளம்பரம் தேடும் எண்ணமும் இல்லை . அல்லாஹ் ஹுதஆலா எல்லாம் அறிந்தவன் !!!

இந்த பதிவில் ஏதேனும் எழுத்துப் பிழைகளோ அல்லது மொழிபெயர்ப்பு பிழைகளோ இருந்தால் வாசகர்களும் , சங்கைக்குரிய உலமாப் பெருமக்களும் சுட்டிக் காட்ட வேண்டுகின்றோம் .அவ்வண்ணமே திருத்தம் செய்ய கடமைப்பட்டுள்ளோம் .

எல்லா நன்மையும் அல்லாஹு தஆலாவின் புறமிருந்து வருகின்றன ,
பிழைகள் அனைத்தும் இந்த சிறியோனின் விளைவுகளால் ஏற்படுகின்றன .


அந்த வல்லோன் எல்லா வாசகர்களையும் ஆசிர்வதித்து ,உங்களையும்  நம்மையும் அவன் புறமும் அவனின் ஹபீப் கண்மணி நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் புறமும் நெருங்கச் செய்வானாக . ஆமீன் .

வல்ல ரஹ்மான் இந்த சிறிய முயற்சியை அவன் ஹபீபாகிய எம் உயிரினும் மேலான கண்மணி நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் பொருட்டால் ஏற்றுக்கொள்வானாக .
யா அல்லாஹ் ! உண்மையை உண்மை என்று நாங்கள் உணர்ந்து அவ்வுண்மையை நாங்கள் பின்பற்றி நடக்கும்படி உணர்த்தி நேர்வழி காட்டியருள் !

பொய்யை பொய் என நாங்கள் உணர்ந்து அப்பொய்யை விட்டு அகன்று நடக்கும்படியாக விளக்கப்படுத்தி நேர்வழி காட்டியருள் !
ஆமீன் !!!